சீசா திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் – நட்டி நட்ராஜ், நிஷாந்த் ரூசோ, பாடினி குமார், நிழல்கள் ரவி,  ஜீவா ரவி, ஆதேஷ் பாலா, மூர்த்தி, மாஸ்டர் ராஜநாயகம்,  டாக்டர். செந்தில் வேலன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் – குணா சுப்பிரமணியம்

ஒளிப்பதிவாளர் –  மணிவண்ணன் & பெருமாள்.

படத்தொகுப்பாளர் – வில்சி ஜே சசி.

இசையமைப்பாளர் –  சரண்குமார்.

தயாரிப்பு நிறுவனம் – விடியல் ஸ்டுடியோஸ்.

தயாரிப்பாளர் – கா.செந்தில் வேலன்.

ரேட்டிங் –  2.75./5.

இளம் தொழிலதிபர் கதாநாயகன் நிஷாந்த் ரூசோ காதல் மனைவி கதாநாயகி பாடினி குமார் வசிக்கும் வீட்டில் வேலை செய்யும் ஆண் ஒருவர் கொலை செய்யப்படுகிறார்.

அந்த வீட்டில் இருந்த கதாநாயகன் நிஷாந்த் ரூசோ மனைவி கதாநாயகி பாடினி குமார் மாயமாகி விடுகிறார்கள்.

அந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட்டிஸ்க்கும் காணாமல் போய் விடுகிறது.

கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை ஆய்வாளரான நட்டி நட்ராஜ், மாயமான தம்பதியையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

விசாரணையில் கதாநாயகன் நிஷாந்த் ரூசோ பற்றி பல அதிர்ச்சிகரமான விசயங்கள் காவல்துறை ஆய்வாளரான நட்டி நட்ராஜுக்கு தெரிய வருகிறது.

அதை வைத்து விசாரணையில் அவர் முன்னோக்கி செல்லும் போது திடீரென்று ஒருநாள் மாயமான கதாநாயகன் நிஷாந்த் ரூசோ மட்டும் தனது வீட்டுக்கு வருவதோடு, அவருடன் இருந்த கதாநாயகி பாடினி குமார் பற்றி எதுவும் தெரியாத மனநிலையில் இருக்கிறார்.

அவருடன் இருந்த அவரது மனைவி பாடினி குமார் என்ன ஆனார்? என்பது குறித்து காவல்துறையினர் அவரிடம் விசாரிக்கும் போது, அவர் சரியான மனநிலையில் இல்லை என்பது தெரிய வருகிறது.

கதாநாயகி பாடினி குமாரின் நிலை என்ன? என்பதை கண்டுபிடிப்பதற்காக, வேறு கோணத்தில் விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை ஆய்வாளரான நட்டி நட்ராஜுக்கு, அதிர்ச்சிகரமான உண்மையும், பாடினிகுமார் நிலையும் தெரிய வருகிறது.

அந்த உண்மைகள் மூலம் கதாநாயகி  பாடினி குமாருக்கு என்ன ஆனது? என்பதையும் விட்டில் இருந்த  வேலைக்காரரின் கொலைக்கான குற்றவாளியை கண்டு பிடித்தார்களா?,  கண்டு பிடிக்கவில்லையா?,

கதாநாயகி  பாடினி குமாரை கண்டுபிடித்தார்கள்? கண்டு பிடிக்கவில்லையா? என்பதுதான் சீசா திரைப்படத்தின் மீதிக்கதை

இந்த சீசா திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து பல திரைப்படங்களில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரங்களில் நடித்து வரும் நட்டி நட்ராஜ், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

நட்டி நட்ராஜ், அமைதியான காவல்துறை அதிகாரியாக இருந்தாலும், எந்த ஒரு விசயத்தையும் கூர்ந்து கவனித்து விசாரணை மேற்கொள்ளும்  விசாரணையில் அதிரடி காட்டுகிறார்.

இரண்டாவது நாயகனாக நடித்திருக்கும் நிஷாந்த் ரூசோ, பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை மிக கவனமுடன் கையாண்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்.

நிஷாந்த் ரூசோவின் மனைவியாக நடித்திருக்கும் பாடினி குமார், கதையில் முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரத்தில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

குடும்ப பாங்கான முகத்தோடு அளவான அழகு மற்றும்  இயல்பான நடிப்பு என்று கவனம் ஈர்ப்பவர் ஒரு பாடலில் கொஞ்சம் கவர்ச்சியாகவும் நடித்து அசத்துகிறார்.

கதாநாயகன் நிஷாந்த் ரூசோவின் நண்பர கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மூர்த்தி, காவல்துறை துணை ஆய்வாளராக  கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் ஆதேஷ் பாலா, வீட்டு வேலைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் ராஜநாயகன், பாடினி குமார்  தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் அரவிந்தராஜ் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் பெருமாள் மற்றும் மணிவண்ணன் ஆகியோரது ஒளிப்பதிவு மூலம் கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, காட்சிகளை பிரமாண்டமாகவும் படமாக்கியிருக்கிறது.

இசையமைப்பாளர் சரண்குமார் இசையில் பாடல்கள் பின்னணி இசை காட்சிகளுக்கு கதைக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறது.

பல திருப்பங்களுடன் பயணிக்கும் திரைக்கதை மற்றும் அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பு மிக்க காட்சிகளுடன் படத்தை சுவாரஸ்யமாக  நகர்த்திச் செல்லும் இயக்குநர் குணா சுப்பிரமணியம், கதை சொல்லில் காட்டியிருக்கும் வித்தியாசம் மற்றும் மேக்கிங் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

எம்பாமிங் செய்யப்பட்ட சடலம், குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு என்ன ஆகும்? உள்ளிட்ட சில கேள்விகளுக்கு சரியான விடை சொல்லாமல் விட்டிருந்தாலும், இரண்டாம் பாகத்திற்கான ஒரு லீடாக அதை வைத்திருக்கும் இயக்குநர் குணா சுப்பிரமணியம் கிரைம் திரில்லர் மற்றும் விழிப்புணர்வு இரண்டையும் சரியான அளவில் கையாண்டு கொடுத்திருக்கும் இந்த ‘சீசா’ நிச்சயம் மக்களிடம் பாராட்டு பெறும்.

மொத்தத்தில், ’சீசா’ ஆன்லைன் கேம்களில் அடிமையாக இளைய தலைமுறையினரை சிந்திக்க வைக்கும்