ரகு தாத்தா திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- கீர்த்தி சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயக்குமார் ஜானகிராமன், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்தசாமி, இஸ்மத் பானு, ராஜேஷ் பாலச்சந்திரன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சுமன் குமார்.

ஒளிப்பதிவாளர் :- யாமினி யாக்னாமூர்த்தி.

படத்தொகுப்பாளர் :- டி.எஸ். சுரேஷ்.

இசையமைப்பாளர் :- ஷான் ரோல்டன்.

தயாரிப்பு நிறுவனம் :- ஹோம்பாலே பிலிம்ஸ்.

தயாரிப்பாளர் :- விஜய் கிரகந்தூர்.

ரேட்டிங் :- 2.5./5.

1960களின் காலகட்டங்களில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக இருந்த நிலையில் கதாநாயகி கீர்த்தி சுரேஷ் தாத்தா எம் எஸ். பாஸ்கர் மற்றும் அண்ணன் தாய் தந்தையிடம் வள்ளுவன் பேட்டை என்ற கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

கதாநாயகி கீர்த்தி சுரேஷ் அந்த ஊரில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.

அந்த கிராமத்தில் உள்ள ஹிந்தி பிரசார சபாவை நடத்த விடாமல் செய்து, ஹிந்தி ஆசிரியரை ஊரை விட்டு விரட்டி அடிக்கும் கதாநாயகி கீர்த்தி சுரேஷ் தீவிரமாக ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடும் இவருக்கு தமிழ் மொழி மீது மிகப் பெரிய அளவில் பற்று இருக்கிறது.

கதாநாயகி கீர்த்தி சுரேஷ் க. பா. என்ற புனை பெயரில் பத்திரிகைகளில் பெண்ணியம் சார்ந்த கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்.

கதாநாயகன் ரவீந்தர் விஜய். கதாநாயகி கீர்த்தி சுரேஷை ஒருதலையாக காதலித்து வருகிறார் இவர் முற்போக்கு சிந்தனையாளராக தன்னை சித்தரித்து கதாநாயகி கீர்த்தி சுரேஷிடம் நல்லபடியாக நடந்துக் கொள்கிறார்.

அவனுடைய தாத்தா எம்எஸ் பாஸ்கர் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உடனடியாக கதாநாயகி கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் நடத்த வேண்டும் என குடும்பத்தினர் அனைவரும் வற்புறுத்துகின்றனர்.

நான் வேலை பார்க்கும் வங்கியில் ஹிந்தி கற்று கொண்டால்தான் ப்ரோமோஷன் கிடைக்கும் நிலை வந்த போதும் ஹிந்தி கற்று கொள்ள மறுத்து விடுகிறார்.

கதாநாயகன் ரவீந்திர விஜய் என்பவரை கதாநாயகி கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்.

இந்த நிலையில் கதாநாயகன் ரவீந்திர விஜய் முற்போக்கு சிந்தனைவாதி இல்லை என்பது தெரிய வர, அவன் ஆணாதிக்க சிந்தனை கொண்டவர் என கதாநாயகி கீர்த்தி சுரேஷ் தெரிந்துவிடுகிறது.

கதாநாயகி கீர்த்தி சுரேஷ் ஹிந்தி கற்றுக்கொண்டு கல்கத்தாவில் உள்ள வங்கியில் ப்ரோமோஷன் வாங்கிக்கொண்டு கல்கத்தாவில் உள்ள வங்கி கிளைக்கு சென்று விட்டால் நடக்கவிருக்கும் இந்த திருமணம் நின்று போகும் என்ற எண்ணத்தில் ஹிந்தி கற்று கொள்ள ஆரம்பிக்கிறார்.

கதாநாயகி கீர்த்தி சுரேஷ் ஹிந்தியை எதிர்ப்பவர் ஹிந்தி கற்றுக்கொண்டு கல்கத்தாவில் உள்ள வங்கி கிளைக்கு சென்றாரா? செல்லவில்லையா?
அவர் நினைத்தது போல் கதாநாயகன் ரவீந்திர விஜய் நடக்கவிருந்த திருமணம் நின்றதா? நிக்கவில்லையா? என்பதுதான் இந்த ‘ ரகு தாத்தா திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ரகு தாத்தா திரைப்படத்தில் கதாநாயகனாக ரவீந்திர விஜய் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்து இருக்கும் ரவீந்திர விஜய் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இந்த ரகு தாத்தா திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

கதாநாயகி கீர்த்தி சுரேஷ் பெண்ணியம் பேசும் கதாபாத்திரத்தில் நடிப்பை துறுதுறுவெனவும் அதே சமயம் தன்னம்பிக்கையுடன் நடித்து இருக்கிறார்.

கதாநாயகி கீர்த்தி சுரேஷ் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம்.எஸ் பாஸ்கர் அவரது அவருடைய குசும்புதனத்தை அவர் வரும் அனைத்து காட்சிகளிலும் விட்டுக்கொடுக்காமல் மிகவும் அருமையாக நடித்து இருக்கிறார்.

கதாநாயகி கீர்த்தி சுரேஷிற்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அண்ணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கும் இஸ்மத் பானு டைமிங்கில் பேசி திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளார்.

மாமி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் தேவதர்ஷினி மிகவும் சிறப்பான நகைச்சுவையை வெளிப்படுத்தியுள்ளார்.

வங்கி மேலாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜிவ் ரவிந்திரனாதன், தப்பு தப்பாக தமிழில் பேசி நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் யாமினி யாக்னாமூர்த்தியின் ஒளிப்பதிவு 60களில் காலகட்டத்திற்கு ஏற்றார் போல் அழகாக ஒளிப்பதிவு மூலம் அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பின்னணி இசையை ரசிக்கும் படியாக அமைந்திருக்கிறது.

ஹிந்தி எதிர்ப்பையும், ஹிந்தி திணிப்பையும் என்ற விஷயத்தை வைத்து ஆண் ஆதிக்கத்தையும் மையமாக கதை திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுமன்குமார்.

ஹிந்தி எதிர்ப்பையும், ஹிந்தி திணிப்பையும் வைத்துக்கொண்டு மிகவும் அழுத்தமான திரைக்கதை இல்லாதது, காதபாத்திர உருவாக்கத்தில் நேர்த்தியின்மை போன்ற காரணங்களால் இந்த தாத்தாவை முழுமையாக ரசிக்க முடியவில்லை.

காலாகாலமாக நடந்து வரும் ஹிந்தி திணிப்பால் சமூகத்திற்கு ஏற்படும் பிரச்சனையை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவும் அருமையாகவும் சொல்லிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

ஹிந்தி திணிப்பையும்கலாச்சார திணிப்பையும் ஒன்றாக இணைத்து சொன்னவிதம் இயக்குனருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்..

மொத்தத்தில் இந்த “ரகு தாத்தா” திரைப்படம் சுமாராக இருக்கிறது.

error: Content is protected !!