69-வது தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.!
69-வது தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.!
சென்னை 17 அக்டோபர் 2023 மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வு ஆனவர்கள் பட்டியல் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
இதையடுத்து விருதுகள் வழங்கும் விழா டில்லியில் ராஷ்டிரபதி பவனில் இன்று நடைபெற்றது.
இந்த விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
சிறந்த திரைப்படத்துக்கான விருதை ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ வென்றுள்ளது.
இதில் நடித்த நடிகர் மாதவன் விருதை பெற்றுக் கொண்டார்.
சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதை ‘கடைசி விவசாயி’ பெற்றுள்ளது.
விழாவில் பழம்பெரும் இந்தி நடிகை வஹீதா ரஹ்மானுக்கு சினிமாத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தொடர்ந்து தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், நடிகைகள் ஆலியா பட், கிர்த்தி சனோன், இயக்குனர்கள் ராஜமவுலி, மணிகண்டன், பாடகி ஸ்ரேயா கோஷல் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்து கொண்டு விருதுகளை பெற்று கொண்டனர்.











