கோட் திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- விஜய், மீனாக்ஷி சௌத்ரி, பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, திரிஷா, கன்னிகா மோஹன், ஜெயராம், யோகி பாபு, V.T. V. கணேஷ்,பிரேம் ஜி, அஜ்மல், வைபவ், அஜய் ராஜ், அர்விந்த் ஆகாஷ், யுகேந்திரன், பஞ்சு சுப்பு, சிவா, ஒய்.ஜி. மகேந்திரன், சிவகார்த்திகேயன், திலீபன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- வெங்கட் பிரபு.
ஒளிப்பதிவாளர் :- சித்தார்தா நுனி.
படத்தொகுப்பாளர் :- வெங்கட் ராஜன்.
இசையமைப்பாளர் :- யுவன் ஷங்கர் ராஜா.
தயாரிப்பு நிறுவனம் :- ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மெண்ட்.
தயாரிப்பாளர்கள் :- கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S. கணேஷ்,
கல்பாத்தி S. சுரேஷ்.
ரேட்டிங் :- 2.5/5
இந்திய உளவுத்துறையின் கீழ் இயங்கும் தீவிரவாத தடுப்பு பிரிவில் பணியாற்றும் கதாநாயகன் விஜய் மற்றும் அவருடைய நண்பர்கள் பிரசாந்த் பிரபுதேவா, அஜிமல், தீவிரவாத தடுப்பு அதிகாரிகளாக பணியாற்றுகிறார்கள்.
கென்யா நாட்டில் வில்லன் மோகன் யுரேனியத்தை கைப்பற்றும் கதாநாயகன் விஜய் மற்றும் அவருடைய நண்பர்கள் பிரசாந்த் பிரபுதேவா, அஜிமல், கைப்பற்றும் முயற்சியில் வில்லன் மோகன் மற்றும் அவர் குடும்பத்துடன் கொல்லப்படுகிறார்.
தாய்லாந்துக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் கதாநாயகன் விஜய் மற்றும் தனது மனைவி சினேகா மற்றும் தனது மகனையும் தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.
கதாநாயகன் விஜய் மற்றும் தனது மனைவி சினேகா மற்றும் தனது மகனுடன் காரில் செல்லும் போது எதிரிகள் கொலை தாக்குதல் நடத்துகிறார்கள்.
இந்த தாக்குதலின் தொடர்ச்சியாக கதாநாயகன் விஜயின் ஐந்து வயது மகனை மர்ம மனிதர்கள் கடத்தி சென்றுவிட வழியில் கடத்திய கார் விபத்துக்குள்ளாக அதிலிருந்து கதாநாயகன் விஜயின் ஐந்து வயது மகன் இறந்து விடுகிறான்.
தனது மகன் இறந்த துக்கத்தில் கதாநாயகன் விஜயை விட்டு சினேகா பிரிந்து விடுகிறார்.
தீவிரவாத தடுப்பு பிரிவில் அதிகாரியாக வேலையை கதாநாயகன் விஜய் விட்டுவிடுகிறார்.
சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் தனது வேலை விசயமாக மாஸ்க்கோவிற்க்கு செல்லும் கதாநாயகன் விஜய் அங்கே தன்னை போல் உருவம் கொண்ட ஒரு இளைஞனை சந்திக்க அது இறந்த தனது மகன்தான் என கண்டறிந்து சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார்.
சென்னைக்கு வந்த பின்பு சில கொலைகள் நடக்கின்றன.
