‘ரைட்’ திரைப்பட விமர்சனம.
நடிகர் நடிகைகள்:- நட்டி சுப்ரமணியம், அருண் பாண்டியன், அக்ஷரா ரெட்டி, மூணார் ரமேஷ், வினோதினி வைத்தியநாதன், ஆதித்யா சிவகுமார், யுவினா பார்த்தவி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சுப்ரமணியன் ரமேஷ்குமார்.
ஒளிப்பதிவாளர் :- எம்.பத்மேஷ்.
படத்தொகுப்பாளர் :- நாகூரன் ராமச்சந்திரன்.
இசையமைப்பாளர் :- குணா பாலசுப்ரமணியன்.
தயாரிப்பு நிறுவனம் :- ஆர்டிஎஸ் பிலிம் பேக்டரி.
தயாரிப்பாளர் :- திருமால் லட்சுமணன் & டி.சியாமளா.
ரேட்டிங் :- 3./5.
காவல்துறை ஆய்வாளரான கதாநாயகன் நட்டி, இந்திய பாரதபிரதமர் வருகையால் பாதுகாப்பிற்காக சென்ற நிலையில், அவருடைய கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர், எங்கிருந்தோ தொழில்நுட்ப உதவியுடன் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதோடு, காவல் நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்களில் பல வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், காவல் நிலையத்தில் இருப்பவர்கள் வெளியே சென்றால் அந்த வெடிகுண்டுகள் தானாகவே வெடிக்கும் என அந்த மர்ம நபர் மிரட்டுகிறார்.
தன்னுடைய மகனை காணவில்லை என வெடி குண்டுகள் உள்ள காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் அருண் பாண்டியன், திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த பெண் காவல்துறை உதவி ஆய்வாளர் உள்ளிட்ட சில காவலர்கள், இரண்டு கைதிகள் ஒரு திருடன் தங்கதுரை காவல் நிலையத்திற்குள் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள்.
இந்திய பாரத பிரதமர் நிகழ்ச்சி நடக்கும் போது காவல் நிலையத்தில் உள்ள பிரச்சனைகள் தெரிந்தால் பதற்றம் அடிகரிக்கும் நிலையில் , வெளியே தெரியாத அளவில், பிரச்சனையை சமாளிக்க காவல்துறை முயற்சிக்க, அந்த மர்ம நபர் தனது தேவையை தெரியப்படுத்துகிறார்.
அந்த மர்ம நபரை காவல் துறையினர் கண்டு பிடித்தார்களா?, கண்டு பிடிக்கவில்லையா?, காவல் நிலையத்தில் சிக்கியிருப்பவர்களை காப்பாற்றப்பட்டார்களா? காப்பாற்றப்படவில்லையா?,
காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்த அந்த மர்ம நபர் யார்? எதற்காக காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்தார் என்பதுதான் இந்த ‘ரைட்’ மீதிக்கதை.
இந்த ரைட் திரைப்படத்தில் கதாநாயகனாக நட்டி நடித்திருக்கிறார்.
கதாநாயகன் நட்டிதான் கதாநாயகன் என்ற அடையாளம் இருந்தாலும், கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் கதைக்கு ஏற்ப மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்த ‘ரைட்’ திரைப்படத்தின் முதல் பாதியில் கதாநாயகன் நட்டி பல காட்சிகளில் இடம்பெறவில்லை என்றாலும், திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சியின் போது திடீரென்று கதைக்குள் எண்ட்ரி கொடுத்து, கதையில் போடப்பட்ட அனைத்து முடிச்சுகளையும் அவிழ்த்து தன்னை கதாநாயகனாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.
மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கும் அருண் பாண்டியன், தன்னுடைய மகன் காணவில்லை என்ற பரிதவிப்பையும், தனது மகனுக்கு ஏதாவது நடந்திருக்குமோ என்ன ஆனது என்ற கவலையையும் தன் நடிப்பின் மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கும் அருண் பாண்டியன், தன் மகன் பற்றிய புகாரை சரியாக விசாரிக்காத காவல்துறையினர் மீது கோபம் படுவதும், வெடிகுண்டு வைக்கப்பட்ட காவல் நிலையத்தில் சிக்கிக் கொள்வதும், திடீரென்று மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கும் அருண் பாண்டியன், மீது அனைவருக்கும் எழும் சந்தேகம் என்று திரைப்படத்தில் உள்ள திரைக்கதைக்கு மாபெரும் அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
இந்த ரைட் திரைப்படத்தில் கதாநாயகியாக அக்ஷரா ரெட்டி, நடித்துள்ளார்.
பெண் காவல்துறை துணை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகி அக்ஷரா ரெட்டி, காவல் நிலையத்தில் நடக்கும் சூழ்நிலையை புரிந்துக்கொண்டு அதற்காகவே செயல்படுவது, எப்படியாவது காவல் நிலையத்தில் உள்ள பிரச்சனையை சமாளிக்க முயற்சிப்பது என உண்மையான காவல்துறையினர் போல் அதிரடியாக நடித்து கதாப்பாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
வெடிகுண்டு வைத்திருக்கும் அந்தக் காவல் நிலையத்தில் உள்ள காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மூணார் ரவி, எதார்த்தமான நடிப்பின் மூலம் பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை சர்வசாதாரணமாக நடித்து முகத்தில் நவரசங்களை காண்பித்து மிக சிறப்பான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வெடிகுண்டுக்கு அடியில் உட்கார்ந்து கொண்டு திரைப்படத்தின் இறுதி வரை உட்கார்ந்தபடியே தன்னுள் இருக்கும் பீதியையும், பதற்றத்தையும் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் பாராட்டு பெறுகிறார்.
நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வினோதினி வைத்தியநாதன், இளம் கதாநாயகன் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதித்யா சிவகுமார் மற்றும் யுவினா, திருடன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தங்கதுரை, பெண் காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை என அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எம்.பத்மேஷ், ஒளிப்பதிவு மூலம் ஒரே தளத்தில் பயணிக்கும் உணர்வே ஏற்படாத வகையில் அனைத்து காட்சிகளை மிகச்சிறப்பாக திரைப்படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் குணா பாலசுப்பிரமணியனின் இசையில் பாடல்கள் பின்னணி இசை கதாபாத்திரங்களிடம் இருக்கும் பயத்தையும் பதட்டத்தையும், மிகச் சிறப்பான
வகையில் மிக கச்சிதமாக பயணித்து இருக்கிறார்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு பழிவாங்கும் கதையை புதிய வடிவில் கொடுக்க முயற்சித்து அதில் சிறப்பான திரை கதையை கொடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் சுப்பிரமணியன் ரமேஷ்குமார்.
மொத்தத்தில், ‘ரைட்’ திரைப்படம் தேர்ச்சி.











