நித்தம் ஒரு வானம் ரேட்டிங் :- 3.25. / 5.

நடிகர் நடிகைகள் :- அசோக் செல்வன், ஜீவா, ரிதுவர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர், சுஷிவதா, காளிவெங்கட் , மாத்தேவ் வர்கேஷ், அபிராமி, அழகம் பெருமாள், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ரா.கார்த்திக்.

ஒளிப்பதிவு :- விது அய்யன்னா.

படத்தொகுப்பு :- அந்தோணி.

இசை :- கோபி சுந்தர் – தரன் குமார்.

தயாரிப்பு நிறுவனம் :- ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மென்ட் & வயாகாம்18 ஸ்டுடியோஸ்

ரேட்டிங் :- 3.25. / 5.

அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் தான் எழுதிய ஒரு அழகான காதல் கவிதையை அப்படியே திரைப்படமாக்கி இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.

நித்தம் ஒரு வானம் திரைப்படம் அந்த அளவுக்கு கவித்துமாகவும் கலர்ஃபுல்லாகவும் இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் தலைப்பை எதிர்பார்க்கும் போது நல்ல ஒரு காதல் கதை என்றுதான் நாம் நினைப்போம்.

ஆனால் காதல விடவும் தனி மனிதனின் தனக்கு வாழ்க்கையில் தனக்கு நடக்கும் துன்பங்களுக்கு எப்படி எல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என பாடம் எடுக்கும் ஒரு திரைப்படமாக அமைந்துள்ளது நித்தம் ஒரு வானம்.

சென்னையில் தனது தாய் தந்தையுடன் வாழ்ந்து வரும் கதாநாயகன் அசோக் செல்வன்

சிறு வயதில் இருந்தே தான் உண்டு, தன் வேலையுண்டு என்று யாருடனும் நெருங்கி பழகாமல் 100 சதவீதம் பர்ஃபெக்ட்டான நபராக இருந்து வருகிறார்.

சிறு வயதிலிருந்து அவர் படிக்கும் ஒவ்வொரு கதை புத்தகத்தில் வரும் கதாப்பாத்திரங்களை தான் என்று நினைத்துக் கொள்வார்.

தனக்கு தனது திருமணத்திற்கு நிச்சயப்படும் பெண்ணை அதிகம் விரும்புகிறார் கதாநாயகன் அசோக் செல்வன்

தனக்கு மனைவியாக போகும் பெண்ணிற்காக நேரத்தை அதிகம் செலவு செய்கிறார்.

கதாநாயகன் அசோக் செல்வனின் திருமணத்திற்கு முந்தைய நாள் தான் காதலித்த நபர் குறித்து அசோக் செல்வனிடம் கூற அவரும் அதுப்பற்றி தெரிந்துக் கொள்ள அவசியம் இல்லாமல் கடந்து செல்கிறார்.

பின்னர் வாழ்க்கை குறித்து அட்வைஸ் செய்ய திருமணத்திற்கு முந்தைய நாள் தான் விரும்பிய காதலனுடன் கதாநாயகன் அசோக் செல்வனுக்கு நிச்சயித்த பெண் சென்றுவிடுகிறார்.

தன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தனது காதலுடன் சென்று விட்டதால் நடக்கவிருந்த திருமணம் தடைப்பட்டு விடுகிறது.

திருமணம் தடைபட்டதால் மன அழுத்தத்தில் பாதிக்கப்படும் கதாநாயகன் அசோக் செல்வன் திருமணம் தடைப்பட்ட நிகழ்வில் இருந்து மீண்டு வர மிகவும் சிரமப்படுகிறார்.

அதன் பிறகு கதாநாயகன் அசோக் செல்வனின் குடும்ப டாக்டரிடம் (அபிராமி) சென்று திருமணம் தடைபட்ட நிகழ்ச்சியை டாக்டரிடம் சொல்ல, அவரும் இதிலிருந்து மீண்டு வருவதற்கு தான் எழுதிய இரண்டு சிறுகதை எழுதி வைத்திருந்த டைரியை கதாநாயகன் அசோக் செல்வனிடம் கொடுத்து படிக்க சொல்கிறார்.

