வேட்டையாடு விளையாடு 2 இயக்குனர் கௌதம் வாசுதேவன் மேனன் திட்டம்!!!

சென்னை 21 ஆகஸ்ட் 2022 வேட்டையாடு விளையாடு 2 இயக்குனர் கௌதம் வாசுதேவன் மேனன் திட்டம்!!!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இப்போது இந்தியன் இரண்டாம் பாகத்திலும் உலகநாயகன் கமலஹாசன் நடித்து வருகிறார்.

சில பிரச்சினைகளால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

இதற்கிடையில் படப்பிடிப்புகான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் இவர்கள் நடிப்பில் திரையில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த விக்ரம் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது.

மேலும் தேவர் மகன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!