அந்த கொலைகளை செய்த கொலையாளி யார்?, எதற்காக கதாநாயகன் விஜய்யின் குழுவினரை குறிவைத்து கொலை செய்கிறார்கள்? அந்த கொலைக்கான காரணம் என்ன?, என்பதுதான் இந்த ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (கோட் ) திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த இந்த ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (கோட் ) திரைப்படத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
காந்தி மற்றும் ஜீவன் என அப்பா, மகன் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தந்தை காந்தி கதாபாத்திரத்தில் நடிப்பு மற்றும் உடல் மொழியில் முதிர்ச்சியை மிக அருமையாக வெளிப்படுத்தியிருப்பதோடு, மட்டுமல்லாமல் மகன் ஜீவன் கதாபாத்திரத்தில் வேகத்தையும், விவேகத்தையும் நடிப்பின் மூலம் மிக அருமையாக வெளிப்படுத்தி கதாநாயகன் விஜய், அசத்தியிருக்கிறார்.
வழக்கம் போல் சில காட்சிகளில் தனது குறும்புத்தனம் நக்கல் நையாண்டி என நடிப்பையும், கிண்டலான வசன உச்சரிப்பின் மூலமும் ரசிகர்களை சிரிக்க வைத்து, திரைப்படம் முழுவதும் தனது ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து கொண்டு நடித்திருக்கிறார்.
கதாநாயகன் விஜய்யின் நண்பர்களாக நடித்திருக்கும் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் இவருடைய பாஸாக ஜெயராம்
இவர்கள் அனைவரும் நடிப்பின் மூலம் கவர்கிறார்கள்.
தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகன் விஜயின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சினேகா மற்றும் மகன் விஜயின் காதலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மீனாட்சி செளத்ரி இவர்கள் இருவரும் மிகவும் அளவாக நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
யோகி பாபு ஒரு சில காமெடி காட்சிகளில் வந்தாலும் தனது வழக்கமான பாணியில் ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்.
வில்லன் ராஜிவ் மேனன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சில்வர் ஜூப்ளி நாயகன் மைக் மோகனுக்கு வில்லன் கதாபாத்திரத்திற்கான எந்த ஒரு தகுதியும் இல்லாததால், அந்த வில்லன் கதாபாத்திரம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் நிற்க மறுப்பதோடு, திரைப்படத்திற்கு எந்தவிதத்திலும் பலம் இல்லாமல் பயணித்திருக்கிறார்.
பிரேம்ஜி அமரன், வைபவ், அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் பஞ்சு சுப்பு, யுகேந்திரன், திலீபன், என இயக்குநர் வெங்கட் பிரபுவின் நண்பர்கள் இந்த கோட் திரைப்படத்தில் சில காட்சிகளில் தலை கட்டியிருக்கிறார்கள் .
நடிகை திரிஷா ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் மாறி விட்டு சென்று இருக்கிறார்.
திரைப்படத்தின் இறுதி காட்சியில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார்.
ஒளிப்பதிவாளர் சித்தார்தா நுனியின் ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக உள்ளது.
ஒளிப்பதிவாளர் சித்தார்தா நுனியின் சேசிங் காட்சிகள் அனைத்தும் அற்புதமாக இருக்கிறது.
திரைப்படத்தில் பல இடங்களில் ஒளிப்பதிவை விட, வி.எப்.எக்ஸ் வேலைதான் திரைப்படத்தில் மிக அதிகமாக உள்ள நிலையில் கைகொடுக்கவும் செய்திருக்கிறது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திரைப்படத்திற்கு எந்தவிதமான அடையாளத்தையும் கொடுக்காமல், மிக சாதாரணமாக இருப்பதால் தளபதி விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.
தந்தை மகன், திருடன் போலீஸ் என்ற தமிழ் திரைப்பட உலகில் பல கதைகள் வந்திருக்கிறது.
அந்த வரிசையிலான கதையை சர்வதேச அளவில் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு,
தந்தை – மகன் என்ற இரண்டை கதாபாத்திரத்தை வைத்து கொண்டு திரைக்கதை அமைத்து, அதை அவருடைய பட பாணியில் இயக்கியிருக்கியிருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘கோட்’ திரைப்படம் இயக்குநர் வெங்கட் பிரபு, திரைப்பட ரசிகர்கள் மற்றும் தளபதி விஜயின் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்த தவறியிருக்கிறார்.











