மன்மத லீலை திரை விமர்சனம் ரேட்டிங் 3.25 / 5

நடிகர் நடிகைகள் – அசோக் செல்வன், சந்திரமௌலி, சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்ம்ருதி வெங்கட், பிரேம்ஜி அமரன், ஜெயபிரகாஷ், கருணாகரன் மற்றும் பலர்.

இயக்கம் – வெங்கட் பிரபு.

ஒளிப்பதிவு – தமிழழகன்.

படத்தொகுப்பு – வெங்கட் ராஜன்.

இசை – பிரேம்ஜி அமரன்.

தயாரிப்பு – ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட்.

ரேட்டிங் – 3.25 /5

இந்த ‘மன்மத லீலை’யில் திரைப்படத்தின் கதாநாயகனுக்கு 2010ஆம் ஆண்டில் நடக்கும் ஒரு சம்பவம், 2020ஆம் ஆண்டில் நடக்கும் ஒரு சம்பவம் என இரண்டடையும் ஒன்றாக்கி அடுத்தடுத்த காட்சிகளாக திரைக்கதையில் சொல்லியிருக்கிறார்கள்.

2010ல் பல பெண் தோழிகளுடன் பழக்கம் உள்ளவர் கதாநாயகன் அசோக் செல்வன்.

2010ல் ஆர்குட் மூலம் தனக்கு அறிமுகமாகும் சம்யுக்தா ஹெக்டேவுடன் பழகுகிறார் கதாநாயகன் அசோக் செல்வன்.

வீடியோ மூலம் பேசி வரும் கதாநாயகன் அசோக் செல்வன், ஒரு நாள் நேரில் சந்திக்க ஆசைப்படுகிறார்.

அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சம்யுக்தாவை சந்திக்கிறார் கதாநாயகன் அசோக்செல்வன்.

அப்போது இருவரும் மது போதையில் தவறு செய்துவிடுகிறார்கள்.

விடியும் நேரத்தில் வீட்டிற்கு சம்யுக்தாவின் அப்பா வந்துவிடுகிறார்.

அடுத்து, 2020ல் மனைவி ஸ்மிருதி வெங்கட் மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார் அசோக் செல்வன்.

ஒரு நாள் ஸ்மிருதி வெங்கட் குழந்தையுடன் வெளியில் சென்றவுடன், தற்செயலாக வீட்டிற்கு வரும் ரியா சுமனுடன் இணைந்து தவறு செய்து விடுகிறார்.

மறுநாள் காலை ஸ்மிருதி வெங்கட் வீட்டிற்கு வந்துவிடுகிறார்.

2010ல் சம்யுக்தா ஹெக்டேவின் வீட்டில் இருந்து அசோக் செல்வன் எப்படி தப்பித்தார்? 2020ல் தன் வீட்டில் இருந்து ரியா சுமனை எப்படி வெளியேற்றினார்? என்பதுதான் மன்மத லீலை
திரைப்படத்தின் மீதிக்கதை.

திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன், நடித்துள்ளார்.

காதல், பாசம், ரொமான்ஸ், பரிதவிப்பு, என நடிப்பில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.

முதல் பாதியில் ரொமான்ஸ், இரண்டாம் பாதியில் காமெடி, நக்கல், ஆக்‌ஷன் என்று ரசிக்க வைத்திருக்கிறார்.

பெண் பித்தனாக கதாநாயகன் அசோக் செல்வன். அப்பாவித் தோற்றத்தில் இருப்பவர்கள்தான் இப்படி இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

அது போலவே திரைப்படம் முழுவதும் நடித்து நடந்து கொள்கிறார் கதாநாயகன் அசோக் செல்வன்.

கதாநாயகி சம்யுக்தா ஹெக்டே வீட்டில் சிக்கிக்கொண்டு தவிக்கும் காட்சியில் கைத்தட்டல் பெற்றிருக்கிறார்.

கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே மற்றும் ரியா சுமன் இருவரும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள்.

அழகாக வந்து அளவான நடிப்பை ஸ்மிருதி வெங்கட் கொடுத்திருக்கிறார்.

குறிப்பாக சம்யுக்தாவிடம் அவர் பேசும் காட்சிகள் தியேட்டர்களில் ஆர்ப்பரிக்க வைக்கிறது.

Read Also  சிவகுமாரின் சபதம் திரை விமர்சனம். ரேட்டிங் –1.75 /5

ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் ஆகியோரில் ரியா தான் முக்கியத்துவத்துடன் முந்திக் கொள்கிறார்.

பிரேம்ஜி இசையில் பாடல்கள் இல்லை என்றாலும் பின்னணி இசையில் கூட கொஞ்சம் கிளுகிளுப்பூட்டியிருக்கிறார்

தமிழ் அழகனின் ஒளிப்பதிவும் திரைப்படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

இரண்டு கால கட்டத்திற்கு ஏற்றாற்போல் ஒளிப்பதிவு செய்து கவனிக்க வைத்திருக்கிறார்.

வீட்டுக்குள்ளேயே படமாக்கப்பட்ட திரைப்படம் என்றாலும் சரியான லைட்டிங்கால் ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தமிழ் அமுதன்.

திரைக்கதைக்கேற்றபடி திரைப்படத்தைக் குழப்பமில்லாமல் தொகுத்திருக்கிறார் எடிட்டர் வெங்கட் ராஜன்.

இயக்குனர் வெங்கட் பிரபு, இந்த திரைப்படத்திற்கு மன்மத லீலை என்று பெயர் வைத்திருந்தாலும், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல், அதிக கவர்ச்சி காட்சிகள் இல்லாமல் கதையை நகர்த்தி இருப்பது மிக பெரிய சிறப்பு.

இரு வேறு காலகட்டங்களுக்கு பயணிக்கும் கதையை புரியும்படி திரைக்கதை அமைத்த இயக்குனர் வெங்கட் பிரபுக்கு பாராட்டுகள்.

இரண்டாம் பாதியில் இருந்த சுவாரஸ்யம் முதல் பாதியிலும் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

மொத்தத்தில் ‘மன்மத லீலை’ திரைப்படத்தில் லீலைகள் ரசிக்கலாம்.