இன்றைய ராசிபலன்கள் 17/09/2024

இன்றைய ராசிபலன்கள்.

17-09-2024 செவ்வாய்க்கிழமை தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள்.

தமிழ் ஆண்டு, தேதி – குரோதி, புரட்டாசி 1
நாள் – மேல் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி.

சுக்ல பக்ஷ சதுர்தசி – Sep 16 03:10 PM – Sep 17 11:44 AM

சுக்ல பக்ஷ பௌர்ணமி – Sep 17 11:44 AM – Sep 18 08:04 AM

நட்சத்திரம்.

சதயம் – Sep 16 04:33 PM – Sep 17 01:53 PM

பூரட்டாதி – Sep 17 01:53 PM – Sep 18 11:00 AM

கரணம்

வனசை – Sep 17 01:30 AM – Sep 17 11:44 AM

பத்திரை – Sep 17 11:44 AM – Sep 17 09:55 PM

பவம் – Sep 17 09:55 PM – Sep 18 08:04 AM

யோகம்.

த்ருதி – Sep 16 11:41 AM – Sep 17 07:48 AM

சூலம் – Sep 17 07:48 AM – Sep 18 03:41 AM

கண்டம் – Sep 18 03:41 AM – Sep 18 11:28 PM

வாரம்.

செவ்வாய்க்கிழமை சூரியன் மற்றும் சந்திரன் நேரம்.

சூரியோதயம் – 6:13 AM
சூரியஸ்தமம் – 6:15 PM

சந்திரௌதயம் – Sep 17 5:50 PM
சந்திராஸ்தமனம் – Sep 18 6:09 AM

அசுபமான காலம்.

இராகு – 3:14 PM – 4:44 PM
எமகண்டம் – 9:13 AM – 10:43 AM
குளிகை – 12:14 PM – 1:44 PM

துரமுஹுர்த்தம் – 08:37 AM – 09:25 AM, 11:02 PM – 11:50 PM

தியாஜ்யம் – 07:31 PM – 08:55 PM

சுபமான காலம்.

அபிஜித் காலம் – 11:50 AM – 12:38 PM

அமிர்த காலம் – 07:29 AM – 08:54 AM, 03:57 AM – 05:21 AM

பிரம்மா முகூர்த்தம் – 04:36 AM – 05:24 AM

ஆனந்ததி யோகம்.

மிருத்யு Upto – 01:53 PM
காரணம்

வாரசூலை.

சூலம் – North
பரிகாரம் – பால்

செவ்வாய்க்கிழமை ஹோரை.

காலை

06:00 – 07:00 – செவ் – அசுபம்
07:00 – 08:00 – சூரி – அசுபம்
08:00 – 09:00 – சுக் – சுபம்
09:00 – 10:00 – புத – சுபம்
10:00 – 11:00 – சந் – சுபம்
11:00 – 12:00 – சனி – அசுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – குரு. – சுபம்
01:00 – 02:00 – செவ் – அசுபம்
02:00 – 03:00 – சூரி – அசுபம்

மாலை

03:00 – 04:00 – சுக் – சுபம்
04:00 – 05:00 – புத. – சுபம்
05:00 – 06:00 – சந் – சுபம்
06:00 – 07:00 – சனி – அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

17-09-2024 செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்

மேஷம்

உத்தியோகப் பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் அமையும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் நீங்கும். மனதிற்குப் பிடித்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபார செயல்களில் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான சூழல் அமையும். பழக்கவழக்கங்களில் புதுமை ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும்.
பரணி : எதிர்ப்புகள் நீங்கும்.
கிருத்திகை : புதுமையான நாள்.

ரிஷபம்

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். வீடு மற்றும் வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உலகியல் நடவடிக்கைகள் மூலம் மனதில் மாற்றங்கள் பிறக்கும். புதிய முயற்சிகளில் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஆதரவான சூழ்நிலை உண்டாகும். சுபகாரிய செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

கிருத்திகை : பக்குவம் பிறக்கும்.
ரோகிணி : மாற்றங்கள் பிறக்கும்.
மிருகசீரிஷம் : தாமதங்கள் குறையும்.

