பிரைம் வீடியோ சிலம்பரசன் TR நடித்த ஒரு இருண்ட க்ரைம் த்ரில்லரான பத்து தல தமிழ் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி ஸ்ட்ரீமிங் செய்யப்படுவதை அறிவித்தது.!!

பிரைம் வீடியோ சிலம்பரசன் TR நடித்த ஒரு இருண்ட க்ரைம் த்ரில்லரான பத்து தல தமிழ் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி ஸ்ட்ரீமிங் செய்யப்படுவதை அறிவித்தது.!!

சென்னை 23 ஏப்ரல் 2023 ஆர் ரஹ்மானின் இசையில், ஒபேலி.என்.கிருஷ்ணாவின் இயக்கத்தில், ஜெயந்திலால் கடா மற்றும் கே..ஞானவேல் ராஜா ஆகியோரின் தயாரிப்பில்  பத்து தல உருவாகியிருக்கிறது. சிலம்பரசன் TR முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றும் இந்த அடிதடி சாகச க்ரைம் தமிழ் டிராமாவில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்

தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட இந்த தமிழ் அடிதடி சாகச க்ரைம் டிராமாவை இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் ஏப்ரல் 27 முதல் ஸ்ட்ரீம் செய்து கண்டு மகிழலாம்

<CREATIVE>

இந்தியா22 ஏப்ரல், 2023 – ப்ரைம் வீடியோ இன்று,  ரசிகர்களால் அதிகளவு நேசிக்கப்படும் தமிழ் நடிகர் சிலம்பரசன் TR (Silambarasan TR) நடிப்பில் உருவான தமிழ் அடிதடி சாகச க்ரைம் டிராமாவான  பத்து தலை திரைப்படத்தின் சிறப்புக் காட்சி  உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுவதை அறிவித்தது,  ஓபேலி என். கிருஷ்ணா (Obeli N. Krishna) இயக்கத்தில் , கே.ஈ.ஞானவேல்ராஜாவுடன் (K. E. Gnanavelraja), இணைந்து ஜெயந்திலால் கடா (Jayantilal Gada) தயாரித்த இப்படத்தில் கௌதம் கார்த்திக் (Gautham Karthik), பிரியா பவானி சங்கர் (Priya Bhavani Shankar), கௌதம் வாசுதேவ் மேனன் (Gautham Vasudev Menon) மற்றும் சந்தோஷ் பிரதாப் (Santhosh Pratap) ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பத்து தல திரைப்படம், இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஏப்ரல் 27 தமிழில் பிரத்தியேகமாக பிரீமியர் செய்யப்படுகிறது பிரைம் மெம்பர்ஷிப்பில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட புத்தம் புதிய திரைப்படம். இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், ஒரே உறுப்பினர் சந்தாவாக ஆண்டுக்கு ₹1499 மட்டுமே செலுத்தி  சேமிப்பு, வசதி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவித்து மகிழலாம் .

மாபெரும் வெற்றி கண்ட கன்னடத் திரைப்படமான முஃபித் ஐ அதிகாரப்பூர்வமாகத் தழுவி எடுக்கப்பட்ட, பத்து தல திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றியைக் குவித்தது மட்டுமல்லாமல் மிகச்சிறந்த ஆற்றல்மிக்க நடிப்பிற்காகவும் கதையின் போக்குக்கு உயிரூட்டும்  ஏஆர் ரஹ்மானின் AR Rahman’s இசைக்காகவும் ரசிகர்களிடையே அமோகமான வரவேற்பைப் பெற்றது. தமிழக முதல்வர் (சந்தோஷ் பிரதாப் Santhosh Pratap) மர்மமான முறையில் காணாமல் போனது தொடர்பான விசாரணையை மையமாக கொண்ட இந்தத் திரைப்படத்தில், காணாமல் போன தலைவரைக் கண்டுபிடித்து வழக்கை புலனாய்வு செய்யும் பணி இடை விடாமுயற்சியை மேற்கொள்வதில் புகழ்பெற்ற போலீஸ் அதிகாரி சக்திவேல் (கௌதம் கார்த்திக்) வசம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் மேற்கொள்ளும் புலனாய்வு அடாவடிக்குப் பெயர்போன ஒரு கும்பல் தலைவனிடம்- ஏஜி ராவணன் (சிலம்பரசன் டிஆர்) அவரை இட்டுச்செல்கிறது, மணல் சுரங்கத் தொழிலில் ஏஜிஆர் கோலோச்சி வந்ததால், பழி சுமத்தலுக்கு அப்பாற்பட்டவராக, அவருக்கெதிரான ஆதாரங்களை திரட்டவே முடியாத அளவுக்கு  அவரை அருகில் நெருங்கவே முடியாதவராக ஒருவராக அவர் இருந்தார். இந்த வழக்கு விசாரணையை ஒரு முடிவுக்குக் கொண்டுவர, சக்திவேல் மறைமுகமாக செல்ல முடிவு செய்து கொஞ்சம் கொஞ்சமாக ஏஜிஆரின் நம்பகமானவர்களின் வட்டத்திற்குள் ஊடுருவிச் செல்கிறார். ஆனால் அவர் செல்லும் வழியில் வெளிப்படும் உண்மைகள் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது மேலும் அவரது மன உறுதியை குலைத்து அவருக்குத் தெரியவரும் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கச் செய்கிறது.

இயக்குனர் ஒபேலி என்.கிருஷ்ணா கூறினார், “பத்து தல திரைப்படம் ஒரு வேற்றுமொழியின் தழுவலாக இருந்தாலும் அதன் அசலில் இருந்து வெகுவாக மாறுபட்டது.  சிக்கல் நிறைந்த தங்கள் பாத்திரங்களில் நமது தலைசிறந்த படைப்பாளிகளான. சிலம்பரசன் டி.ஆர் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியது, ஒரு திரைப்பட தயாரிப்பாளராக எனது பணியை மிகவும் எளிதாக்கியது. கதைக்களம் சுவாரஸ்யமாக அமைந்திருந்தாலும் , இறுதி  வரை உங்களை கவர்ந்து இழுப்பது இதன் கதாமாந்தர்களின் பாத்திரப்படைப்புத்தான். ராவணாவைப் போலவே, அவர்கள் அனைவரும் அவ்வளவு மோசமானவர்கள் அல்ல, அறம் தொடர்பான கருத்துக்களையும் மனதில் அலைபாய்ந்து கொண்டுதான் இருக்கிறது, அவை மீட்டெடுக்கப்படக்கூடியவை, அந்த அம்சம்  காரணமாகவே பார்வையாளர்களை இன்னும் அதிகமாக அவர்கள் கவர்ந்திழுக்கிறார்கள்.  பிரைம் வீடியோ இந்தியாவில் திரையிடப்பட்டவுடன், மனதை விட்டு அகலாத நடிப்பை கண்டு மகிழும்வகையிலான இந்தப் படம் இன்னும் அதிகமான மக்களைச் சென்றடைவதைக் காண நான் காத்திருக்கிறேன்..” .