இரண்டு குழந்தைகளுக்கு 21 வயதில் தாயான நடிகை ஸ்ரீலீலா !!

இரண்டு குழந்தைகளுக்கு 21 வயதில் தாயான நடிகை ஸ்ரீலீலா !!

சென்னை 06 டிசம்பர் 2024 நடிகை ஸ்ரீலீலாவின் திரைப்பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.

நடிகை ஸ்ரீலீலா, நடிகர் அல்லு அர்ஜுனுடன் புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

நடிப்பு மற்றும் நடனம் தனது திரைத்தோற்றத்தாலும் மிகக் குறுகிய காலக்காலத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றவர் நடிகை ஸ்ரீலீலா.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கிஸ் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் அறிமுகமானார் நடிகை ஸ்ரீலீலா.

கன்னட திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கில் பெல்லி சண்டாடி (2021), ஜேம்ஸ் (2022) திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்தார்.

நடிகர் ரவிதேஜாவின் தமாகா திரைப்படத்தின் பாடல் ஸ்ரீலீலாவை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்று திரைத்துறை வாழ்க்கையை உயர்த்தியது.

இதனையடுத்து நடிகர் பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி, நடிகர் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் என பட்டையை கிளப்பினார்.

குர்சி மாடதாபெட்டி பாடலுக்கு ஸ்ரீலீலா போட்ட குத்தாட்டம் மிகப்பெரிய அளவில் வைரலாக அமைந்தது.

புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுடன் ஒரு பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார்.

நடிகை ஸ்ரீலீலா பற்றி யாருக்கும் தெரியாத விவரங்களை பார்க்கலாம்.

மகப்பேறு மருத்துவரான ஸ்வர்ணலதா மற்றும் தொழிலதிபரான சுரபனேனி சுதாகர் ராவ் ஆகியோரின் மகளாக 2001-ல் பிறந்தார் ஸ்ரீலீலா.

இவர் பிறப்பதற்கு முன்பே பெற்றோர் பிரிந்துவிட்டனர்.

தாயுடன் வளர்ந்த ஸ்ரீலீலாவின் ஆசை மருத்துவராக வேண்டும் என்பதுதான் ஆனால் இடையில் நடிகை ஸ்ரீலீலாவின் திரைப்பட துறை மீது ஆசை துளிர்விட்டது.

நடிகை ஸ்ரீலீலாவின் ஆசைக்கு குடும்பத்தினர் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதன் பிறகு குடும்பத்தினர் ஸ்ரீலீலாவின் ஆசைக்கு ஓகே சொல்லி பச்சைக்கொடி காட்டி விட்டனர்.

நடிகை ஸ்ரீலீலா இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை 2022 ஆண்டு தத்தெடுத்து வளர்க்க தொடங்கினார்.

பை டு லவ் என்ற கன்னட திரைப்படத்தில் இளம் வயது தாய் கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதன்பின் குழந்தைகளைத் தத்தெடுக்க முடிவு செய்தார்.

தத்தெடுத்த இரண்டு குழந்தைகளுக்குத் தாயானபோது ஸ்ரீலீலாவுக்கு வயது 21.

ஆண் மற்றும் பெண் குழந்தைகளைத் தத்தெடுத்தார்.

மேலும் தற்போது வரை பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கும் இன்று வரை உதவி செய்து வருகிறார்.

error: Content is protected !!