தங்கலான் திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- சீயான் விக்ரம், பூ பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்ட் கிரோன், முத்து குமார், ப்ரீத்தி கரன், அர்ஜுன், ஹரி கிருஷ்ணன்,
மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பா.இரஞ்சித்.
ஒளிப்பதிவாளர் :- ஏ. கிஷோர் குமார்.
படத்தொகுப்பாளர் :- செல்வா ஆர் கே.
இசையமைப்பாளர் :- ஜி.வி பிரகாஷ் குமார்.
தயாரிப்பு நிறுவனம் :- ஸ்டுடியோ கிரீன், நீலம் புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- கே.ஈ.ஞானவேல் ராஜா.
ரேட்டிங் :- 3.5./5
வட ஆற்காடு பகுதியில் வேப்பூர் கிராமத்தில் உள்ள அனைத்து கிராம மக்கள் அந்த ஊரில் ஜமீன்தாராக இருக்கும் முத்துக்குமாருக்கு அடிமையாக ஜமீன்தார் ஆட்கள் சொல்லும் வேலைகளை செய்து கொண்டு மக்கள் அனைவரும் அந்த கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால் அதே கிராமத்தில் வாழும் கதாநாயகன் விக்ரம் குடும்பம் மட்டும் ஜமீன்தாருக்கு அடிமையாக வேலை செய்யாமல் அவரது சொந்த நிலத்தில் பயிர் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.
ஜமீந்தார் முத்துக்குமார் நம்மளை மீறி நம்மை மதிக்காமல் அவனது நிலத்தில் பயிரிட்டு வரும் கதாநாயகன் விக்ரமின் பயிரிட்ட நெல்லுகள் அனைத்தையும் ஜமீன்தாரின் ஆட்கள் தீ வைத்து கொளுத்தி விடுகிறார்கள்.
இதனால் வெள்ளைக்காரர்களுக்கு கதாநாயகன் விக்ரம் குடும்பத்தினர் கட்ட வேண்டிய வரி பணத்தை கட்டிவிடுவதாகவும் பதிலுக்கு ஜமீனுக்கு அடிமையாக வேலை செய்ய சொல்கிறார்.
இந்த நிலையில் கோலார் பகுதியில் தங்கத்தை தேடி பல அரசர்கள் அலைந்த நிலையில், வெள்ளைக்காரர்கள் தங்கத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.
வேப்பூர் கிராமத்தில் உள்ள மக்கள் தான் தங்கத்தை எடுக்க சரியான ஆட்கள் என வெள்ளைக்கார துரையான கிளெமண்ட் டேனியல் கால்டாகிரோன் கதாநாயகன் சியான் விக்ரம் வசிக்கும் கிராமத்துக்கு வருகிறான்.
அதன் பிறகு ஜமீன்தார் சொன்ன அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று தங்கத்தை தேடி வந்த வெள்ளைக்கார துரைக்கு தங்கத்தை கண்டுபிடிக்க உதவி செய்யப் போவதாக முடிவு செய்கிறான் கதாநாயகன் விக்ரம்.
கதாநாயகன் விக்ரம் இதனால் இந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களையும் அழைத்து கொண்டு தங்கம் இருக்கும் இடத்திற்கு செல்கிறான்.
கதாநாயகன் விக்ரமுடன் இந்த கிராமத்தில் உள்ள மக்கள்கள் அனைவரும் தங்கத்தை தேடி செல்ல தங்கம் இருக்கும் இடத்தை பல ஆண்டு காலமாக ஒரு அமானுஷ்ய சக்தி பாதுகாத்து வருகிறது.
இந்த அமானுஷ்ய சக்தி யார் ?பின்னணி என்ன? தங்கத்தை தேடி சென்ற ஊர் மக்களுக்கு தங்கத்தை கண்டுபிடித்தார்களா? கண்டு பிடிக்கவில்லையா? ? என்பதுதான் இந்த தங்கலான் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த தங்கலான் திரைப்படத்தில் கதாநாயகனாக சியான் விக்ரம் நடித்துள்ளார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் சீயான் விக்ரம் அவருடைய நடிப்பை பற்றி எப்படி சொல்ல முடியும் என்று தெரியவில்லை.
