லாஸ்ட் 6 ஹவர்ஸ் திரை விமர்சனம் ரேட்டிங்:-2.25./5
நடிகர் நடிகைகள் :- பரத், அனூப் காலித், விவியா சாந்த், ஆதில் இப்ராஹிம், அனு மோகன்,
மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சுனிஷ் குமார்.
ஒளிப்பதிவு :- சினு சித்தார்த்.
படத்தொகுப்பு :- பிரவீன் பிரபாகர்.
இசை :- கைலாஸ் மேனன்.
தயாரிப்பு :- லேசி கேட் புரொடக்ஷன்ஸ்
ரேட்டிங் :- 2.25 / 5.
திரைப்படத்தின் தலைப்பைப் பார்த்ததும் ஆங்கில திரைப்படம் என்று நினைத்துவிட வேண்டாம.
டோன்ட் ப்ரீத்’ என்ற ஆங்கிலப் திரைப்படத்தைக் காப்பியடித்து எடுக்கப்பட்ட இந்த லாஸ்ட் 6 ஹவர்ஸ் திரைப்படம்.
கிரைம் த்ரில்லர் திரைப்படங்கள் ஷார்ப்பாக, திரில்லாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் லாஸ்ட் சிக்ஸ் ஹவர்ஸ் ஷார்ப் அண்ட் த்ரில்.
அதில் இப்ராஹிம், விவியா மற்றும் சில நண்பர்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தாலும் வாழ்க்கையில் பெரிதாக கொள்ளையடித்து செட்டிலாக வேண்டும் என் ஆசைப்படுகின்றனர்.
சின்னச் சின்ன திருட்டுக்கள் செய்யும் அவர்கள் ஒரு பங்களாவை விற்பதற்காக ரூ 30 கோடி வியாபாரம் நடப்பதாகவும் அதில் 20 கோடி பிளாக் மணி என்றும் அந்த தொகையை கொள்ளையடித்தால் வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்றும் விவியா சொல்கிறார்.
மூன்று நண்பர்களும், அவர்களின் சினேகிதியும் திருட்டு தொழில் செய்து, வாழ்க்கையில் பணக்காரர்களாகி விட வேண்டும் என் தீர்மானிக்கிறார்கள்.
. அந்த பணத்தை கொள்ளையடிக்க வருகின்றனர்.
பங்களாவுக்குள் நுழையும் அவர்கள் அங்குள்ள லாக்கரை தேடுகின்றனர்.
அப்போது எழும் சத்தத்தை கேட்டு உஷாராகிறார்.
பங்களாவிலிருக்கும் பரத். பரத்துக்கு பார்வை கிடையாது.
ஆனாலும் நன்கு கேட்டும் திறன் இருப்பதால் சத்தம் வரும் திசைக்கு சென்று கொள்ளையடிக்க வந்த வர்களை அடித்து துவம்சம் செய்கிறார்.
ஒரு கட்டத்தில் அவர்களில் ஒருவரை சுட்டுக்கொள்கிறார்.
இந்த மோதலின் இறுதியில் வெல்வது யார்? என்பதையும், கொள்ளையடிக்க வந்தவர்களை பரத் சுட்டுக் கொல்வது ஏன்?
எதற்காக கொன்ற என்பதுதான் இந்த லாஸ்ட் 6 ஹவர்ஸ் திரைப்படத்தின் மீதி கதை.
இந்த லாஸ்ட் 6 ஹவர்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக பரத் நடித்துள்ள..
நீண்ட நாட்களுக்கு பிறகு பரத் நடித்து வெளிவரும் திரைப்படம்.
பார்வை இல்லாதவராக மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்
இந்த கதாபாத்திரத்திற்காக தன் உடலை வருத்தி கட்டுமஸ்தானாக நடித்துள்ளார்.
பார்வையற்றவராக வரும் பரத் பங்களாவுக்குள் கொள்ளையர்கள் நுழைந்ததை அறிந்து அவர்களை தேடிச் செல்வதும் வசமாக சிக்கிய வரை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளும் போது அதிர்ச்சி பரவுகிறது.
கொள்ளையர்களாக நடித்திருக்கும் அதில் இப்ராஹிம், விவியா அனூப் கஹாலித் சக நடிகர்கள் வேடத்தை மிகவும் கச்சிதமாக செய்திருக்கின்றனர்.
ஆனாலும் பார்வைற்ற பரத் தனி ஆளாக கொல்ல வரும் நிலையில் அவரை கூட்டாளிகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து தாக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
அதேபோல் பரத்திடம் விவியா ஒன்றுக்கு பலமுறை சிக்கிக் கொள்ளும்போது இவர் பரத்தின் கையாளாக இருப்பாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
இசை அமைப்பாளர் கைலாஸ் மேனன் பாடல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.
த்ரில் காட்சிகளில் இசையால் இன்னமும் பயமுறுத்தி இருந்தால் கூடுதல் பரபரப்பு கிடைத்திருக்கும்.
சினு சித்தார்த் ஒளிப்பதிவு பளிச்சிடுகிறது.
இருள் சூழ்ந்த காட்சியில் நடக்கும் பரத்தின் தேடுதல் வேட்டை படபடப்பை அதிகரிக்கிறது.
கொள்ளையர்களை பரத் தனது வளையில் சிக்க வைத்து கொல்வது ஏன் என்பதற்கு கிளைமாக்ஸ் நெருக்கத்தில் விளக்கம் அலிக்கும் போது சஸ்பென்ஸுக்கு இயக்குனர் சுனிஸ்குமார் பதில் தருவது தெளிவு.
ஹாலிவுட் பாணியில் கதை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் சுனிஸ் குமார்.
லாஸ்ட் சிக்ஸ் ஹவர்ஸ் – ஹாலிவுட் சாயலில் ஒரு தமிழ் திரைப்படம்.
மொத்தத்தில் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ பார்க்கலாம்.











