‘டாக்ஸிக் TOXIC’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- ராக்கிங் ஸ்டார் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹுமா குரேஷி, ருக்மணி வசந்த், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கீது மோகன்தாஸ்.

ஒளிப்பதிவாளர் :- ராஜீவ் ரவி.

படத்தொகுப்பாளர் :- உஜ்வல் குல்கர்னி.

இசையமைப்பாளர் :- ரவி பஸ்ரூர், விஷால்  மிஸ்ரா, தனிஷ்க் பாக்சி.

தயாரிப்பு நிறுவனம் :-  கே.வி.என். புரொடக்ஷன்ஸ்,  மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- வெங்கட் கே. நாராயணா, யாஷ்.

மக்கள் தொடர்பு :- யுவராஜ்.

வெளியீட்டு தேதி :-ஆகஸ்ட் 28, 2026.

ரேட்டிங் :-  2.25/5.

ஒரு கேங்ஸ்டரின் வாழ்க்கை என்றாலே அதிகாரம், பணம், பழிவாங்கல், துப்பாக்கி சத்தம், எதிரிகள் என நாம் ஏற்கனவே பல திரைப்படங்களில் பார்த்துவிட்டோம்.

சிறுவயதில் நடந்த ஒரு சம்பவத்தால் வாழ்க்கையின் ஓரத்தில் தள்ளப்படுகிறார்கள் அக்கா நயன்தாரா மற்றும் அவருடைய கதாநாயகன் யாஷ் தனது தம்பியின் எதிர்காலம் தான் தனது வாழ்க்கை என நினைக்கும் நயன்தாரா, தன் தம்பி யாஷ் உயர்ந்த நிலைக்கும் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் வளர்த்து வருகிறார்.

1947 கால கட்டங்களில் ஆரம்பித்து 1970 காலக்கட்டங்களில் கதை அப்போதையக் காலக்கட்டத்தில் கோவா மாநிலத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாஃபியாக்களின் மோதலில் கதை தொடங்க முரட்டுத்தனம் மிக்க  கதாநாயகன் யாஷ் மற்றும் அவருடைய அக்கா  நயன்தாரா இருவரும் இணைந்து தங்களது  எதிரிகளை பழி இருக்கிறார்கள்.

அக்கா நயன்தாராவுக்கு தன்னுடைய தம்பி கதாநாயகன் யாஷ் இந்த முழு கோவாவை ஆள வேண்டும் என்பதுதான் ஆசை அதற்காக கதாநாயகன் யாஷுக்கு துணையாக பயணிக்கும் சதி வலைகளில் சிக்கி  நயன்தாரா திடீரென்று கொல்லப்படுகிறார்.

தன்னுடைய அக்கா நயன்தாராவை கொலைக்குப் பிறகு கோவாவை விட்டு வெளியேறும் கதாநாயகன் யாஷ், சீனாவிலும் தனது கேங்ஸ்டர் ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்துகிறார்.

இதற்கிடையே கதாநாயகன் யாஷ் மீண்டும் கோவா திரும்ப வேண்டிய சூழல் உருவாகிறது.

கதாநாயகன் யாஷியின் வருகையை அறிந்து அவருடைய மனைவி கியாரா அத்வானி தற்கொலை செய்துக் கொள்கிறார்.

கதாநாயகன் யாஷ் மற்றும் கியாரா அத்வானிக்கு பிறந்த 10 வயது மகனை  கதாநாயகன் யாஷ் கொலை செய்ய முயற்சி செய்ய ஆனால், அது அவரால் முடியாமல் போக, அவரை அங்கிருந்து விரட்டியடிக்கிறார்.

மீண்டும் வழக்கம் போல் கோவாவில் தனது கேங்ஸ்டர்  சாம்ராஜ்ஜியத்தை நடத்தும் கதாநாயகன் யாஷ், ருக்மணி வசந்தை திருமணம் செய்துக் கொண்டு, குழந்தை பெற்றுக் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்க, நிலையில் அவரது வாழ்க்கையை புரட்டிப் போடும் சம்பவங்கள் நடக்கிறது.

கதாநாயகன் யாஷ் கேங்ஸ்டர் சாம்ராஜ்யத்திற்கும், அவரது மகனுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

அந்த ஆபத்தில் இருந்து தனது மகனையும், கேங்ஸ்டர் சாம்ராஜ்யத்தையும் கதாநாயகன் யாஷ் காப்பாற்றினாரா?, காப்பாற்றவில்லையா? என்பதுதான் இந்த ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் கதாநாயகனாக யாஷ் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் யாஷ் இந்த திரைப்படத்திற்காக உழைத்து மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

‘கே.ஜி.எப்’- திரைப்படத்தினால்  மிகப்பெரிய வெற்றியின் மூலம் மிகப்பெரிய அளவில் உச்சத்திற்கு சென்ற யாஷ் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு  தவறான முடிவால் அகல பாதாளத்திற்கு சென்றிருக்கிறார்.

கதாநாயகன் யாஷின் சகோதரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நயன்தாரா, ஆரம்பத்தில் சில அதிரடியான காட்சிகளில் அமர்க்களமாக எண்ட்ரி கொடுத்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் செட் பிராபர்ட்டி போல் அமைதியாக நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்.

கதாநாயகன் யாஷின் முதல் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கியாரா அத்வானி, இரண்டாவது மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ருக்மணி வசந்த், காதலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தாரா சுதாரியா, வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹுமா குரேஷி என திரை முழுவதும் நிரம்பியிருக்கும் கதாநாயகிகளின் நடிப்பை விட அவர்களின் ஆடைகள் குறைவுதான் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, ஒளிப்பதிவு மூலம் கிராபிக்ஸ் காட்சிகளை சரியான முறையில் காட்சிகளுடன் இணைத்து திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக திரைப்படமாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பாக்சி ஆகியோரது இசையில் பாடல்கள் பெரிதாக ஒன்றுமில்லை என்றாலும், பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

‘கே ஜி எஃப்’ ‘KGF’ முதல் பாகம் இரண்டாம் பாகம் என்ற ஒரே  திரைப்படத்தின் மூலம் உலக அளவில் உச்சத்துக்கு சென்ற  ராக்கிங் ஸ்டார் யாஷ்,  ‘டாக்ஸிக்’  TOXIC என்ற ஒரே திரைப்படத்தின் மூலம் உலக அளவில் இருந்த ராக்கிங் ஸ்டார் யாஷ், சரிந்து விட்டார்.

கதை இல்லாமலே கதை திரைக்கதை என்னவென்று தெரியாமலே, ஹாலிவுட் திரைப்படம் போலவே எடுக்க வேண்டும் காட்சிப்படுத்த வேண்டும்  என்ற முடிவில், தேவை இல்லாத காட்சிகளை திணித்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கதையே இல்லாமல் கடுப்பேற்றி இருக்கிறார் இயக்குநர் கீது மோகன்தாஸ்,

மொத்தத்தில், ‘டாக்ஸிக்’ திரைப்படம் பார்க்கும் மக்களை  கடுப்பேற்றும் வகையில் அமைந்திருக்கிறது.

error: Content is protected !!