தி வாரியர் திரை விமர்சனம் ரேட்டிங் :- 2.75 / 5.

நடிகர் நடிகைகள் :- ராம் பொத்தினேனி, கிர்த்தி ஷெட்டி, ஆதி பினிஷெட்டி , நதியா, அஜய், ரோஹித் படக், பிரம்மாஜி, பிரதீப், மேகா, ஸ்ரீகுமார், ஜெய பிரகாஷ், பிருந்தா, லால், திவ்யா ஸ்ரீபாதா, நாகா மகேஷ், அக்ஷரா கௌடா, ஆனந்த் சக்ரபாணி, பாஸ்கர் பிஹாரி, ரத்ன கிரண்,
ராஜஸ்தானி பையன், காந்தி, ஜான் விஜய், சத்ரபதி சேகர், கிங்ஸ் லீ, ரமேஷ், ராபர்ட், மற்றும் பலர்.

இயக்கம் :- லிங்குசாமி.

ஒளிப்பதிவு :- சுஜித் வாசுதேவ்.

படத்தொகுப்பு :- நவீன் நூலி.

இசை :- தேவிஸ்ரீபிரசாத்.

தயாரிப்பு :- ஸ்ரீ சீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்.

ரேட்டிங் :- 2.75 / 5.

 

இயக்குனர் லிங்குசாமி இந்த தி வாரியார் திரைப்படத்திற்காக புதிய கதையை எல்லாம் மூளை கசக்கி யோசிக்கவில்லை.

தமிழ் திரைப்பட உலகில் வெளிவந்திருக்கும் மற்று மொரு போலீஸ் – ரவுடி கதைதான் இநத தி வாரியார் திரைப்படம்.

பத்து வருடங்களுக்கு முன்பு இயக்குனர் லிங்குசாமி இயக்கிய ‘வேட்டை’ திரைப்படத்தின் கதையில் தற்போது ராமை வைத்து லி வாரியார் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இயக்குனர் லிங்குசாமி இதற்கு முன் இயக்கிய ரன், ஜி, சண்டக்கோழி, பீமா, பையா, அஞ்சான்’ என ஒவ்வொரு திரைப்படத்திலிருந்தும்  கொஞ்சம் கொஞ்சம் எடுத்து தேவையான அளவு இதில் சேர்த்து ஒரு திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்.

மதுரை உள்ள அரசு பொது மருத்துவமனையில் டாக்டர் பணியில் சேர்கிறார் கதாநாயகன் ராம் பொத்தினேனி.

மதுரை மண்ணை ஆட்டி படைக்கும் கொடுரமான தாதாவாக வில்லன் ஆதிக்கும் கதாநாயகன் ராம் பொத்தினேனிக்கும் பிரச்சினை ஏற்படுகிறது.

கதாநாயகன் ராம் பொத்தினேனி பலமாக அடித்து துவைத்து ஊரை விட்டே அனுப்பி விடுகிறார் வில்லன் ஆதி.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதே மதுரை மண்ணுக்கு காவல்துறை அதிகாரியாக திரும்புகிறார் கதாநாயகன் ராம் பொத்தினேனி.

வில்லன் ஆதியின் கொட்டத்தை அடக்கி, மதுரை மண்ணை  அமைதிப் பூங்காவாக மாற்ற வேண்டும் என களம் இறங்குகிறார் கதாநாயகன் ராம் பொத்தினேனி.

வில்லன் ஆதியை எதிர்த்து மதுரை மண்ணை அமைதிப் பூங்காவாக மாற்றினாரா? இல்லையா? என்பதுதான் தி வாரியார் திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த தி வாரியார் திரைப்படத்தில் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.

இவர் ஏற்கனவே தெலுங்கு திரைப்பட உலகில் பல வெற்றிப் திரைப்படங்களில் நடித்தவர் தான் இநத நடிகர் ராம் பொத்தினேனி.

இந்த தி வாரியார் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகமாகி இருக்கிறார்.

