மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரை விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர் ஷகிலா, பவர்ஸ்டார், பாத்திமா பாபு, செஃப் தாமு, ஸ்ரீமன், கிரண் ரத்தோர், ஆர்த்தி கணேஷ்கர், கணேஷ்கர், ரவிகாந்த், அனுமோகன், வாசுகி, ஸ்வேதா பாரதி, ஸசௌமியா ஜெயராம், சார்மிளா, காயத்ரி ரெமா,  நாஞ்சில் விஜயன், டி பாலசுப்ரமணி, மகேந்திர குமார் நஹர், பாலாம்பிகா, கும்தாஜ், தங்கம், லட்சுமி, சாய் சக்தி, ஓட்டேரி சிவா, மாஸ்டர் ஹிருத்திக் பாரதி, மாஸ்டர் ஸ்ரீனிக், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- வனிதா விஜயகுமார்.

ஒளிப்பதிவாளர் :- டி. ராஜபாண்டி – விஷ்ணு ராமகிருஷ்ணன் – டி.ஜி. கபில்.

படத்தொகுப்பாளர் :- பாலா குரு.

இசையமைப்பாளர் :-  ஸ்ரீகாந்த் தேவா.

தயாரிப்பு நிறுவனம் :- வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- ஜோவிகா விஜயகுமார்.

ரேட்டிங் :- 1.75/5.

கதாநாயகன் ராபர்ட்  கதாநாயகி வனிதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கதாநாயகி வனிதாவிற்க்கு நாற்பது வயதை நெருங்குகிறார்.

தனக்கு 40 வயதாகிவிட்டதே என கதாநாயகி வனிதா கவலை கொள்கிறார்.

அதே 40 வயதை நெருங்கிய சமயத்தில் கதாநாயகி வனிதாவிற்கு குழந்தை பெற்றுக் கொள்ள தோழிகள் மற்றும் சொந்தங்கள் அனைவரும் கன்வின்ஸ் செய்கிறார்கள்.

ஆனால் கதாநாயகன் ராபர்ட்  தனக்கு குழந்தை வேண்டாம் என்று கூறுகிறார்.

இந்தக் குழந்தை பெற்றுக் கொள்ளும் பிரச்சினையால்  இருவருக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள்.

இந்த நிலையில் கதாநாயகன் ராபர்ட் தனக்கு குழந்தை வேண்டாம் என்று சொல்கிறார்.

கதாநாயகி வனிதா குழந்தை வேண்டும் என அடம்பிடிக்கிறார்.

கதாநாயகி வனிதா மற்றும் கதாநாயகன் ராபர்ட் இருவரும் இணைந்து குழந்தை பெற்றுக் கொண்டார்களா? குழந்தை பெற்றுக்கொள்ளவில்லையா?  என்பதுதான் இந்த “மிஸஸ் & மிஸ்டர்” திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த மிஸஸ் & மிஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக வனிதா விஜயகுமார் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார், 40 வயது பெண்மணி கதாபாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக பொருந்தி  அருமையாக நடித்திருக்கிறார்.

கதாநாயகன் ராபர்ட்டை உருகி உருகி காதலிப்பதும், குழந்தை பெற்றுக் கொள்வதற்காக  செய்யும் அனைத்து வேலைகளும் கசமுசாவாக உள்ளது.

இந்த மிஸஸ் & மிஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடன இயக்குனர் ராபர்ட் அடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் நடன இயக்குநர் ராபர்ட், தனது மனைவி கதாநாயகி வனிதா மட்டும் போதும், தனக்கு குழந்தை வேண்டாம் என்பதற்கான காரணத்தை மறைத்து, கதாநாயகி வனிதாவை காப்பாற்ற போராடும் காட்சிகளில் மிகவும் நேர்த்தியாகவும் அருமையாகவும்  நடித்திருக்கிறார்.

கதாநாயகி வனிதாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷகிலா, ஷகிலாவின் ஒன்சைடாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன், ஃபாத்திமா பாபு, கதாநாயகி வனிதா மாமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீமன், ஆர்த்தி கணேஷ், கணேஷ்குமார், ரவிகாந்த், அனுமோகன், வாசுகி, ஸ்வேதா பாரதி என மற்ற கதாபாத்திரங்களில்  நடித்திருப்பவர்கள் மற்றும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கும் கிரண் என அனைவரும் அதர பழைய நடிகர்களாக இருப்பதால், அவர்களது திரை இருப்பு மற்றும் நடிப்பு இந்த திரரைப்படத்திற்கு கொஞ்சம் கூட கைகொடுக்கவில்லை.

ஒளிப்பதிவாளர்கள் ராஜபாண்டி.டி, விஷ்ணு ராமகிருஷ்ணன், டிஜி கபில் ஆகியோரது ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர்
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது.

இசையமைப்பாளர்
ஸ்ரீகாந்த் தேவாவின்
பின்னணி இசை அனைத்து காட்சிகளுக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.

இநத காலகட்டங்களில் உள்ள  இளைஞர்களுக்கு பிடிக்கும் ஒரு திரைப்படமாக கொடுக்க முயற்சித்திருந்தாலும், அதை பழைய பாணியில் இயக்கி இருக்கிறார் இயக்குனர் வனிதா விஜயகுமார்.

மொத்தத்தில், இந்த மிஸஸ் & மிஸ்டர் புகைப்படம் ரசிகர்களிடமிருந்து மிஸ்ஸிங்.

error: Content is protected !!