மிதுனம்

ஆன்மிக செயல்களில் புரிதல் ஏற்படும். வாழ்க்கைத் துணைவரிடம் மனம் விட்டு பேசுவீர்கள். ஆராய்ச்சி பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் போட்டிகள் குறையும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : புரிதல் ஏற்படும்.
திருவாதிரை : நெருக்கடிகள் குறையும்.
புனர்பூசம் : போட்டிகள் குறையும்.

கடகம்

பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல் மேம்படும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை குறைத்துக்கொள்ளவும். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உயர் அதிகாரிகளின் தன்மையை அறிந்து செயல்படுவது நல்லது. சவாலான பணிகளில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : சோர்வான நாள்.
பூசம் : அலைச்சல்கள் ஏற்படும்.
ஆயில்யம் : கவனம் வேண்டும்.

சிம்மம்

செய்யும் செயல்களில் இருந்துவந்த தடைகள் குறையும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு மேம்படும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆரோக்கியம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

மகம் : தடைகள் குறையும்.
பூரம் : அறிமுகம் உண்டாகும்.
உத்திரம் : ஒத்துழைப்பான நாள்.

கன்னி

மற்றவர்களிடம் எதிர்பார்த்திருந்த உதவிகள் சாதகமாக கிடைக்கும். எதிர்பார்த்திருந்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். பணிகளில் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நெருக்கமானவர்களிடத்தில் கோபமின்றி செயல்படவும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். ஊக்கம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

உத்திரம் : உதவிகள் சாதகமாகும்.
அஸ்தம் : மாற்றமான நாள்.
சித்திரை : திருப்தியான நாள்.

துலாம்

எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். புதிய வேலை மற்றும் அதை சார்ந்த முயற்சிகளுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். முன்னோர்களின் சொத்துக்கள் கிடைப்பதற்கான சூழல் ஏற்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : சேமிப்புகள் குறையும்.
சுவாதி : முன்னேற்றமான நாள்.
விசாகம் : புதுமையான நாள்.

விருச்சிகம்

ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். எதிர்பார்த்திருந்த சில வாய்ப்புகள் சாதகமாக அமையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். கால்நடை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

விசாகம் : இன்னல்கள் குறையும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : மதிப்புகள் அதிகரிக்கும்.

தனுசு

முயற்சிக்கு ஏற்ப வெற்றியும், பாராட்டும் கிடைக்கும். புதுவிதமான ஆடைகளை அணிந்து மனம் மகிழ்வீர்கள். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதுவிதமான கனவுகளை உருவாக்குவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். முத்திரை பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலை ஏற்படும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்

மூலம் : பாராட்டுகள் கிடைக்கும்.
பூராடம் : புத்துணர்ச்சியான நாள்.
உத்திராடம் : மேன்மையான நாள்.

மகரம்

உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வேலையாட்கள் மூலம் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். இழுபறியான செயல்களை சாதுரியமாக செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
திருவோணம் : அனுசரித்துச் செல்லவும்.
அவிட்டம் : அறிமுகங்கள் ஏற்படும்.

கும்பம்

தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பம் ஏற்படும். காப்பீடு சார்ந்த செயல்களில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
சதயம் : லாபகரமான நாள்.
பூரட்டாதி : பொறுப்புகள் குறையும்.

மீனம்

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிலும் தனித்து செயல்படுவது தொடர்பான முடிவுகள் பிறக்கும். வேள்விப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். ஆரோக்கிய விஷயங்களில் மந்தமான சூழல் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : ஆதாயம் ஏற்படும்.
உத்திரட்டாதி : முடிவுகள் பிறக்கும்.
ரேவதி : மந்தமான நாள்.