கதாநாயகன் அசோக் செல்வனும் டாக்டர் கொடுத்த டைரியை படிக்க அந்த சிறுகதையில் நடக்கும் இருவேறு சம்பவங்களில் வரும் கதாநாயகனாக தன்னை கற்பனை செய்துக் கொள்கிறார்.

அந்த இரு காதல் கதையின் இறுதியில் நடந்தது என்னவென்று தெரிவதற்குள் அந்த புத்தகத்தில் இருக்கும் கடைசி பக்கங்கள் இல்லாமல் குழப்பத்தில் மாட்டி கொள்கிறார் கதாநாயகன் அசோக் செல்வன்.

அந்த புத்தகத்தில் இருக்கும் கடைசி பக்கங்கள் காணவில்லை என
அந்த டாக்டரிடம் முறையிட அவரும் அந்த சம்பவங்கள் உண்மை என்றும் அவர்களை தேடிச் சென்றால் அந்த கதைக்கான விடையும் கிடைக்கும் என கூறுகிறார்.

கதாநாயகன் அசோக் செல்வன் அந்த கதையில் உள்ள உண்மையான கதாபாத்திரங்களை தேடி செல்கிறார்.

அந்த கதைகளில் இறுதியில் என்ன நடந்தது? அந்த டைரியில் இருந்த இரண்டு கதைகளின் கதாபாத்திரங்களை கதாநாயகன் அசோக் செல்வன் சந்தித்தாரா? சந்திக்கவில்லையா?

இறுதியில் வாழ்கையை அவர் எப்படி புரிந்துக் கொள்கிறார்? என்பதுதான் இந்த நித்தம் ஒரு பானம் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த நித்தம் ஒரு வானம் திரைப்படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் எடுத்திருக்கிறார்.

தான் நடிக்கும் திரைப்படங்களில் வித்யாசனமான கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அசோக் செல்வனின் நடிப்பிற்க்கு இந்த திரைப்படத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது.

மூன்று விதமான வெவ்வேறு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் அசோக் செல்வன் தனக்கான நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

கொங்கு தமிழ் பேசும் கதாப்பாத்திரத்தில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடம் இருந்து கைத்தட்டல் வாங்குகிறார்.

காவல்துறை அதிகாரி கதாபாத்திரமும் மிடுகாகவும் மிக அழகாகவும் நடித்திருக்கிறார்.

இந்த நித்தம் ஒரு வானம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

கதாநாயகிகளாக வரும் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் மூவரும் அவர்களுடைய பணியை மிகவும் சிறப்பாக செய்துள்ளார்கள்.

கதாநாயகி ரிது வர்மா மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

மற்றொரு கதாநாயகியாக ஷிவாத்மிகா ராஜசேகர் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கதாநாயகி அபர்ணா பாலமுரளியின் கதாப்பாத்திரமும் அவரின் இயல்பான நடிப்பும் திரைப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

இந்தத் திரைப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் ஜீவா அருமையான நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்

பல வருடங்களுக்குப் பிறகு அபிராமி இந்த திரைப்படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

காளி வெங்கட், அழகர் பெருமாள் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் அவரவர் வேலையை மிகவும் அருமையாக செய்திருக்கிறார்கள்

இசையமைப்பாளர் கோபி சுந்தர் இடம்பெறும் ஒரு சில பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

ஒளிப்பதிவாளர் விது அய்யன்னாவின் ஒளிப்பதிவு அந்த இடங்களுக்கு பார்வையாளர்களை செல்ல வைத்திருக்கிறது.

மிக அருமையான ஒளிப்பதிவு இந்த திரைப்படத்தில் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா.

அந்தோணியின் படத்தொகுப்பு மூன்று கதைகளையும் ஒன்றிணைத்து மிக அருமையாக கொடுத்திருக்கிறார்.

இருவேறு கதையை எடுத்துக் கொண்டு அதனுடன் பயணிக்கும் கதாநாயகன் என்ற மையக்கருவை கொண்டு திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ரா.கார்த்திக்.

கதையின் நீரோட்டம் ரசிக்கும்படி இருந்தாலும் திரைக்கதை சுவாரசியத்தை கொடுக்கவில்லை. திரைக்கதையில் இயக்குனர் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் நித்தம் ஒரு வானம் திரைப்படம் அருமையான திரைப்படமாக அமைந்துள்ளது..