‘லீடர்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- லெஜென்ட் சரவணன், ஷாம், சந்தோஷ் பிரதாப், ஆண்ட்ரியா, லால், பாயல் ராஜ்புத், மகாநதி சங்கர், O A.K சுந்தர், அமிர்தா ஐயர், வேல் அருணாச்சலம், “பாகுபலி” பிரபாகரன், பாத்மேன், யோகிராம், நிரஞ்சன் தாமஸ், படவா கோபி, அசோக் பாண்டியன், ஷோபன் பாபு, விஜயலட்சுமி, முருகன், ஜெயஸ்மிர்தா, குமார் நடராஜன், V. T. V கணேஷ், அறந்தாங்கி நிஷா, இயல், ஐஸ்வர்யா, மரியம் ஜார்ஜ், “ஆதித்யா” கதிர், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஆர்.எஸ். துரை செந்தில் குமார்.
ஒளிப்பதிவாளர் :- வெங்கடேஷ் எஸ்.
படத்தொகுப்பாளர் :- பிரதீப் இ ராகவ்.
இசையமைப்பாளர் :- ஜிப்ரான் வைபோதா.
தயாரிப்பு நிறுவனம் :- லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- லெஜென்ட் சரவணன்.
மக்கள் தொடர்பு :- நிகில் முருகன்.
ரேட்டிங் :- 4.1./5.
தூத்துக்குடி பகுதியில் உள்ள கார் மெக்கானிக் கேரேஜ்யில் கார் மெக்கானிக்காக பணிபுரிந்து வரும் கதாநாயகன் லெஜண்ட் சரவணன், தன் மகளுடன் அதே ஏரியாவில் வாழ்ந்து வருகிறார்.
கதாநாயகன் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி துறைமுகத்திற்கு வரும் அனைத்து வெளிநாட்டு கார்களை சர்வீஸ் செய்து வருகிறார்.
தூத்துக்குடி துறைமுகத்திற்கு வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக வந்த கண்டெய்னர் ஒன்று இருப்பதாகவும் அதில் ஏதோ ஒரு மர்மமான விஷயம் இருப்பதாகவும் காவல்துறை அதிகாரியான ஆண்ட்ரியா சந்தேகப்படுகிறார்.
இதை கதாநாயகன் லெஜண்ட் சரவணன் மூலம் கண்டுபிடிக்க காவல்துறை அதிகாரியான ஆண்ட்ரியா முயற்சி செய்கிறார்.
ஆனால் இந்த நிலையில் கதாநாயகன் லெஜண்ட் சரவணன் காவல்துறை அதிகாரியான ஆண்ட்ரியா விடம் மறுப்பு தெரிவிக்கிறார்.
ஆனால் காவல்துறை அதிகாரியான ஆண்ட்ரியா, கதாநாயகன் லெஜண்ட் சரவணனை பகடைக்காயாக வைத்து கண்டெய்னரில் இருக்கும் மர்மமான விஷயத்தையும் அதற்கு பின்னாடி இருக்கும் பாகுபலி பிரபாகரனையும் காவல்துறை அதிகாரியான ஆண்ட்ரியா பிடிக்கிறார்.
இந்த நிலையில் மேலும் அந்த கண்டெய்னரில் இருக்கும் மர்மமான பொருட்களை அழித்து பாகுபலி பிரபாகரனை கதாநாயகன் லெஜெண்ட் சரவணன் கொலை செய்கிறார்.
வெளிநாட்டிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த கண்டெய்னரில் இருக்கும் அந்த மர்மமான பொருளின் சொந்தக்காரரான வில்லன் சந்தோஷ் பிரதாப் கதாநாயகன் லெஜண்ட் சரவணனை பழி வாங்குவதற்காக வெளிநாட்டில் இருந்து வருகிறார்.
இறுதியில் வில்லன் சந்தோஷ் பிரதாப் கதாநாயகன் லெஜண்ட் சரவணனை பழி தீர்த்தாரா?, பழி தீர்க்கவில்லையா?, கதாநாயகன் லெஜண்ட் சரவணன் யார்? வெளிநாட்டில் இருந்து வந்த கண்டெய்னரில் உள்ள மர்மமான பொருட்களை கதாநாயகன் லெஜண்ட் சரவணன் அழிக்க காரணம் என்ன? என்பதுதான் இந்த ‘லீடர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த லீடர் திரைப்படத்தில் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் லெஜண்ட் சரவணன், தனது முதல் திரைப்படத்தை விட இந்த திரைப்படத்தில் நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
மாசான காட்சிகள் மற்றும், ஆக்ஷன் காட்சிகள், மிகவும் ஸ்டைலிசாக ஆகியவற்றில் கனக்கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஆக்ஷன் காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கவனிக்க வைத்து இருக்கிறார்.
எமோஷனல் காட்சிகளில் கண் கலங்கவும் வைத்து இருக்கிறார்.
இந்த லீடர் திரைப்படத்தில் கதாநாயகியாக பயல் ராஜ்புத் நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் பயல் ராஜ்புத் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆண்ட்ரியா மற்றும் ஷாம் இருவரும் மிகவும் சிறப்பாக நடித்து திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி இருக்கிறார்கள்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், மூன்று விதமான கதாபாத்திரத்தில் வந்து திரைப்படத்தில் மிகப்பெரிய அளவில் நடிப்பு மூலம் மிரட்டி இருக்கிறார்.
இந்த லீடர் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமே ஆக்ஷன் காட்சிகள்தான் பைட் மாஸ்டர் மகேஷ் மேத்யூ மிகப்பெரிய வாழ்த்துக்கள்.
ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் எஸ் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ்.எஸ், சண்டைக்காட்சிகள் அனைத்தும் திரைப்படமாக்கிய விதம் ரசிக்க கூடிய விதத்தில் உள்ளது.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது.
பின்னணி இசை திரைக்கதையின் வேகத்திற்கு அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகள் இருந்தாலும், அனைத்தையும் ரசிக்கும்படி அளவான சத்தத்தோடு கையாண்டு திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
திரைப்படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதையே நகர்த்தி முழுக்க முழுக்க கமர்ஷியல் பாணியில் கதையை நகர்த்தி ஆக்ஷன், சென்டிமெண்ட், மாஸ் டயலாக் ஆகியவற்றை சரியான அளவில் கொடுத்து ஆக்ஷன் திரைப்படமாக இருந்தாலும், தந்தை – மகள் செண்டிமெண்ட் மூலம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் திரைப்படமாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்.
மொத்தத்தில், ‘லீடர்’ அனைவரும் ரசிக்கும் ஆக்ஷன் திரைப்படமாக அமைந்திருக்கிறது.











