‘குற்றம் தவிர்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :-   ரிஷி ரித்விக், ஆராத்யா கிருஷ்ணா, சாய் சைந்தவி, சாய் தினா, வினோதினி வைத்தியநாதன், சென்ட்ராயன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- எம் கஜேந்திரன்.

ஒளிப்பதிவாளர் :- ரோவின் பாஸ்கர்.

படத்தொகுப்பாளர் :- ரஞ்சித் குமார் ஜி‌.

இசையமைப்பாளர் :- ஸ்ரீகாந்த் தேவா

தயாரிப்பு நிறுவனம் :-  ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- . பி. பாண்டுரங்கன்

ரேட்டிங் :- 2.5/5.

கதாநாயகன் ரிஷி ரித்விக் காவல்துறையில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்ற லட்சியத்துடன், பயணித்து வருகிறார்.

காவல்துறையில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்ற முயற்சியில் இருக்கும் கதாநாயகன் ரிஷி ரித்விகின் அக்கா வினோதினியும் பக்கபலமாக இருக்கிறார்.

தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தி வரும் அக்கா வினோதினிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படுகிறது.

கதாநாயகன் ரிஷி ரித்விக்கு தெரியாமல் அக்கா வினோதினி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒரு கட்டத்தில் அக்கா வினோதினிக்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விடுகிறார்.

தன்னுடைய அக்கா வினோதினி இறப்பில் சந்தேகம் இருப்பதாலும் தனது அக்கா வினோதினி சிகிச்சை பெற்று வந்த  மருத்துவமனையில் மாற்று அறுவை சிகிச்சை செய்ததால் தான் தனது அக்கா வினோதினி இறந்தார் என்பது கதாநாயகன் ரிஷி ரித்விக்க்கு தெரிய வருகிறது.

இந்த நிலையில் இதுபோல் பல ஏழை எளிய மக்களை ஏமாற்றி மாற்று அறுவை சிகிச்சை செய்து கிட்னி திருட்டு செய்து பலரை கொன்று இருக்கிறார்கள்.

இந்த மருத்துவமனையின நிர்வாகத்திற்கு பின்னால் அரசியல்வாதி மற்றும் பெரிய மாஃபியா கும்பல்  இருப்பதையும் கதாநாயகன் ரிஷி ரித்விக் கண்டு பிடிக்கிறார்.

இந்த நிலையில் கதாநாயகன் ரிஷி ரித்விக் அந்த மாஃபியா கும்பலை கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா? கதாநாயகன் ரிஷி ரித்விக் காவல்துறையில் சேர வேண்டும் என்ற லட்சியம்  நிறைவேறியதா? நிறைவேறவில்லையா? என்பதுதான் இந்த குற்றம் தவிர் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த குற்றம் தவிர் திரைப்படத்தில் கதாநாயகனாக ரிஷி ரித்விக், நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ரிஷி ரித்விக், சண்டைக் காட்சிகளில் அதிரடி ஆக்சன் கதாநாயகனாக நடித்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கவனிக்க வைத்து இருக்கிறார்.

குற்றங்களை தேடி தேடி அலைந்து கண்டுபிடிப்பது, வில்லன்களிடம் மோதுவது என மிகப்பெரிய அளவில் நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

இந்த குற்றம் தவிர் திரைப்படத்தில் கதாநாயகியாக ஆரத்யா நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஆரத்யா, காவலர் கதாபாத்திரம் மற்றும் காதல், சோகம், சண்டை என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரவணன், ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் தீனா, காமராஜ், சென்ட்ராயன், டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆனந்த் பாபு ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவியிருக்கிறார்கள்.

குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் சைந்தவி நடிப்பின் மூலம் ரசிகர்களை கவனிக்க வைத்து இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக உள்ளது.

இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையை ரசிக்கும் படியாக கொடுத்து இருக்கிறார்.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் உள்ள  மருத்துவமனையில் நடக்கும் மர்ம கொலை, உடல் உறுப்புகள் திருட்டு, மாற்று அறுவை சிகிச்சை, மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் மெடிக்கல் கிரைம் திரில்லர் கதையை மையமாக வைத்து என திரைக்கதை அமைத்து திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கஜேந்திரா.

மொத்தத்தில் குற்றம் தவிர்  மருத்துவமனையில் நடக்கும் உடல் உறுப்புகள் திருட்டு பற்றிய திரைப்படம்.

error: Content is protected !!