என் காதலே திரைப்பட விமர்சனம.
நடிகர் & நடிகைகள் :- லிங்கேஷ், திவ்யா, லியா, காட்பாடி ராஜன், மதுசூதனன், மாறன், கஞ்சா கருப்பு, ‘சித்தா’ தர்ஷன், செந்தமிழ், ஈஸ்வர் பாபு, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஜெயலட்சுமி.
ஒளிப்பதிவாளர் :- டோனிசென் & வெங்கடேஷ்.
படத்தொகுப்பாளர் :- கோபி கிருஷ்ணா – ரஞ்சித்.
இசையமைப்பாளர் :- சாண்டி சாண்டல்லோ.
தயாரிப்பு நிறுவனம் :- ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெய்ன்மென்ட்.
தயாரிப்பாளர் :- ஜெயலட்சுமி.
ரேட்டிங் :- 1.5./5.
மீனவ குடியிருப்பில் வசிக்கும் மீனவரான கதாநாயகன் லிங்கேஷ, தனது அத்தை மகள் கதாநாயகி திவ்யா சிறுவயது முதல் கதாநாயகன் லிங்கேஷை
காதலிக்கிறார்.
இந்நிலையில் தமிழ் நாட்டின் கலாச்சாரத்தை கற்க வெளிநாட்டில் இருந்து வரும் வெள்ளைக்காரப் பெண் மற்றொரு கதாநாயகி லெயா. அவர்களுக்கு கதாநாயகன் லிங்கேஷ் உடனிருந்து உதவுகிறார்.
நட்பாக பழகும் கதாநாயகி லெயா கதாநாயகன் லிங்கேஷ் இவர்களுக்குள் காதல் மலர்கிறது.
ஒரு கட்டத்தில் மற்றொரு கதாநாயகி லெயா கதாநாயகன் லிங்கேஷ்க்கு காதலாக மாற அந்த காதல் விவகாரம் கதாநாயகி திவ்யாவுக்கு தெரியவர அதிர்ச்சியாகிறார்.
சிறு வயதில் இருந்து கதாநாயகி திவ்யா காதலித்து வரும் கதாநாயகன் லிங்கேஷ்
காதலில் ஒன்று சேர்ந்தார்களா? சேரவில்லையா? என்பதுதான் இந்த என் காதலே திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த என் காதலே திரைப்படத்தில் கதாநாயகனாக
லிங்கேஷ் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் லிங்கேஷ் சராசரி மீனவ குப்ப வாலிபனாக எதார்த்தமான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
இந்த என் காதலே திரைப்படத்தில் கதாநாயகியாக திவ்யா நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் திவ்யா கதாநாயகனை சுற்றிச் சுற்றி வருவது அவர்மீது வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்துவது என மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
இந்த என் காதலே திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக வெள்ளைக்காரப் பெண் லெயா நடித்திருக்கிறார்.
கதாநாயகனை காதலிக்கும் வெள்ளைக்கார காதலியாக நடித்திருக்கும் லெயா சேலை கட்டிக் கொண்டு தமிழ் நாட்டு பெண்ணாக தன்னை காட்டிக் கொள்ள முயல்வது அருமையான அழகு.. அதுமட்டுமல்ல அவரும் அழகோ அழகு. காதல் பறிபோய் விடுமோ என்ற பதற்றம் அவரது நடிப்பில் வெளிப்படுவது மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
மாறன், கஞ்சா கருப்பு இருவரும் சேர்ந்து காமெடி செய்து கலகலக்க வைக்கின்றனர். உன்னால என் மனைவிக்கு குழந்தை பிறந்தது நன்றி என்று மாறனிடம் கஞ்சா கருப்பு சொல்லி அவர் மனைவியிடம் சிக்கவிடுவது கலகலப்பாக உள்ளது.
ஒளிப்பதிவாளர் டோனி சான்,
வெங்கடேஷ் ஒளிப்பதிவு திரைக்கதைக்கு கைகொடுக்கிறார்
இசையமைப்பாளர் சாண்டி சாண்டல்லோ இசையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
மீனவ குப்ப கதையாக இருந்தாலும் அதை முக்கோண காதல் கதையாக உருவாக்கி திருப்பங்கள் சேர்த்து ரசிக்கும் விதமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெயலட்சுமி.
மொத்தத்தில் – இந்த என் காதலே திரைப்படம் சுமார்.











