நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிக்கும் வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவிற்கு மிக பிரம்மாண்ட செட்!!

சென்னை 22 ஆகஸ்ட் 2022 நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிக்கும் வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவிற்கு மிக பிரம்மாண்ட செட்!!

தென்னிந்திய திரைப்பட உலகில் ஒரு முக்கியமான இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் டிஆர் கூட்டணி சேரும் மூன்றாவது திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”.

இந்தத் திரைப்படம் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி திரையரங்குகளில் மிக பிரமாண்டமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“விண்ணைத்தாண்டி வருவாயா” மற்றும் “அச்சம் என்பது மடமையடா” திரைப்படங்களுக்கு பிறகு உருவாக்கும் இந்தத் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக அமையும் என்பது ரசிகர்களின் கருத்து.

இசை புயல் ஏ. ஆர். ரஹ்மான் இந்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்திற்கு
இசையமைக்கிறார்.

சமீபத்தில் தான் “மறக்குமா நெஞ்சம்…” என்ற இந்த திரைப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

கவிஞர் தாமரை வரிகளை எழுத ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் இப்பாடல் காதுகளுக்கு விருந்தாக அமைந்தது.

error: Content is protected !!