லவ் டுடே திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.5 / 5.

நடிகர் நடிகைகள் :- பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ், யோகி பாபு, ராதிகா சரத்குமார், ரவீனா ரவி, பாரத், ஆதித்ய கதிர், ஆஜித் காலிக், அக்ஷயா உதயகுமார், விஜய் வரதராஜ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பிரதீப் ரங்கநாதன்.

ஒளிப்பதிவு :- தினேஷ் புருஷோத்தமன்.

படத்தொகுப்பு :- பிரதீப் இ.ராகவ்.

இசை :- யுவன் சங்கர் ராஜா.

தயாரிப்பு :- ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட்.

ரேட்டிங் :- 3.5 / 5.

தமிழ் திரைப்பட உலகில் நடிகர் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் அறிமுகமானார்.

நடிகர் ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் தமிழ் திரைப்பட உலகை தன்து பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.

அவருடைய அடுத்த திரைப்படமான லவ் டுடே என்ற திரைப்படத்தை அவரே எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

இயக்குனர் நடிகர் டி. ராஜேந்தர், மற்றும் ஹிப் ஹாப் தமிழா என இவர்களது வரிசையில் இணைந்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன் பாடல்கள் முதற்கொண்டு இவரே எழுதியுள்ளார்.

லவ் டுடே திரைப்படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து திரைப்படத்தின் மீதான மிகப் பெரிய எதிர்பார்த்து ரசிகர்களிடம் இருந்தது.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் பிராமண பெண்ணான கதாநாயகி இவனா இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வருகிறார்கள்.

இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக தெரிந்தும், புரிந்தும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நேரத்தில் இவர்கள் காதல் விஷயம் கதாநாயகி இவானாவின் தந்தை சத்யராஜ் தெரிய வர அவர் இவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்ட ஒரு கண்டிஷன் போடுகிறார்.

ஒரு நாள் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதனை அழைத்து, கதாநாயகி இவானாவும் நீயும் ஒருநாள் இருவரின் செல்போனை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கண்டிஷன் போடுகிறார்.

முதலில் இருவரும் தயங்கினாலும், வேறு வழியே இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய செல்போன்களை மாற்றிக்கொள்கிறார்கள்.

கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் பின்னர், கதாநாயகி இவானாவின் செல்போனை மாற்றிக் கொள்கிறார்.

கதாநாயகி இவானா செல்போனில் இருக்கும் மெசேஜ்களை படிக்கும் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் அதிர்ச்சி அடைகிறார்.

அதேபோல், பிரதீப் ரங்கநாதனின் செல்போனில் இருக்கும் பதிவுகளை பார்த்து கதாநாயகி இவானாவும் அதிர்ச்சி அடைகிறார்.

இதனால் இருவருக்கும் சண்டை, பிரச்சனைகள் ஏற்படுகிறது.

கதாநாயகன் பிரதீப் ரங்கநாதனின், கதாநாயகி இவானா இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? இருவருக்குள் என்னென்ன பிரச்சனைகள் வந்தது? என்பதுதான் இநத ல்வ டுடே திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ல்வ டுடே திரைப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், நடித்திருக்கிறார்.

உத்தமன் பிரதீப் கதாபாத்திரத்தில் மிக திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

காதல், பாசம், சென்டிமென்ட் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்.

கதாநாயகி இவானாவின் மெசேஜ்களை பார்த்து கேள்வி கேட்கும் போது, ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்குகிறார்.

இந்த லவ் டுடே திரைப்படத்தில இவானா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் இவானா சூப்பரான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

குறிப்பாக ஓட்டல் மற்றும் கிளைமாக்ஸ் காட்சியில் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கதாநாயகி இவானாவின் தந்தையாக நடித்திருக்கும் சத்யராஜ் தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி உள்ளார்.

கதாநாயகன் பிரதீப் ரங்கநாதனின் தாயாக நடித்து இருக்கும் ராதிகா, தற்போது இளம் தலைமுறையினரின் தாயாக இருக்கிறார்.

யோகிபாபு நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

யோகி பாபு இந்த லவ் டுடே திரைப்படத்தில் மிகவும் அருமையாக நடித்துள்ளார்

இவர் காமெடி பண்ணாமல் இதே போல் கதாபாத்திரங்கள் நடித்தால் அருமையாக இருக்கும்.

யோகி பாபுவை திருமணம் செய்து கொள்ளும் கதாபாத்திரத்தில் வரும் ரவினா ரவியின் நடிப்பு அருமை.

கதாநாயகன் பிரதீப் ரங்கநாதனின் நண்பனாக நடித்திருக்கும் ஆதித்யா கதிர் மிக அருமையாக நடித்துள்ளார்.

இந்த லவ் டுடே திரைப்படம் ஆதித்யா கதிருக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை கொடுக்கும்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பராக அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் இவன் சங்கர் ராஜா பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார்.

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.

பிரதீப் இ.ராகவ் படத்தொகுப்பு கதைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.

தற்போது இருக்கும் இளம் தலைமுறையினரின் காதலை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

கோமாளி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த லவ் டுடே திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

இந்தத் திரைப்படத்தில கதை திரைக்கதை அருமையாக அமைந்துள்ளது

மொத்தத்தில் ‘லவ் டுடே’  இன்றைய காலகட்டத்திற்கான திரைப்படம்  கொண்டாடலாம்.