ரெய்டு திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.75/5.
நடிகர் & நடிகைகள் :- விக்ரம் பிரபு, ஶ்ரீ திவ்யா, அனான்திகா, ஹரீஷ் பெய்ரடி, டேனியல், அன்னி பாப்பி, ரிஷி ரித்விக், சவுந்தர ராஜா, மற்றும் பலர்,
எழுத்து & இயக்கம் :- E.கார்த்தி.
ஒளிப்பதிவாளர் :- C. கதிரவன்.
படத்தொகுப்பாளர் :- M. மணிவண்ணன்.
இசையமைப்பாளர் :- சாம் C.S.
தயாரிப்பு நிறுவனம்:- G பிக்சர்ஸ் & ஓபன் ஸ்கிரீன் பிக்சர்ஸ், M ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர் :- S. K. கணிஷ்க்
G.மணிக் கண்ணன்.
ரேட்டிங் :– 2.75/ 5.
சிட்டியில் மிகவும் நேர்மையான காவல்துறை அதிகாரியான கதாநாயகன் விக்ரம் பிரபு சிட்டியில் உள்ள அனைத்து ரவுடிகளையும் அடித்து துவம்சம் செய்கிறார்.
அப்படி சிட்டியில் மிகப்பெரிய தாதாவாக இருந்து வரும் வேலு பிரபாகரன் மற்றும் அவரிடம் வேலை பார்த்த விலகி சென்று தனியாக ரவுடிசம் செய்து வரும் ரிஷி மற்றும் சௌந்தர்ராஜாவிடம் கதாநாயகன் விக்ரம் பிறப்புக்கும் பெரிய அளவில் பிரச்சனை ஏற்படுகிறது.
இதில் ரிஷியின் தம்பியான டேனியலை கதாநாயகன் விக்ரம் பிரபுவால் நடுரோட்டில் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் ஒடவிட்டு அவமானப்படுத்தி கதாநாயகன் விக்ரம் பிரபு என்கவுண்டர் செய்கிறார்.
இதனால் தனது தம்பியை என்கவுண்டர் செய்த கதாநாயகன் விக்ரம் பிரபு மீது கொலைவெறியில் அவரை எப்படியாவது கொலை செய்து விட வேண்டும் என ரிஷி மற்றும் சௌந்தர் ராஜா, கதாநாயகன் விக்ரம் பிரபு மற்றும அவரது காதலி கதாநாயகி ஶ்ரீ திவ்யாவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுகிறார்.
இதில் உயிர் தப்பிக்கும் கதாநாயகன் விக்ரம் பிரபு, தன் தனது காதலியை கொலை செய்த ரவுடி ரிஷி மற்றும் சௌந்தர்ராஜாவை பழி வாங்கினாரா? வாங்கவில்லையா? என்பதுதான் இந்த ரெய்டு திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ரெய்டு திரைப்படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபு மிடுக்கான காவல்துறை அதிகாரியாக திரைப்படம் முழுக்க வலம் வருகிறார்.
ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார் கதாநாயகன் விக்ரம் பிரபு.
இந்த ரெய்டு திரைப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார்.
கதாநாயகி ஶ்ரீ திவ்யா காதல் காட்சிகளில் கதாநாயகன் விக்ரம் பிரபுவுடன் ஆங்காங்கே காதல், பாடல் காட்சிகளில் மட்டுமே வந்து அழகு சிலையாக வந்து கவர்ந்து இருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஶ்ரீ திவ்யாவுக்கு அதிகம் வேலை இல்லை.
வில்லத்தனத்தில் ரிஷி ரித்விக் மிரட்டியிருக்கிறார் தனது தம்பியை என்கவுண்டர் செய்த கதாநாயகன் விக்ரம் பிரபுவை பழி வாங்க துடிக்கும் காட்சிகளில் கவனிக்க வைத்திருக்கிறார்.
கிளைமாக்ஸ் ஆக்சன் காட்சியில் ரிஷி ரித்விக் கதாநாயகன் விக்ரம் பிரபுவிடம் வால் சுற்றும் காட்சியில் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார்.
ரிஷி ரித்விக்வின் நண்பராக நடித்திருக்கும் சௌந்தரராஜா நீயா நானா என போட்டி போட்டு நடித்து இருக்கிறார
சௌந்தரராஜா தனது காதலிடம் காதலை சொல்லாமல் நடித்த அனைத்தும் காட்சிகளில் அருமையாக ஸ்கோர் செய்திருக்கிறார்.
இயக்குனர் வேலு பிரபாகரன் வில்லனாக ஒரு அனுபவம் நடிப்பை கொடுத்திருக்கிறார்.
விஷயம் தம்பியாக வரும் டேனியல் மிக அருமையாக நடித்திருக்கிறார்.
ஹரிஷ் போராடி அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.
மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கதிரவனின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கதிரவன் கதாநாயகி ஸ்ரீதிவ்யாவை மட்டும் இவ்வளவு அழகாக காண்பித்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் மணிமாறன் படத்தொகுப்பு நேர்த்தியாக உள்ளது.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார்தான் உள்ளது.
இந்தத் திரைப்படத்தில் பின்னணி இசையில் மட்டும்தான் ஸ்கோர் செய்து இருக்கிறார் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்.
காவல்துறை மற்றும், ரவுடிசம், கொலை, என்கவுண்டர் ஆகியவற்றை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் கார்த்தி.
கன்னடத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் கதாபாத்திரத்தில் பெயர்கள் வசனங்கள் அனைத்தும் அப்படியேதான் இருக்கிறது எதே கொஞ்சமாவது வித்தியாசம் காண்பிக்க முயற்சி செய்து இருக்கலாம்.
மொத்தத்தில் ரெய்டு திரைப்படம் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.