பாடும் நிலா பாலு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுடைய பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ விரைவில் திறக்கப்படும்

சென்னை : 30 செப்டம்பர் 2020

இன்று டப்பிங் யூனியனின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் செயற்குழு கூட்டத்தில் நடிகர் திரு. டத்தோ ராதாரவி அவர்கள் தலைமையில் மற்றும் பொதுச் செயலாளர் கதிரவன் பாலு. பொருளாளர் சீனிவாச மூர்த்தி. மற்றும் துணைத் தலைவர்கள் துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும்  கலந்து கொண்டனர்

நடிகர் திரு. டத்தோ ராதாரவி அவர்கள் தலைமையில் நடைபெற்ற செயற்குழுவில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது !

டப்பிங் யூனியனின் வாழ் நாள் உறுப்பினரான திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை கௌரவிக்கும் விதமாக டப்பிங் யூனியனின் செயற்குழு குழு 30.09.2020 அன்று தலைவர் திரு. டத்தோ ராதாரவி அவர்களின் தலைமையில் கூடி, திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் திருவுருவப் படம் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் டப்பிங் யூனியனுக்கென தனியே டப்பிங் ஸ்டுடியோ ஒன்று இசைத் துறைச் சாதனையாளரும் டப்பிங் கலைஞருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவாக விரைவில் திறக்கப்படும்.

என நடிகர் திரு. டத்தோ ராதாரவி அவர்கள் தெரிவித்தார்.

CLOSE
CLOSE
error: Content is protected !!