நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள திருச்சிற்றம்பலம் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம்!!
#Thiruchitrambalam Box Office நடிகர் தனுஷ் நடிப்பில் வெளி வந்துள்ள திருச்சிற்றம்பலம் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம்!!
இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிகை நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, ப்ரியா பவானி சங்கர் மற்றும் ராஷி கண்ணா நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாள் வசூல் அமோகமாக தொடங்கியுள்ளது.
அனைத்து ஊடகங்களிலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால், திரைப்படம் குடும்ப பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது என தெரிகிறது.
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நித்யா மேனன் அவர்களின் சிறப்பான நடிப்பிற்காக பெரும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
இந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸின் வசூல் அமோகமாக தொடங்கியுள்ளது வர்த்தக அறிக்கைகளின்படி, திருச்சிற்றம்பலம் திரைப்படம் முதல் நாளில் 8 முதல் 9 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.
தமிழ் நாட்டில் மட்டும் 7 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
திரைப்படத்தின் முதல் காட்சி காலை 8 மணி அளவில் இருந்து திரையிடப்பட்டது.
ஆனால் அதிகாலை 4 மணி அளவில் இருந்து வெளியிட்டு இருந்தால் இன்னும் நல்ல வசூலை பாத்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.











