நடிகர் மம்முட்டி நடிப்பில் ரோர்சாச் திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.!!

சென்னை 21 ஆகஸ்ட் 2022 நடிகர் மம்முட்டி நடிப்பில் ரோர்சாச் திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.!!

மலையாள திரைப்பட உலகில் மெகா ஸ்டார் தற்போது ரோர்சாச், நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குனர் நிசாம் பஷீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரோர்சாச்’ திரைப்படம் கேரளா திரைப்பட ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ரோர்சாச் திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர், திரைப்படத்தின் கதை குறித்து லீட் வைத்துள்ளது.

மலையாளத் திரைப்பட உலகின் மெகா ஸ்டார் மம்முட்டி, 70 வயதிலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.

ஆண்டுக்கு முன்று முதல் நான்கு திரைப்படங்களில் நடித்து வரும் அவர், தற்போது ‘நண்பகல் நேரத்து மயக்கம்’, ‘ரோர்சாச்’ ஆகிய திரைப்படங்களில் பிஸியாக நடித்து இருக்கிறார்.

இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மம்முட்டி நடித்துவரும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த திரைப்படத்தின் டீசரில், சிவாஜி மாதிரி மம்முட்டி நடித்துள்ளதே இந்த எதிர்பார்ப்பின் காரணமாகும்.

அதேபோல் மம்முட்டியின் ‘ரோர்சாச்’ திரைப்படமும் டிரெண்டிங்கில் உள்ளது.

‘கெட்டியோலானு என்டே மலாக்கா’ திரைப்படத்தின் மூலம், பலரது கவனத்தையும் ஈர்த்த நிசாம் பஷீர் இந்தப் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

ஏற்கனவே இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மாஸ் காட்டியது.

கண்கள் மட்டும் தெரியும்படி ரத்தம் படர்ந்த முகமூடியுடன் மம்முட்டி கெத்தாக உக்கார்ந்திருக்கும் அந்த போஸ்டர், பலரையும் கவனிக்க வைத்தது.

இந்நிலையில், ‘ரோர்சாச்’ திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக்கை விடவும், செகண்ட் லுக் போஸ்டர் இன்னும் மிரட்டலாக உருவாகியுள்ளது.

கண்களும் வாயும் மட்டும் தெரியும் முகமூடியைப் போன்ற பாறையின் மேல், மம்முட்டி படுத்திருக்கும் இந்த போஸ்டர், எதிர்பார்ப்பை இன்னும் எகிறச் செய்துள்ளது.

பாறையின் கீழே தண்ணீர் தெரிவதன் மூலம் சில உளவியல் மதிப்பீடுகள் இருப்பதையும் காணமுடிகிறது

ரோர்சாச்’ செகண்ட் லுக் போஸ்டர், மம்முட்டி ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து லீட் கொடுத்துள்ளார் இயக்குநர் நிசாம் பஷீர்.

Halloween-style-இல் ரொம்பவே அதிர்ச்சியான கேரக்டரில் மம்முட்டி நடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் திரில்லர் ஜானர் திரைப்படமான ‘ரோர்சாச்’, நிச்சயம் திரை உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்றுள்ளார்.

மேலும், செகண்ட் லுக் போஸ்டரில் முகமூடி அணிந்த அந்த பாறை தான், மம்முட்டியின் கேரக்டர் என்றும், புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார்.

இது, மம்முட்டியின் ரசிகர்களை திரைப்படத்தின் கதை குறித்து யோசிக்க வைத்துள்ளது.

error: Content is protected !!