பாடும் நிலா பாலு’ அகிலம் உள்ளவரை , தன் புகழ் மற்றும் பாடல்களால் பவனி வருவார் !! சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் இரங்கல்.
சென்னை : 25 செப்டம்பர் 2020
கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நடிகரும் பாடகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அதனைத தொடர்ந்து ஆகஸ்ட் 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு தொடர்ந்து வெண்டிலேட்டர் எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் இந்த மாதம் செப்டம்பர் மாத முதல் வாரத்திலிருந்தே எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்தார்.
எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் மிகவும் கவலைக்கிடமாக உள்ளார்.
இன்று செப்டம்பர் 25-ஆம் தேதி அவர் சரியாக 1.04PM மணிக்கு இறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இதனையடுத்து எஸ்..பி.பி. சரண் அவர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவுக்கு நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் & மற்றும் உறுப்பினர்கள் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின்
இரங்கல் செய்தி.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக
நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை இந்திய மொழிகள் அத்தனையிலும் பாடிய அதிஉன்னதக்கலைஞரான ‘பாடும் நிலா பாலு’! இன்று நம்மிடையே இல்லை !
அவர் மறைந்தாலும் இவ்வையகம் உள்ளவரை SPB புகழும், அவர் பாடிய பாடல்களும் பட்டித் தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பது நிச்சயம் !
தனது மூச்சுக்காற்று முழுவதையும்
பாடல் ஓசையாக மாற்றிய அவர் தன் குரல் வளத்தால் திரை இசைபாடல்களில் மட்டுமின்றி தான் கற்றறியாத கர்நாடக இசைப்பாடல்களிலும் கரைகண்டவர்.
தன் பாடல் இசை பயணத்தில் இமயத்தின் உச்சம் தொட்டும் இன்முகம் மாறாத பணிவின் திருவுருவமாக பண்பின் சிகரமாக பவனி வந்த நம் ‘பாடும் நிலா பாலு’வை இதுவரை மக்களுக்காக
பாடியது போதும் இனி எமக்காக பாட வாருங்கள்…!
என இறைவன் அழைத்துக் கொண்டான் போலும் !
இளைப்பாற இப்படி அவர் இறைவனடி சேர்ந்தாலும். இனம் , மதம் ,மொழி கடந்து கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சங்களில் நிச்சயம் நிரந்தரமாக வாழ்ந்திடுவார் நம் ‘பாடும் நிலா பாலு’!
அவரை இழந்து வாடுவது அன்னாரது குடும்பம் மட்டுமல்ல . லட்சோபலட்சம் ‘பாடும் நிலா பாலு’ வின் ரசிகர்களின் குடும்பமும் தான் என்பதை நாம் நன்கு அறிவோம்.
நம் குடும்பங்களும் அதில் அடக்கம் என்பதால் யாருக்கு, யார் ?ஆறுதல் , தேறுதல் சொல்வது.?! எனும் இனம் புரியா மனநிலையுடன் அவர்களது துயரத்தில் சினிமா பத்திரிகையாளர் சங்கமும் , அதன் உறுப்பினர்களும் ஆழ்ந்த வருத்தத்துடன் தம்மை இணைத்துக்கொண்டு துக்கம் அனுஷ்டிக்கிறோம்!
SPB யின் மறைவு தென்னிந்திய சினிமாவுக்கு மட்டுமல்ல !
இந்திய சினிமாவுக்கே பேரிழப்பு… என்றால் மிகையல்ல !
இத்தருணத்தில். இதுதான் உரிய நேரம் என கருதி ‘பாடும் நிலா பாலு’ விற்கு. அன்னாரது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற உயரிய விருதுகளில் ஏதாவது ஒன்றையாவது மத்திய அரசு அறிவித்து அவரது ரசிகர்களை மீளாதுக்கத்தில் இருந்து மீட்க வேண்டும்.
அதற்கு முன்னதாக, ஒட்டுமொத்த திரையுலகினரின் விருப்பத்திற்கேற்ப தமிழக அரசு, நாளை (26-09-2020) ,பாடகர் SP.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகளை நிகழ்த்த வேண்டும் என்பதே நம் அவா !
‘பாடும் நிலா பாலு’ இன்று நம்மைவிட்டு மறைந்தாலும், அவர் புகழும், குரலும் என்றும் நம்மிடையே ஒங்கி ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதை தெரிவித்து எமது ஆழ்ந்த வருத்தங்களை பதிவு செய்கிறோம் !
பிரபல பின்னணிப் பாடகர்
பாடும் நிலா பாலு' அகிலம் உள்ளவரை , தன் புகழ் மற்றும் பாடல்களால் பவனி வருவார் !!#SPB மறைவுக்கு சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் இரங்கல் செய்தி.#SPBalasubrahmanyam #spbsir #RIPSPBSir #moviewingz pic.twitter.com/PNEenlm9NK— ᎷϴᏙᏆᎬ ᏔᏆΝᏀᏃ (@moviewingz) September 25, 2020