இந்த தங்கலான் திரைப்படத்திற்கு அவரின் உழைப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டக்கூடிய அளவில் இருக்கிறது.
இந்த தங்களான் திரைப்படத்தை கதாநாயகன் சீயான் விக்ரம் மட்டுமே அவருடைய நடிப்பால் மட்டுமே தோளில் சுமந்துள்ளார்.
இந்த தங்கலான் திரைப்படத்தில் கதாநாயகியாக பூ திரைப்படத்தில் நடித்த பார்வதி நடித்திருக்கிறார்.
கதாநாயகன் விக்ரம் மனைவியாக கதாநாயகி பார்வதி கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பின் முலம் மிரட்டி இருக்கிறார்.
கதாநாயகன் விக்ரம் கதாநாயகி பார்வதி இவர்களுக்கு இடையே இருக்கும் காதல் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது.
மற்றொரு கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார்.
ஆரத்தி கதாப்பாத்திரத்தில் மாளவிகா மோகனன் சிறப்பான நடிப்பை கொடுத்து மிரட்டி இருக்கிறார்.
பசுபதி வழக்கம்போல் அவரது அனுபவ நடிப்பை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
சீயானின் குடும்பமாக நடித்து இருக்கும் ப்ரீத்தி கரன், ஹரி கிருஷ்ணன், அர்ஜூன் இவர்களுக்கு கொடுத்த வேலையை மிகச்சிறப்பாக செய்துள்ளனர்.
ஜமீன்தாராக வரும் முத்துக்குமார் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்
ஆங்கிலேயர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டேனியல் கால்ட் கிரோன் மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் அவரின் ஒளிப்பதிவு மூலம் அனைத்துக் காட்சிகளும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்திருக்கிறார்.
தங்கலான் உலகத்திற்கே ஒளிப்பதிவு மூலம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை அழைத்து செல்கிறார்.
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமாரின் இசை மற்றும் பாடல்கள் அனைத்தும் திரைப்படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.
புதுவிதமான இசை கருவிகளை பயன்படுத்தி முன்னணி இசை மட்டும் அல்லாமல் காட்சிக்கு காட்சி மாறுப்பட்ட இசையை கொடுத்து திரையோட்டத்திற்கு பெரிய பலத்தை அளித்துள்ளார்.
தங்கலான் திரைப்படத்தின் மூலம் தான் சொல்ல வந்த அரசியலை மற்றும் அடிமைத்தனத்தையும், தங்கம் உள்ள நிலத்தின் அரசியலை வித்தியாசமான கதைக்களத்துடன் அவருடைய பாணியிலும் இயக்குனர் பா. ரஞ்சித் பேசியிருக்கிறார்.
கோலார் தங்க வயலில் பட்டியல் இனத்தை சேர்ந்த மக்கள் எப்படி வேலை பார்த்து தங்கத்தை எடுத்துக் கொடுத்தனர் என்கிற கதைக்களத்துடன் புத்தர் சிலையின் தலை துண்டிக்கப்பட்டது.
உழைக்கும் மக்களுக்கே நிலம் சொந்தம், ஜாக்கெட் அணியாத பெண்கள் ஜாக்கெட் அணிய வைக்கும் காட்சி, பாடல் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வேண்டும், இந்த நிலத்தின் பூர்வ குடி மக்கள் எப்படி மூத்த குடி மக்களை பட்டியல் இன மக்களாக மாற்றியது என அனைத்து அரசியலையும் ஆணித்தரமாக இருக்கிறார் இயக்குனர் பா. ரஞ்சித்.
மொத்தத்தில் இந்த தங்கலான் திரைப்படம் விக்ரமின் தனது ஒட்டுமொத்த உழைப்பையும் நடித்திருக்கும் நடிப்புக்காகவே திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பொக்கிஷம் தங்கலான்.











