’தலைவன் தலைவி’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு, செம்பன் வினோத், சரவணன், ஆர்.கே.சுரேஷ், காளி வெங்கட், மைனா நந்தினி, தீபா சங்கர், ஜானகி சுரேஷ், பேபி மகிழி, அருள்தாஸ், வினோத் சாகர், ரோஷ்னி, முத்துக்குமார், சென்ராயன், கிச்சா ரவி, ரோஹன், ஆதித்ய கதிர், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பாண்டிராஜ்.
ஒளிப்பதிவாளர் :- எம் சுகுமார்.
படத்தொகுப்பாளர் :- பிரதீப் இ ராகவ்.
இசையமைப்பாளர் :- சந்தோஷ் நாராயணன்.
தயாரிப்பு நிறுவனம் :-
சத்யஜோதி பிலிம்ஸ்.
தயாரிப்பாளர் :- .டி.ஜி. தியாகராஜன், செந்தில் தியாகராஜன் & அர்ஜுன் தியாகராஜன்.
ரேட்டிங் :- 3.5./5.
கதாநாயகன் விஜய் சேதுபதி, தந்தை சரவணன், தாய் தீபா சங்கர் மற்றும் தங்கை, தம்பியுடன் மதுரையில் ஹோட்டல் நடத்தி கொண்டு
வாழ்ந்து வருகிறார்.
கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு வளநாட்டை சேர்ந்த கதாநாயகி நித்யா மேனனை பெண் பார்க்கிறார்கள்.
கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு கதாநாயகி நித்யா மேனனை கண்டவுடனை பிடித்துப்போக இருவருக்கும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள்.
கதாநாயகன் விஜய் சேதுபதி, அவருடைய தம்பி, மற்றும் தந்தை குடும்பத்தில் உள்ள அனைவரும் ரவுடிகள் என கதாநாயகி நித்யா மேனன் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவர, உடனடியாக இந்த திருமணத்தை நிறுத்த முடிவு செய்கின்றார்கள்.
கதாநாயகன் விஜய் சேதுபதி, மற்றும் கதாநாயகி நித்தியா மேனன் வீட்டில் திருமணத்தை நிறுத்த முடிவு செய்வதால் இருவரும் ஓடி வந்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.
கதாநாயகன் விஜய் சேதுபதி – கதாநாயகி நித்யா மேனன் திருமணமாகி இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கிய ஒரு சில மாதங்களிலேயே, சின்ன சின்ன சண்டை சச்சரவுகளாலும், கதாநாயகன் விஜய் சேதுபதி கதாநாயகி நித்யா மேனன் இருவரும்
பிரிந்து விடுகிறார்கள்.
மூன்று மாதங்கள் பிரிந்திருக்கும் கதாநாயகன் விஜய் சேதுபதி கதாநாயகி நித்யா மேனன் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா?, ஒன்று சேரவில்லையா?, என்பதுதான் இந்த தலைவன் தலைவி திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த “தலைவன் தலைவி” திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.
ஆகாச வீரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகன் விஜய் சேதுபதி அன்பான கணவராகவும், தன் குழந்தை மீது அக்கறையுள்ள தந்தையாகவும் தன் குடும்பத்தின் மீது அக்கறை உள்ளவனாகவும் அளவுக்கு அதிகமாக நடித்து அதிர்ச்சியளிக்கிறார்.
தன் நடிக்கும் கதாபாத்திரத்தை தனது தனித்துவமான நடிப்பின் மூலம் மெருகேற்றுவதில் மிகச்சிறந்த கில்லாடியான கதாநாயகன் விஜய் சேதுபதி, இந்த திரைப்படத்தில் அதை கொஞ்சம் அதிகமாகவும் சிறப்பாகவும் செய்திருக்கிறார்.
இந்த “தலைவன் தலைவி” திரைப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார்.
பேரரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நித்யா மேனன், கணவருடன் சண்டை போடுவதும், கணவரின் பிரிவை தாங்க முடியாமல் தவிக்கும் காட்சிகளில் நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்திருந்தாலும், கதாநாயகி நித்யா மேனன் நடிப்பு திறமைக்கு அவருடைய நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய அளவுக்கு திரைப்படத்தில் காட்சிகள் இல்லை.
சித்திரை என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு, வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு அணுகுண்டுகளாக திரையரங்கில் சிரிப்பு சத்தத்தால் சிதறடித்து விட்டார்.
யோகி பாபு, சிறப்பான முறையில் வசனம் பேசி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருப்பதற்கு யோகி பாபுவை பாராட்டி ஆகவேண்டும்.
கதாநாயகன் விஜய் சேதுபதியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடித்திருக்கும் சரவணன் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தீபா சங்கர், கதாநாயகி நித்யா மேனன் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செம்பன் வினோத் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜானகி சுரேஷ் மற்றும் கதாநாயகி நித்யா மேனன் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், அமரசிகமணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட், நயினாவதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மைனா நந்தினி, நாகபாம்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்
வினோத் சாகர், ராகவர்த்தினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்
ரோஷினி, சோமன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்
செண்ட்ராயன் என அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர் நடிகைகளும் சிறப்பான நடிப்பை கொடுத்து கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்தும் கலர்புல்லாக திரைப்படமாக்கியிருக்கிறார்.
சின்னஞ்சிறு தெருக்களில் உள்ள சந்துகளில் நடக்கும் சண்டைக்காட்சிகளில் அவருடைய ஒளிப்பதிவு மாயாஜாலம் செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் இசையில் தனித்துவமான பின்னணி இசை பார்வையாளர்களின் கவனத்தை சட்டென்று ஈர்த்தது விடுகிறது.
குடும்பத்தில் நடக்கும் கணவன் மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகள், இருவரும் மனம் விட்டு பேசினாலே தீர்ந்துவிடும், அப்படி பேசாமல் ஈகோவில் முட்டிக்கொள்ளும் தம்பதிகள் இறுதியாக நீதிமன்றத்தில் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது, என்ற நல்ல விசயத்தை மிக அருமையாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
மொத்தத்தில், ‘தலைவன் தலைவி’ திரைப்படம் குடும்பங்கள் கொண்டாட வேண்டிய திரைப்படம்.