Read Also  ஏ 1 - திரை விமர்சனம்

நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களிலும், கதாபாத்திரங்களிலும் நடித்தால் மட்டுமே தமிழ் திரைப்பட உலகில் உள்ள ரசிகர்கள் மனதிலும் இடம் பிடிக்க முடியும்.

இந்த தி வாரியார் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கு கிர்த்தி ஷெட்டி கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.

‘உப்பெனா’ தெலுங்கு திரைப்படத்தில் அவ்வளவு அழகாக இருந்தார்.

இந்த திரைப்படத்தில் மேக்கப் சரியில்லை.

ஆனாலும், அவருடைய துறுதுறு நடிப்பால் ரசிகர்களை ரசிக்க வைக்கிறார்.

அனைத்து மொழி திரைப்படங்களிலும் இதற்கு முன்பு ஆயிரம் வில்லன்கள் செய்த அதே ரவுடித்தனத்தை இந்தப் திரைப்படத்திலும் ஆதி செய்திருக்கிறார்.

எந்தெந்த இடங்களில் மிரட்டலை வெளிப்படுத்த முடியுமோ அந்தந்த இடத்தில் மிரட்டலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அனைத்து கதாபாத்திரங்களில் நதியாவுக்கு மட்டும்தான் ஓரளவுக்கு நடிக்க வாய்ப்பு உள்ளது.

ஜெயம் ரவியுடன் நடித்த நதியாவா இவர் என யோசிக்க வைக்கிறார்.

பத்து வருடங்களுக்கு மேல் ஆனாலும் அவருக்கு மட்டும் இன்னும் வயசு ஆகவில்லை.

இசையமைப்பாளர்  தேவி ஸ்ரீபிரசாத் இசையில் ‘புல்லட் பாடல் விசில்’ பாடல் ஆகிய இரண்டு பாடல்கள் அமர்க்களம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை நடனம் ஆட வைக்கிறது.

சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு ஹைதராபாத் லொகேஷன் கொடுத்து விட்டு மதுரையாக எப்படி காண்பிப்பது எனது இருக்கிறார்.

நவீன் நூலி படத்தொகுப்பு திரைப்படத்திற்கு பலம்.

திரைப்படத்தை தெலுங்கில் மட்டும் தயாரித்து, தமிழில் வெளியிட்டிருக்க வேண்டும்.

இரண்டு மொழிகளில் எடுத்துள்ளோம் எனச் சொல்லி தெலுங்கு வாடையுடன் மட்டுமே எடுத்து தமிழ் ரசிகர்களை ஏமாற்றியுள்ளார்கள்.

திரைப்படத்தின் கதாநாயகன் ராம் பொத்தினேனி பைக்கில் வரும் போது வண்டி எண் முதலில் ஆந்திரா பதிவெண்ணாகவும், அடுத்த தெருவில் தமிழ்நாடு பதிவெண்ணாகவும், அதற்கடுத்த தெருவில் மீண்டும் ஆந்திரா பதிவெண்ணாவுகம் மாறி மாறி வருகிறது.

அந்த அளவிற்குத்தான் உதவி இயக்குனர்கள் திரைப்படத்தில் உள்ள  கவனித்திருக்கிறார்.

மதுரை எனக்கு கூறுகிறார்கள் ஆனால், பின்னணியில் தெலுங்கு போர்டுகள் எல்லாம் சர்வ சாதாரணமாகத் தெரிகிறது.

மதுரை என்று சொல்லிவிட்டு ஆந்திராவின், கர்னூல் நகரை மதுரை என சொல்லி ஏமாற்றுவது சரியா ?. தெலுங்கு திரைப்படமாகவும் இல்லாமல், தமிழ்ப் திரைப்படமாகவும் இல்லாமல் ஏமாற்றி விட்டார் இயக்குனர் லிங்குசாமி.

மொத்தத்தில் தி வாரியார் திரைப்படம் அரைத்த மாவு தான் அரைக்கப்பட்டுள்ளது.