OTT இனையத்தளத்தில் வெளியீட்டுக்கு தயாராகும் நடிகர் ஆர்யாவின் டெடி?
இயக்குனர் சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிகை சாயிஷா நடித்துள்ள “டெடி” திரைப்படம் நேரடியாக OTT இனையத்தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திரையரங்குகள் மூடப்பட்டதால் திரைப்படங்களை நேரடியாக OTT இனையத்தளங்களில் வெளியிட தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்தவகையில் பொன்மகள் வந்தாள், பெண்குயின் போன்ற படங்கள் நேரடியாக OTT இனையத்தளத்தில் வெளியாகின.
அடுத்ததாக காக்டெய்ல், டேனி போன்ற படங்களும் விரைவில் OTT இணையத்தளத்தில் ரிலீசாக உள்ளன.
இந்நிலையில், இயக்குனர் சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா சாயிஷா நடித்துள்ள டெடி திரைப்படத்தை நேரடியாக OTT இனையத்தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் காமெடி கலந்த திகில் திரைப்படமாக உருவாகி உள்ள இதில், சதீஷ், கருணாகரன், சாக்ஷி அகர்வால், பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.











