உலகநாயகனை நேரில் அழைத்து கெளரவித்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி.!

சென்னை 12 ஜூன் 2022 உலகநாயகனை நேரில் அழைத்து கெளரவித்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தற்போது ஜூன் 3ஆம் தேதி வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் தெலுங்கு திரைப்பட உலகிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இதையொட்டி, ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற உலகநாயகன் நடிகர் கமலஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரையும் தெலுங்கு `மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி தனது வீட்டிற்கு அழைத்து கெளரவித்துள்ளார்.

அப்போது, இந்தி நடிகர் சல்மான்கானும் உடனிருந்தார்.