‘தில்ராஜா’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- விஜய் சத்யா, ஷெரின், ஏ.வெங்கடேஷ், வனிதா விஜயகுமார், சம்யுக்தா, இமான் அண்ணாச்சி, கரோத்த ராஜா கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசமந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனிஸ், ரங்கநாதன், தணிக்கைவேல், முக்குத்தி முருகன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஏ.வெங்கடேஷ்.

ஒளிப்பதிவாளர் :- மனோ வி.நாராயணா.

படத்தொகுப்பாளர் :- சுரேஷ் அர்ஸ்.

இசையமைப்பாளர் :- அம்ரிஷ்.

தயாரிப்பு நிறுவனம் :- கோல்டன் ஈகிள் ஸ்டுடியோ.

தயாரிப்பாளர் :- கோவை பாலசுப்ரமணியம்.

ரேட்டிங் :- 2.75./5.

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர பக்தரான கதாநாயகன் விஜய் சத்யா, மனைவி ஷெரின் மற்றும் தனது 5 வயது மகளுடன் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

செல்ல மகளின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தனது மனைவி ஷெரின் மகளுடன் வெளியே சென்றுவிட்டு திரும்பும் போது, எதிர்பாராத விதமாக பிரச்சனை ஒன்று துரத்தி கொண்டு வருகிறது.

அந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்காக கதாநாயகன் விஜய் சத்யா தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தன் மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கையால், அவர் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்திற்கும் மிகப்பெரிய அளவில் சிக்கல் உண்டாகிறது.

இந்த நிலையில், ஒரு பக்கம் வில்லன் கும்பலை சேர்ந்தவர்கள் துரத்த மறுபக்கம் காவல் துறையினர் துரத்த, குடும்பத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் கதாநாயகன் விஜய் சத்யா, அந்தப் பிரச்சினையில் இருந்து தப்பினாரா! தப்பில்லையா? என்பதுதான் இந்த ‘தில் ராஜா’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த தில் ராஜா திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் சத்யா நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் விஜய் சத்யா, ஆறடி உயரம், சிக்ஸ் பேக் உடல் என்று அதிரடி ஆக்‌ஷன் கதாநாயகனாக களமிறங்கி இருக்கிறார்.

மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக்கொண்டு அதில் இருந்து தப்பிப்பதற்காக தன்னை சுற்றி பதற்றமான சூழ்நிலை இருந்தாலும் அதை தன் முகத்தில் காட்டாமல் சமாளிக்கும் காட்சிகளில் நடிப்பில் அமர்க்களம் படுத்திருக்கிறார்.

கதாநாயகன் விஜய் சத்யாவின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் டிவி பாலாவின் நையாண்டி வசனங்கள் சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறது.

கதாநாயகன் விஜய் சத்யாவின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷெரின், பாடல்களுக்கு மட்டும் பயன்படும் கதாநாயகியாக அல்லாமல் திரைக்கதையோடு பயணிக்கும் கதாநாயகியாக அருமையாக நடித்திருக்கிறார்.

அமைச்சர் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஏ.வெங்கடேஷ் நடிப்பின் மூலம் மிரட்டி இருக்கிறார்.

அவரது மனைவியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமாருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வேலை இல்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமே.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சம்யுக்தாவின் காக்கி சட்டை சீருடையை மறந்து ரசிகர்கள் ரசிக்கும் அளவுக்கு கவர்ச்சி காவல்துறை அதிகாரியாக வலம் வருகிறார்.

விஜய் டிவி பாலாவிற்க்கு கவுண்டர் அடிக்கும் இமான் அண்ணாச்சியின் காட்சிகள் திரைப்படத்திற்கு எடுபடவில்லை.

கு.ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர்,  வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை வேலையை செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மனோ வி.நாராயணாவின் ஒளிப்பதிவு மூலம் சேசிங் காட்சிகளை அதிவேகமாகவும், பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும், சண்டை காட்சிகளை அமர்க்களமாகவும் திரைப்படமாக்கியிருக்கிறார்

இசையமைப்பாளர் அம்ரீஷ் இசையில், பாடல்கள். பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறார்.

இயக்குநர் ஏ.வெங்கடேஷ் நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருந்தாலும், பலமான தன் கமர்ஷியல் ஃபார்மூலாவை பக்கவாக கையாண்டு பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த திரைப்படமாக மட்டுமல்லாமல் திரில்லர் அனுபவத்தை மிக அருமையாக கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில், இந்த ‘தில் ராஜா’ திரைப்படம் ஒகே.