‘திரு.மாணிக்கம்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :-பி.சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனன்யா, தம்பி ராமையா, இளவரசு – நாசர் – சின்னி ஜெயந்த், வடிவுக்கரசி, கிரேசி, கருணாகரன், சுலில் குமார், சந்துரு, சாம்ஸ், ஸ்ரீமன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- நந்தா பெரியசாமி.

ஒளிப்பதிவாளர் :- சுகுமார்.எம்.

படத்தொகுப்பாளர் :- குணா.

இசையமைப்பாளர் :- விஷால் சந்திரசேகர்.

தயாரிப்பு நிறுவனம்:- ஜிபிஆர்கே சினிமாஸ்.

தயாரிப்பாளர்கள் :- ஜிபி ரேகா ரவிக்குமார், சிந்தா கோபால கிருஷ்ணா ரெட்டி, ராஜா செந்தில்.

ரேட்டிங் :- 3.5./5.

கேரள மாநிலத்தில் உள்ள, குமுளி என்ற ஊரில் சிறிய அளவில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யும் கடை நடத்தும் கதாநாயகன் சமுத்திரக்கனி, மனைவி, அனன்யா இரண்டு பெண் பிள்ளைகளோடு ஏழ்மையுடன், பொருளாதார ரீதியாக பல பிரச்சனைகளோடு வாழ்ந்தாலும், தன்னிடம் பழகும் அனைவரிடத்திலும் அன்பாக பழகுகிறார்.

இந்த சமயத்தில், கதாநாயகன் சமுத்திரகனி இடம் சில லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கும் பாரதிராஜா, பணம் காணாமல் போய்விட்டதால், வாங்கிய லாட்டரி டிக்கெட்டுகளை பணம் கொடுத்துவிட்டு வாங்கி கொள்கிறேன், என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.

பாரதிராஜா வாங்கிய லாட்டரி டிக்கெட்டுகளில் ஒரு லாட்டரி டிக்கெட்டுக்கு மட்டும் ரூபாய்.1 கோடியே. 50 லட்சம் முதல் பரிசு விழுந்துவிட, பாரதிராஜாவிடம் பரிசு விழுந்த பணத்தை ஒப்படைக்க கதாநாயகன் சமுத்திரக்கனி தேடி கண்டுபிடித்து எப்படியாவது ஒப்படைத்து விட வேண்டும் என முடிவெடுக்கிறார்.

இந்த நிலையில் அந்த பாரதிராஜா யார்?, எந்த ஊர்? உள்ளிட்ட எந்த விபரமும் தெரியாமல் பாரதிராஜா கொண்டு வந்த மஞ்சள் பையில் இருந்த ஊர் பேரை வைத்துக்கொண்டு, அவரை கண்டுபிடித்து பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டை அவரிடம் ஒப்படைக்க கதாநாயகன் சமுத்திரக்கனி அலைந்து கொண்டிருக்கிறார்.

விஷயம்  கேள்விப்பட்ட அவருடைய மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், கதாநாயகன் சமுத்திரக்கனி யின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அவரை தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறார்கள்.

சொந்த பந்தங்களுக்கு எடுக்கும் முயற்சியால் கதாநாயகன் சமுத்திரக்கனியை சில ஆபத்துகளும் துரத்த, லாட்டரி டிக்கெட் வாங்கிய பாரதராஜாவிடம் லாட்டரி டிக்கெட்டை ஒப்படைத்தாரா?, லாட்டரி டிக்கெட் ஒப்படைக்கவில்லையா?,
கதாநாயகன் சமுத்திரகனியின் நேர்மையான குணத்திற்கு சரியா?, மனிதநேயத்துடன் நடந்து கொண்ட கதாநாயகன் சமுத்திரக்கனிக்கு நேர்ந்தது என்ன? என்பதுதான் இந்த ‘திரு.மாணிக்கம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த திரு மாணிக்கம் திரைப்படத்தில் கதாநாயகனாக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார்.

கதாநாயகன் சமுத்திரகனி மாணிக்கம் என்ற கதாபாத்திரத்தில், எளிமை, அனைவரிடத்திலும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட, தெளிவான சிந்தனை, நேர்மையான வாழ்க்கை என மிக அருமையான நடிப்பை கொடுத்து மாணிக்கமாகவே வாழ்ந்திருக்கிறார்.

கதாநாயகன் சமுத்திரக்கனியின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனன்யா, கல்லூரி, காதல் என்று இளம் வயது கதாபாத்திரங்களில் நடிக்க கூடியவராக இருந்தாலும், மனைவி, இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மா என்று முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், குடும்ப கஷ்டம் தீர்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும், கணவரின் நேர்மையால் அந்த குடும்ப கஷ்டம் முடியாமல் போகும்போது, உள்ளுக்குள் எழும் கோபத்தை தனது நடிப்பின் மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி சிறந்த நடிகை என முத்திரை பதித்திருக்கிறார்.

முதியவர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கும் பாரதிராஜா, வழக்கும் போல் எதார்த்தமாக நடித்திருக்கும் இளவரசு, சில காட்சிகளில் வந்தாலும் நினைவில் நிற்கும் ரசிகர்கள் மனதில் தங்கிவிடும் கதாபாத்திரங்களில் நாசர், வடிவுக்கரசி, தேவாலய பாதிரியராக நடித்து பாதிரியார்களை கலாய்த்த சின்னி ஜெயந்த், காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாகரன், பேருந்து ஓட்டுநர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாம்ஸ், ஸ்ரீமன் லண்டன் ரிட்டர்னாக வரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா, என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தாங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் அளவான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பக்கபலமாக அனைத்து கதாபாத்திரங்களும் அமைந்திருக்கிறது

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் கேமராவிற்கு ஆயிரம் கண்கள் கேரள பகுதிகளை பசுமையாகவும் அழகாகவும் காட்சிப்படுத்தியிருப்பதோடு, மட்டுமல்லாமல் எளிமையானவர்களின் சோகம் மற்றும் கண்ணீரை திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் இடம் நேர்த்தியான ஒளிப்பதிவின் மூலம் கடத்திச் சென்று இருக்கிறார்.

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்தையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது.

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் திரைக்கதைக்கு தேவையான அளவில் பயணித்திருக்கிறார்..

லாட்டரி டிக்கெட், பரிசு, நேர்மை, அதன் மூலம் எழும் பிரச்சனைகள் ஆகியவற்றை நாம் ஏற்கனவே வெற்றி நடிப்பில் வெளிவந்த ‘பம்பர்’ திரைப்படத்தில் பார்த்திருந்தாலும், அதை வேறு ஒரு பாணியில் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் நந்தா பெரியசாமி அவர்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் – ‘திரு.மாணிக்கம்’ படம் நேர்மையில்லாதவர்களை திருத்தும் ஒரு திரைப்படமாக அமைந்திருக்கிறது.