நம்பிக்கைதான் வாழ்க்கை: ‘விஜயானந்த் திரைப்படத்தின் வசனகர்த்தா மதுரகவி.!!
சென்னை 19 டிசம்பர் 2022 நம்பிக்கைதான் வாழ்க்கை: ‘விஜயானந்த் திரைப்படத்தின் வசனகர்த்தா மதுரகவி.!!சினிமா என்பது காட்சி ஊடகம் என்ற போதிலும் எத்தனை பெரிய இயக்குநராக இருந்தாலும் ஒரு திரைப்படத்தில் வசனத்திற்கான இடத்தை மறுப்பதில்லை.
சூழலுக்கேற்ற மாதிரியும் மொழி அலங்காரம் இல்லாமலும் கருத்துச் செறிவுடனும் வடிகட்டிய வார்த்தைகளைக் கொண்டும் சொற்சிக்கனத்துடன் எழுதப்படும் வசனங்கள் ரசிக்கப்படுகின்றன.

அப்படிப்பட்ட கூர்மையான வசனங்களை அண்மையில் வெளிவந்துள்ள ‘விஜயானந்த்’ படத்தில் எழுதியதுடன் பாடல்களையும் எழுதியவர் மதுரகவி .குறிப்பாக ஒரு மொழிமாற்றுப் திரைப்படமான இந்த ‘விஜயானந்த் திரைப் படத்தில் அவர் எழுதியிருக்கும் வசனங்கள் ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றன.
‘விஜயானந்த்’ திரைப்படம் என்பது ஒரு பயோபிக் திரைப்படம்.
அவரை அண்மையில் சந்தித்தபோது!
உங்கள் முன்கதை கொஞ்சம் சொல்லுங்கள்?
ஏனென்றால் காளிதாசனுக்கு மதுரகவி என்றொரு பட்டம் உண்டு.
நான் சின்ன வயதிலேயே சினிமா ஆர்வத்துடன் சென்னை வந்தவன்.நான் அடிப்படையில் ஓர் உதவி இயக்குநர் தான்.

2006 ஆம் ஆண்டு கனவுத் தொழிற்சாலை என்ற குறும் படத்திற்கு வசனம் எழுதி கதைநாயகனாகவும் நடித்து உள்ளேன்.
நான் சென்னை வந்த போது என் முன் இரண்டு நிபந்தனைகள் இருந்தன .நாம் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று என் சினிமாக் கனவு நிறைவேறும் வரை குடும்பத்தைச் சிரமத்தில் வைத்து குடும்பத்தை வாட வைப்பது ஒன்று.
இன்னொன்று சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புக் கயிற்றைப் பற்றிக் கொண்டு மேலேறி வருமானத்திற்கு வழி செய்து கொள்வது.
நான் இதில் இரண்டாவதைத் தேர்வு செய்து அந்த வழியில் பயணப்பட ஆரம்பித்தேன்.
இந்தத் திரை உலகில் நான் பலரையும் பார்த்திருக்கிறேன்.
எனவேதான் நான் இரண்டாவது வாய்ப்பைத் தேர்வு செய்து கொண்டேன்.
அதனால் நான் திரையுலகில் நுழைந்தது முதல் இன்று வரை வறுமையில் வாடியதில்லை.
சினிமா எனக்கு அன்று முதல் இன்று வரை சோறு போட்டுள்ளது வசதிகளை வழங்கி உள்ளது.
ஒரே துறையில் கவனம் செலுத்த முடியாத ஒரு வருத்தம் உண்டா?
நான் கதை விவாதங்கள், திரைப்படங்களுக்கு வசனம், வாய்ப்புள்ள போது பாடலும் எழுதினேன்.
ஒரே துறையில் தீவிரமாக இயங்க முடியவில்லை என்கிற நிலை இருந்தாலும் நான் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
நூறு தனி ஆல்பம் பாடல்கள் எழுதியுள்ளேன்.

