“ஆரகன்” திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- மைக்கேல் தங்கதுரை, கவிப்பிரியா மனோகரன், ஸ்ரீரஞ்சனி, கலைராணி, யாசர், 0மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- அருண் கே.ஆர்.
ஒளிப்பதிவாளர் :- சூர்யா வைத்தி
படத்தொகுப்பாளர் :- சசி தக்ஷா.
இசையமைப்பாளர் :- விவேக் & ஜெஷ்வந்த்m
தயாரிப்பு நிறுவனம் :- டிரெண்டிங் ஆர்ட்ஸ்.
தயாரிப்பாளர் :- ஹரிகரன் பஞ்சலிங்கம்.
ரேட்டிங் :- 2.5./5.
கதாநாயகன் மைக்கேல் தங்கதுரையும் கதாநாயகி கவிப்ரியாவும், இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்து வருகிறார்கள்.
காட்டுப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நோய் வாய்ப்பட்டு தனிமையில் வசித்து வரும் ஸ்ரீரஞ்சனியை கவனித்து கொள்ளும் வேலை கதாநாயகி கவிப்பிரியாவிற்கு கிடைக்கிறது.
ஒரு நோய்வாய்ப்பட்ட ஒரு பெண்மணியை கவனித்துக் கொள்ளும் ஒரு சாதாரண வேலைதான் என்று கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத சம்பளம் என்பதால் கதாநாயகன் மைக்கேல் தங்கதுரை, சந்தேகம் அடையும் நிலையில் கதாநாயகி கவிப்ரியாவை அந்த வேலைக்கு செல்ல விடாமல் தடுக்கிறார்.
அந்த காட்டுப்பகுதியில் செல்போன் சிக்னல் கிடைக்காத, ஆள்நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் இருக்கும் அந்த வீடு மர்மமாக இருக்கிறது.
அந்த வீட்டில் இருக்கும் படங்கள் மற்றும் பொருட்களும் மர்மம் நிறைந்தவைகளாக இருப்பதோடு, மட்டுமல்லாமல் முகம் பார்க்கும் கண்ணாடி வைத்துக் கொள்வது எங்கள் குடும்பத்திற்கு ஆகாது, என்பதால் நாங்கள் அதை பயன்படுத்த மாட்டோம், என ஸ்ரீரஞ்சனி கூறுகிறார்.
சில நாட்களில் அந்த வீட்டில் இருக்கும் ஸ்ரீரஞ்சனியை போல் தானும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை உணர்ந்து கொள்ளும் கதாநாயகி, கவிப்பிரியா தனது கதாநாயகன் மைக்கல் தங்கதுரையிடம் செல்போனில் பேசுவதன் மூலம் ஆறுதல் அடைந்து பல மாதங்களை கடத்திக் கொண்டிருக்கிறார்.
கதாநாயகி, கவிப்பிரியாவிற்கு இருக்கும் ஒரே ஆறுதல் தனது கதாநாயகன் மைக்கேல் தங்கத்துரையிடம் கைபேசியில் பேசுவது தான் அந்த கைப்பேசியும் பழுதடைய அதன் மூலம் இருந்த கதாநாயகன் மைக்கேல் தங்கத்துடன் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் போக, திடீரென்று கதாநாயகி கவிப்பிரியாவின் உருவத்தில் மாற்றங்கள் மட்டுமல்லாமல்
வயதனாவராக தெரிகிறது.
திரைப்படம் பார்ப்பவர்களுக்கு தெரிந்தாலும் கதாநாயகி, கவிப்பிரியாவிற்கு தெரியவில்லை, என்ன காரணம் என்றால் அந்த வீட்டில் கண்ணாடி இல்லாத காரணத்தால் முகத்தில் உள்ள மாற்றங்கள் தெரியாமல் இருக்கிறது.
இந்த நிலையில் கதாநாயகி, கவிப்பிரியாவை சுற்றி நடக்கும் மர்மமான விஷயங்கள் பற்றி கதாநாயகி, கவிப்பிரியாவிற்கு உணரும் தருணத்தில், காதலன் கதாநாயகன் மைக்கேல் தங்கதுரை அந்த இடத்தில் இருக்கிறார்.
ஆனால் அவர் வெவ்வேறு உருவங்களில் கதாநாயகி கவிப் பிரியாவிற்கு கண்களுக்கு தெரிகிறார்.
கதாநாயகன் மைக்கேல் தங்கதுரை யின் இந்த திடீர் மாற்றங்கள் பார்வையாளர்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் வேலையில், கதாநாயகி கவிப்பிரியா தான் மிகப்பெரிய சதிவலையில் சிக்கியிருப்பதை உணர்கிறார்.
அதில் இருந்து கதாநாயகி கவிப்பிரியா மீண்டாரா? மீளவில்லையா ? என்பதுதான் இந்த ‘ஆரகன்’ மீதிக்கதை.
இந்த ஆரகன் திரைப்படத்தில் கதாநாயகனாக மைக்கல் தங்கதுரை நடித்து இருக்கிறார்.
கதாநாயகன் மைக்கேல் தங்கதுரை, தன் தேவைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் தனது கொடூர முகத்தோடு, உண்மையான முகத்தையும் நடிப்பை வெளிப்படுத்தும் காட்சிகள் நடிப்பின் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்.
இந்த ஆரகன் திரைப்படத்தில் கதாநாயகியாக கவிப்பிரியா நடித்திருக்கிறார்
கதாநாயகி கவிப்பிரியா மகிழ்நிலா என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிரிப்பு மலர்ந்த முகத்தோடும், அழகோடும் மிக அருமையாக நடித்து இருக்கிறார்.
ஸ்ரீரஞ்சனி, நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் தன் நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார்.
கலைராணி தனது வழக்கமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்தை அருமையாக செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சூர்யா வைத்தி, அடர்ந்த காட்டுப் பகுதியை மர்மம் நிறைந்தவைகளாக காட்டி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை பதற்றம் அடையவும் செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர்கள் விவேக் – ஜெஷ்வந்த், இசையில் பாடல்களையும் பின்னணி இசையும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள்.
இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சஞ்சீவி மூலிகை வேர் மனிதருக்கு இறப்பு இல்லாத வாழ்க்கையை கொடுக்கும் என்ற கதை களத்தை வைத்துக் கொண்டு
திரைக்கதையில் சில தடுமாற்றங்களும், லாஜிக் மிரல்கள் அதிகளவில் இருந்தாலும் குறைகளாக தெரியாமல் திரைப்படத்தை பாதிக்காதவாறு, ஆரம்பம் முதல் முடிவு வரை, தான் எடுத்துக்கொண்ட கதைக்கருவை வித்தியாசமான முறையில் இயக்கி திரைப்படம் பார்க்கும், ரசிகர்களை பதற்றத்துடன் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் அருண் கே.ஆர்.
மொத்தத்தில், இந்த ‘ஆரகன்’ திரைப்படம் புதுவிதமான முயற்சி











