வெந்து தணிந்தது காடு திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.25 / 5.

நடிகர் நடிகைகள் :-  சிலம்பரசன் டிஆர், சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ், சித்திக், டெல்லி கணேஷ், ஆதித்ய பாஸ்கர், ஏஞ்சலினா, அப்புக்குட்டி, ஜாஃபர் சாதிக் ஏ, பாவா செல்லதுரை, கவிதாலயா கிருஷ்ணன், துளசி, சாரா, ரிச்சர்ட் ஜேம்ஸ் பீட்டர், பாத்மன், மணிகண்டன், கீதா கைலாசம், ஸ்ரீஷா, அஜ்மினா காசிம், ஜெய்சிந்த், சிவமணி, தீபக் தத்தா சர்மா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கௌதம் வாசுதேவ் மேனன்.

ஒளிப்பதிவு :- சித்தார்த்தா நுனி.

படத்தொகுப்பு :- ஆண்டனி.

இசை :- ஏ.ஆர் ரகுமான்.

தயாரிப்பு :- வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்.

ரேட்டிங் :- 3.25 / 5.

ஒரு தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கைப் திரைப்படமாக ஒரு வாழ்வியலைச் சொன்ன திரைப்படங்கள் தமிழ் திரைப்பட உலகில் நிறைய இருக்கிறது.

தமிழ் திரைப்பட உலகில் கேங்ஸ்டர் பற்றிய வந்த திரைப்படங்களில் உதாரணமாய் திரைப்படங்கள் இருக்கிறது.

35 வருடங்களுக்கு முன் வெளிவந்த உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘நாயகன்’

தமிழ் திரைப்பட உலகில் நாயகன் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது.

அதன் பிறகு 27 வருடங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த
‘பாட்ஷா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற கேங்ஸ்டர் திரைப்படமாக அமைந்தது.

கேங்ஸ்டர் திரைப்படம் என்றால் இந்த இரண்டு திரைப்படங்களின் பாதிப்பு இல்லாமல் எந்த ஒரு ‘கேங்ஸ்டர்’ திரைபபடமும் திரைப்பட உலகில் வந்ததும் இல்லை வருவதும் இல்லை.

இந்த ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் கூட அப்படிப்பட்ட ஒரு திரைப்படம்தான்.

ஆனால், ‘நாயகன்’ ‘பாஷா’ ஆகிய திரைப்படங்களில் தலுவல்தான் இந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் ஸ்டைலில் இயக்கி உள்ளார்.

தென் மாவட்டங்களில் இருந்து சொந்த மண்ணில் வாழ வழி இல்லாமல் வாழ்வை தேடி மும்பை சென்று அங்கு ஒரு தாதாவாக வளரும் ‘முத்துவீரன்’ என்ற ஒரு இளைஞனின் வாழ்வியல் கமர்ஷியல் ஆக்ஷன் நிறைந்த திரைப்படம்தான் இந்த வெத்து தணிந்தது காடு திரைப்படம்.

கிராமத்தில் தாய் ராதிகா சரத்குமார் மற்றும் தங்கையுடன்
வயகாட்டில் வேலை பார்த்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார் கதாநாயகன் சிலம்பரசன் டி ஆர்.

முல்காட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் போது கதாநாயகன் சிலம்பரசன் டி ஆருக்கு விபத்து நடந்து விடுகிறது.

அந்த விபத்தை நினைத்து பயப்படும் தாய் ராதிகா சரத்குமார் தனது உறவினர் மூலம் வேறு ஏதாவது நல்ல வேலைக்கு கதாநாயகன் சிலம்பரசன் டி ஆரை அனுப்ப முயற்சி செய்கிறார்.

இந்நிலையில் உறவினர் தற்கொலை செய்து கொள்கிறார்.

அவருடன் இருக்கும் கதாநாயகன் சிலம்பரசன் டிஆர், அவருடைய உறவினர் வேலை பார்க்கும் மும்பைக்கு செல்கிறார்.

அங்கு இசக்கி பரோட்டா கடையில் வேலைக்கு செல்கிறார் கதாநாயகன் சிலம்பரசன் டிஆர்.

எதிர்பாராத விதமாக கேங்ஸ்டர் கும்பலில் சிக்கிக் கொள்கிறார்.

இறுதியில் கதாநாயகன் சிலம்பரசன் டிஆர் வாழ்க்கை என்ன ஆனது? என்பதுதான் இந்த வெத்து தணிந்தது காடு திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த வெத்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிலம்பரசன் டிஆர் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சிலம்பரசன் டிஆர் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

முத்துவீரன் கதாபாத்திரத்தில் மாறுபட்ட தோற்றத்தில் சிலம்பரசன் டிஆர். ஊர்ப் பையனாக ஒரு ஏழை இளைஞனாக அதற்கான உடல் மொழி, நடை, உடை, பாவனை என தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டுள்ளார் சிலம்பரசன் டிஆர்.

முதல் பாதியில் வெகுளித்தனமாகவும், இரண்டாம் பாதியில் மிடுக்கான நடிப்பையும் கொடுத்து இருக்கிறார்.

இதற்கு முன்பு சிலம்பரசன் டிஆர் இதற்கு முன் நடித்த திரைப்படங்களில் இப்படியெல்லாம் நடித்ததில்லையே என ஆச்சரியப்பட வைக்கிறார்.

எந்த ஒரு இடத்தில் கூட சிலம்பரசன் டிஆரின் முந்தைய திரைப்படங்களின் நடிப்பு, கதாபாத்திரம் எதுவும் திரைப்படம் பார்க்கும் நமது மனதிற்குள் வரவில்லை.

கதாநாயகியாக நடித்திருக்கும் சித்தி இதானி முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார் ராதிகா சரத்குமார்.

அப்புக்குட்டி, நீரஜ் மாதவ், இவர்களுக்கான வாய்ப்புகள் குறைவுதான் என்றாலும் அவர்கள் கதாபாத்திரங்களைப் பற்றி பேச வைக்கிறார்கள்.

ஜாபரின் நடிப்பு தியேட்டரில் விசில் பறக்கிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.

1962ல் வந்த பார்த்தால் பசி தீரும் திரைப்படத்தில் கொடி அசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா என்ற பாடல் டியூனை காப்பியடித்த ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்

உன்னை நினைச்சதும் மனசு மயங்குதா எனற பாடலை பதிவு செய்துள்ளார் ஏஆர் ரகுமான்.

பின்னணி இசையிலும் வேறு ஒரு உலகத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு மும்பையை புதிதாகக் காட்டுகிறது.

ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு சிறப்பு.

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் மேக்கிங் ஸ்டைலும், சிலம்பரசன் டிஆரின் புதுவிதமான நடிப்பும் வெத்து தணிந்தது காடு திரைப்படத்தை காப்பாற்றுகிறது.

மொத்தத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் வென்றது.