*ஒஹோ எந்தன் பேபி” திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ருத்ரா, விஷ்ணு விஷால், மிதிலா பால்கர், அஞ்சு குரியன், மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கிருஷ்ணகுமார் ராமகுமார்.

ஒளிப்பதிவாளர் :- ஹரிஷ் கண்ணன்.

படத்தொகுப்பாளர் :- ஆர்.சி. பிரணவ்.

இசையமைப்பாளர் :- ஜென் மார்ட்டின்.

தயாரிப்பு நிறுவனம் :- ரோமியோ பிக்சர்ஸ், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்.

தயாரிப்பாளர்கள் :- ராகுல்  விஷ்ணு விஷால், வி.துரை  ஜாவித்.

ரேட்டிங் :- 3.75/5.

தமிழ் திரைப்பட உலகில் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் கிருஷ்ணகுமார் ராமகுமார் “ஓஹோ எந்தன் பேபி* (Oho Endhan Baby) திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா இந்த “ஓஹோ எந்தன் பேபி” திரைப்படத்தில் புதுமுக கதாநாயகனாக  அறிமுகமாகியுள்ளார்.

மேலும் நடிகர் விஷ்ணு விஷாலும் ஒரு சின்ன கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

தமிழ் திரைப்பட உலகில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளி வந்திருக்கும் மிகவும் நேர்த்தியான ஒரு காதல் கதை தான் இந்த ஓ எந்தன் பேபி திரைப்படம்.

தமிழ்த் திரைப்பட உலகில் இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் கதாநாயகன் ருத்ரா திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நடிகர் விஷ்ணு விஷாலிடம் இரண்டு கதைகளை  கூறுகிறார்.

கதாநாயகன் ருத்ரா நடிகர் விஷ்ணு விஷாலிடம் கூறிய இரண்டு கதையும் அவருக்கு பிடிக்காமல் போக, ஏதாவது நல்ல ஒரு காதல் கதை இருந்தால் கூறுங்கள் நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொல்கிறார்.

இந்த நிலையில் இரண்டு கதையும் வேண்டாம் என்று கூறியவுடன் மனதளவில் சோகமாக வெளியே வரும் கதாநாயகன் ருத்ரா உடனே தன்னுடைய சொந்த காதல் கதையை நடிகர் விஷ்ணு விஷாலிடம் கூறுகிறார்

கதாநாயகன் ருத்ரா கூறிய காதல் கதை நடிகர் விஷ்ணு விஷாலுக்கு மனதளவில் பிடித்து போகவே இந்த காதல் கதையை திரைப்படமாக  உருவாக்கினால் நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொல்கிறார்.

ஆனால் கதாநாயகன் ருத்ரா கூறிய அந்தக் காதல் கதையில் உள்ள ஒரு பிரச்சனை இருக்க அந்தப் பிரச்சனையை சரி செய்து அவருடைய காதல் கதையை திரைப்படமாக  உருவாக்கினாரா? திரைப்படமாக உருவாக்கவில்லையா?

அதனை கதாநாயகன் ருத்ரா அந்தப் பிரச்சினையை சரி  செய்தாரா? சரி செய்யவில்லையா?

இறுதியில் கதாநாயகன் ருத்ராவின் இயக்குனர் கனவு நிறைவேறியதா? நிறைவேறவில்லையா?  என்பதுதான் இந்த “ஓஹோ எந்தன் பேபி” (Oho Endhan Baby) திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த “ஓஹோ எந்தன் பேபி” திரைப்படத்தில் புதுமுக கதாநாயகனாக நடிகர் ருத்ரா நடித்திருக்கிறார்.

அறிமுக கதாநாயகனாக நடித்திருக்கும் ருத்ரா எமோஷனல் காதல் ரொமான்ஸ் காட்சிகள்  மட்டுமல்லாமல் அனைத்து காட்சிகளிலும் சிரமப்படாமல் மிகவும் அசால்டாக நல்ல ஒரு அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

தமிழ் திரைப்பட உலகிற்கு  நல்ல ஒரு அருமையான புதுவரவு ருத்ராவிற்கு தமிழ் திரைப்பட உலகில் மிகப் பெரிய எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்.

இந்த “ஓஹோ எந்தன் பேபி” திரைப்படத்தில் கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்திருக்கிறார்.

மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மிதிலா பால்கர் எமோஷனல் காட்சிகளிலும், வசனங்களிலும் நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

ஓஹோ எந்தன் பேபி திரைப்படத்தில் ஒரு நடிகராகவே  நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.

அவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

இயக்குநர் மிஷ்கின் ஒரு சில காட்சிகளே வந்தாலும் அந்த காட்சிகள் முழுவதையும் அவருக்கு என்று தனி விசில் சத்தங்கள் பறக்க அந்த விசில் சத்தத்தை தன் வசப்படுத்துகிறார்.

கதாநாயகனின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிர்மல் பிள்ளை, சித்தப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வரும் கருணாகரன் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

இன்றைய தலைமுறை காதலர்களுக்குள் நடக்கும் ஈகோ சண்டை மற்றும் புரிதல் இல்லாமல் ஒரு காதல் உறவு எப்படி எப்படி எல்லாம் கலைந்து சிதைந்து போகிறது   என்பதை நல்ல ஒரு கதையை மிக அருமையான திரைக்கதை மூலம் மிகச் சிறப்பான திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கிருஷ்ணகுமார் ராமகுமார்.

மொத்தத்தில், இந்த “ஓஹோ எந்தன் பேபி” இன்றைய ரசிகர்கள் மற்றும் இளைய தலைமுறையினருக்கு ஏற்ற சிறந்த ஒரு காதல் திரைப்படம்

error: Content is protected !!