வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி வெப் தொடர் விமர்சனம் ரேட்டிங் :- 3.75 / 5.
நடிகர் நடிகைகள் :- எஸ்.ஜே.சூர்யா, நாசர், லைலா, சஞ்சனா, ஹரிஷ் பெராடி, ஸ்மிருதி வெங்கட், விவேக் பிரசன்னா, அவினாஷ் அஸ்வின் குமார், குமரன் தங்கராஜன், விக்கி ஆதித்யா, வைபவ் முருகேசன், மீரன் மீதின், அஸ்வின் ராம், பிரதீப் குமார், திலீப் சுப்பராயன், ‘அருவி’ பாலாஜி, அலெக்ஸ் மகேஸ்வரன், குலபுலி லீலா,
மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :-ஆண்ட்ரூ லூயிஸ்.
ஒளிப்பதிவு :- சரவணன் ராமசாமி.
படத்தொகுப்பு :- ரிச்சர்ட் கெவின்.
இசை :- சைமன் கே கிங்.
தயாரிப்பு நிறுவனம் :- வால் வாட்சர் பிலிம்ஸ்.
தயாரிப்பாளர் :- கௌதம் செல்வராஜ் புஷ்கர் & காயத்ரி.
ரேட்டிங் :- 3.75 / 5.
இந்திய திருநாட்டில் ஒரு இளம்பெண் அதுவும் மிகவும் அழகான பெண்ணாக இருந்து மர்மமான முறையில் இறந்து விட்டால் நமது இந்திய திருநாட்டில் உள்ள பத்திரிக்கை மட்டும் ஊடகங்களில் சிலர் இந்த இளம் பெண்ணின் மரணத்திற்கு பின் உள்ள உண்மையை கண்டு பிடிக்கிறோம் என்ற பெயரில் இறந்த பெண்ணை பற்றி பல தவறான செய்திகளை பத்திரிக்கையின் சுதந்திரம் என்று கூறிக்கொண்டு உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிடுகிறார்கள்.
இறந்த பெண்ணின் பெயருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் களங்கம் ஏற்படுத்துகிறார்கள்.
இப்படி ஒரு தவறை மைய்யமாக வைத்து வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி என்ற வெப் தொடரை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ்.
அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ள இந்த வெப் தொடர் 8 பாகங்களாக வெளிவர உள்ளது.
சுழல் வெப் தொடரை தயாரித்த இயக்குனர் புஷ்கர் காயத்ரி அவர்கள்தான் இந்த வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி தொடரையும் வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் ஒரு நாளில் அந்த படப்பிடிப்பு நடக்கும் திரைப்படத்தின் கதாநாயகி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கண்டெடுக்க படுகிறார்.
ஊடகம் மற்றும் பத்திரிகைகளில் மர்மமான முறையில் கொலை நடந்த செய்தி மிக வேகமாக பரவுகிறது.
திடீரென இறந்ததாக கூறப்பட்ட இந்த கதாநாயகி மீடியாவில் தோன்றி நான் கொலை செய்யப்படவில்லை நான் உயிருடந்தான் இருக்கிறேன் என கூறுகிறார்.
கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகான இளம் பெண் சஞ்சனாதான் படுகொலை செய்யப்பட்ட பெண் என காவல் துறையினர் கண்டுபிடிக்கிறார்கள்.
காவல் துறையினர் விசாரணையை ஒப்புக் கொள்ளாத மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி விரைவாக வழக்கை முடிக்க சொல்கிறார்.
சிறப்பு அதிகாரியாக எஸ் ஜே சூர்யாவை நியமிக்கிறது.
கொலை செய்யப்பட்ட இளம் பெண் சஞ்சனாதான் என கண்டுபிடிக்கிறார் என்பதை பல விசாரணைகளில் சுவாரஸ்யங்களுடன் சொல்லப்பட்டு இருக்கிறது.
எஸ்ஜே சூர்யா இறந்த சஞ்சனாவை திருமணம் செய்து கொள்ள இருந்த குமரனை விசாரிக்கிறார்.
அந்த குமரனும் ஒரு கட்டத்தில் அவரும் தற்கொலை செய்து கொள்கிறான்.
இந்த வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி அது தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில்
எஸ்ஜே சூர்யா வழக்கம் போல நடிப்பில் அசத்தி இருக்கிறார்.
எஸ் ஜே சூர்யா காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் மிடுக்கான தோற்றத்தில் மிரட்டுகிறார்.
கொலையை அவர் துப்பறியும் காட்சிகள் பிரமாதம்.
சஞ்சனாவிற்கு இந்த தொடர் பெரிய திருப்பு முனையாக அமைந்துள்ளது.
சஞ்சனா பல இடங்களில் மிக சிறப்பாக நடித்துள்ளார்,
சஞ்சனாவின் கதாபாத்திரம்
கதைக்கும் முக்கியமான கதாபாத்திரமாக உள்ளார்.
லைலாவிற்கு சர்தார் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது.
வழக்கம் போல தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
எழுத்தாளராக நாசர் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளார்.
இநத வெப் தொடரில் குமரன் நடித்திருக்கிறார்.
குமரன் தனது கதாபாத்திரத்தை உள்வாங்கி மிகவும் அருமையாக கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார்.
வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி வெப் தொடரில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
காவல்துறை எப்படி ஒரு கொலையை துப்பு துலக்கும் என்பதை டீடைலாகவும், இன்ட்ரெஸ்டிங் ஆகவும் சொல்ல முயற்சி செய்து வெற்றியும் பெற்றுள்ளனர்.
குறிப்பாக ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என அனைத்தும் கூடுதலாக இநத வெப் தொடரில் வலுசேர்த்து இருக்கிறது.
கன்னியாகுமரி பகுதியில் நடப்பதால் அந்த பகுதி மக்கள் பேசும் மொழியையும் கதைக்குள் புகுத்தி உள்ளனர்.
ஒவ்வொரு எபிசோடும் முடியும் போது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டுகிறது வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி.
மொத்தத்தில் வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி சஸ்பென்ஸ் நிறைந்த அருமையான வெப் தொடர்.