‘சிக்னல் அட் 11:30’ திரைப்பட விமர்சனம.

நடிகர் & நடிகைகள் :- சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா, பவ்யா திரிகா, முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ், ஆர்யன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மலர்விழி நடேசன்.

ஒளிப்பதிவாளர் :- ராஜா பட்டாச்சார்ஜி.

படத்தொகுப்பாளர் :- ஆர். கலைவாணன்.

இசையமைப்பாளர் :- டி. இமான்

தயாரிப்பு நிறுவனம் :- அலர் ஸ்டுடியோஸ்.

தயாரிப்பாளர்கள் – மலர்விழி நடேசன், ஷிவானி சுப்பிரமணி.

மக்கள் தொடர்பு :- சுரேஷ் சந்திரா ( D one )

வெளியீட்டு தேதி :- 27, நவம்பர்  2026.

ரேட்டிங் :-  3.5./5.

ஒரு சாதாரண இரவு நேரப் பயணம்… எதிர்பாராத ஒரு சந்திப்பு… அதன்பிறகு வாழ்க்கையையே மாற்றிவிடும் சில சம்பவங்கள்… இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் சிறப்பாக உருவாகியிருக்கும் திரைப்படம்தான் இந்த ‘சிக்னல் அட் 11.30’.

கதையின் மையமாக இருப்பது  கதாநாயகன் சந்தோஷ் பிரதாப், கதாநாயகி புஜிதா பொன்னாடா ஆகியோரின் வாழ்க்கை. கதாநாயகி புஜிதா பொன்னாடாவை காதலிக்கும் கதாநாயகன் சந்தோஷ் பிரதாப்,  காதலை சொல்லும்போது ஆரம்பத்தில் அவருடைய மறுப்பையும் பின்னர் சந்தித்தாலும் பின் இருவரும் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழத் தொடங்குகிறார்கள்.

அது இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம், தந்தை ஜெயப்பிரகாஷ் தனது மகள்  பவ்யா திரிகா வேலை முடிந்து அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பாததால் பதற்றமடைகிறார்.

தனது மகள் பவ்யா திரிகா எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் காவல்துறையிடம்  ஜெயப்பிரகாஷ் புகார் அளிக்கிறார்.

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினாலும் பவ்யா திரிகா எங்கு சென்றார் என்பது தெரியாமல் வழக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் கதாநாயகன் சந்தோஷ் பிரதாப்க்கும், காணாமல் போன பவ்யா திரிகாவுக்கும் என்ன தொடர்பு?, கதாநாயகி புஜிதா பொன்னாடா பவ்யா திரிகாவுக்கும் இடையே இருக்கும் உறவு என்ன?, இரவு நேரத்தில் நடந்த அந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? என்பதுதான் இந்த ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சந்தோஷ் பிரதாப், நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், சித்தார்த் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கதாபாத்திரத்தின் உள்ளே இருக்கும் மர்மத்தையும், மனதில் ஓடும் குழப்பங்களையும் வெளிப்படுத்தும் விதத்தில் அவரது நடிப்பு மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது.

தன்னை ஒரு பெரிய கதாநாயகனாக காட்டிக் கொள்ளாமல், கதாபாத்திரத்திற்கு தேவையான அளவில் எதார்த்தமாக நடித்திருப்பது சந்தோஷ் பிரதாபுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி.

குறிப்பாக கதையின் பல்வேறு கட்டங்களில் வெளிப்படும் அவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக புஜிதா பொன்னாடா, நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் புஜிதா பொன்னாடா, தாரா கதாபாத்திரத்தில் அமைதியான மற்றும் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாபுடன் அவர் இணைந்து வரும் காட்சிகளில் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக அமைந்திருக்கிறது.

முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவ்யா திரிகா, ஹாசினி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

கதையின் உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும், கதாபாத்திரத்தின் வெவ்வேறு தன்மைகளையும் வெளிப்படுத்தும் விதத்திலும் அவரது நடிப்பு பாராட்டுக்குரியது.

தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், மகளை காணாமல் தவிக்கும் ஒரு தந்தையின் மனநிலையை மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

மகளுடன் அவர் வரும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் திரைப்படத்திற்கு ஒரு நல்ல உணர்ச்சிப் பின்னணியை கொடுக்கிறது.

முனிஷ்காந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் வந்து தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.

மற்ற நடிகர்களும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் டி. இமான் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் திரைப்படத்தின் உணர்வுகளுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது.

குறிப்பாக சஸ்பென்ஸ் காட்சிகளில் பின்னணி இசை விறுவிறுப்பை அதிகரிக்க உதவுகிறது.

‘ஜோ ஜோ மா’ பாடல் தந்தை – மகள் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துகிறது.

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜியின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

கொடைக்கானலின் இயற்கை அழகையும், நகர்ப்புற காட்சிகளையும் அழகாக திரைப்படமாக்கியிருக்கிறார்.

இரவு நேர காட்சிகளிலும், கதையின் மர்மமான சூழலிலும் ஒளிப்பதிவு சிறப்பாக கவனம் பெறுகிறது.

படத்தொகுப்பாளர் ஆர். கலைவாணன், வெவ்வேறு சம்பவங்களை இணைத்து கதையை நகர்த்தியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. இருப்பினும் சில காட்சிகளில் தேவையற்ற நீளத்தை குறைத்திருந்தால் திரைப்படம் இன்னும் வேகமாக நகர்ந்திருக்கும்.

கதையை நேரடியாக சொல்லாமல், வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களை இணைத்து கதை சொல்லும் முறையை பயன்படுத்தியிருப்பது படத்தின் சஸ்பென்ஸுக்கு வலு சேர்க்கிறது.

இறுதிக்கட்ட காட்சிகளில் திரைப்படம் விறுவிறுப்பை அதிகரித்து பல திருப்பங்களை கொடுக்கிறது.

ஆனால் கதையின் முடிவு இன்னும் வலுவாகவும், உணர்வுப்பூர்வமாகவும் அமைந்திருந்தால் திரைப்படம் முழுமையான திருப்தியை கொடுத்திருக்கும்.

ஒரு சாதாரண சம்பவத்தை மையமாக வைத்து அதற்குள் பல மர்மங்களை இணைத்து திரைக்கதையை மிகவும் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார் எழுத்து மற்றும் இயக்கத்தை கவனித்திருக்கும் மலர்விழி நடேசன்,

மொத்தத்தில், ஒரு சிக்னலில் நின்ற வாழ்க்கைகள்… அந்த இரவு 11.30 மணிக்குப் பிறகு எந்த திசையில் பயணிக்கின்றன என்பதை மர்மத்துடன் சொல்லும் திரைப்படம் இந்த ‘சிக்னல் அட் 11.30’.

CLOSE
CLOSE
error: Content is protected !!