ஆனால் உத்திரவாதமான வருமானம் வந்திருக்குமா என்றால் தெரியாது.
திரையுலகம் தருகிற வாய்ப்புகளைப் பற்றிக்கொண்டு அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
அந்த ஒரு மகிழ்ச்சி எனக்கு இருக்கிறது.
திரையுலகில் இரண்டு வாய்ப்புகள் உண்டு, பத்து பேருக்கு நாம் பயன்பட வேண்டும் அல்லது பத்து பேரை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதில் நான் முதல் வாய்ப்பை எடுத்துக் கொண்டேன்.
பத்து பேரை நான் பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்குத் தனியாக நான் வளரவில்லை.
அதிலிருந்து அனுபவங்கள் கிடைத்தன அதிலிருந்து எனக்கு சில வளர்ச்சி நிலைகளும் வந்தன.
இதுவரை பணியாற்றிய படங்கள்?
இதுவரை சுமார் 100 பிரைவேட் ஆல்பங்கள் எழுதி இருக்கிறேன்.
கே ஜி எஃப் -2 படத்திலும் எனது பங்களிப்பு இருந்தது.
‘விஜயானந்த் ‘பட வாய்ப்பு எப்படி?
நான் தமிழ்ப் படங்கள் மட்டும் இல்லாமல் மொழி மாற்றுப்படங்கள் குறிப்பாக பான் இந்தியா படங்களிலும் பணியாற்றி இருக்கிறேன்.
அதற்கான இடத்தை அளித்தது இயக்குநர்தான்.
இதில் இருக்கும் நான் எழுதிய ‘காளிதாசன் சாகுந்தலா ‘பாடல் எனக்கு மிகவும் பிடித்தது .
தமிழ் மொழி தெரியாதவர்கள் கூட அதன் சாரம் அறிந்து கேட்டுப் பாராட்டுகிறார்கள்.
சொன்னால் நம்ப மாட்டார்கள்.. கன்னடத்தில் உள்ளவர்கள் தமிழ் மொழியை மிகவும் மதிக்கிறார்கள்.
அதற்கான ஆட்களை வைத்து தமிழில் உள்ளது போல் வசனங்கள் சிறப்பாக வருவதற்கு நான் உதவி செய்தேன்.
‘விஜயானந்த் ‘படத்தில் நீங்கள் எழுதியதில்பிடித்த வசனங்கள் ?
“நடு முதுகுத் தண்டு வளைய உழைப்பவனோட நடு வீட்டுல லட்சுமி வாசம் செய்வா!”
“எவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேனும் உழைக்காம உட்காந்துட்டா ஒரு பிச்சைக்காரன் தான்!”
“நான் மலையேறுறது நான் இந்த உலகத்த பாக்கணுங்குறதுக்காக.
ஆனா அதிர்ஷ்டத்தாலயும் நல்ல வழிகாட்டியோட ஒத்துழைப்பாலயும் நாம சில படிகள் ஏறுனாலும் சிகரம் ஏறணும்னா நேர்மையும் கடினமான உழைப்பும் தான் தேவைப்படுது”.
சினிமாவில் வசனகர்த்தாவுக்கான இன்றைய இடம் என்ன?
வசனங்கள் பேசப்பட்டு பல காலங்கள் ஆகிவிட்டன.
அந்த வெற்றிடங்களை நிரப்ப ஆக்கப்பூர்வமான அனுபவ சாலிகள் நம் துறைக்கு அதிகம் தேவை.கதையின், பாத்திரங்களின், மொழிக்குப் பொருத்தமாக எழுதக்கூடிய வசனகர்த்தா இன்றைக்கும் தேவை .அதற்கு தகுதியானவர்களுக்கு இங்கே நிச்சயமாக இடம் உண்டு.அந்த இடத்திற்கு உரிய மரியாதையும இங்கே கிடைக்கும்.
ஒரு வசனகர்த்தாவுக்கு அடிப்படைத் தகுதி என்று எதைக் கூறுவீர்கள்?
இயற்கையாகவே எதார்த்தவாதியாகவும், நல்லது கெட்டதைக் களைந்தெடுத்து மக்கள் மனதை வளப்படுத்த வேண்டும்.
கதை கடவுள் பற்றியதாக இருந்தாலும், கடவுள் அற்றதாக இருந்தாலும், மக்கள் மனதுடன் நேருக்கு நேர் பேச வேண்டும்.
திரையுலகில் உங்களுக்கான வாய்ப்புகள் எப்படி வருகின்றன?
எனக்கு இசைத்துறையில் அடித்தளம் இட்டவர் ஜீவன்.
அதைக் கேட்டு விட்டு டப்பிங் பேச வந்தவர்களுக்கு , வேலை மிகவும் சுலபமாகி விட்டது.
பேச்சுத் தொனி எப்படி இருக்க வேண்டும் என்று தானாகவே புரிந்து கொண்டு அவர்களாகவே பேசி ரீடேக் வாங்காமல் விரைவிலேயே முடித்துக் கொடுத்தார்கள்.
அவர்கள் மூலம் ஒருவர் மூலம் ஒருவராகத் தான் எனக்கு வாய்ப்புகள் வருகின்றன.
இவ்வளவு செய்தும் ஒரு முகம் தெரியாத மனிதராகவே இருக்கிறீர்களே?
அதைப் பற்றி நான் சிந்திக்கவே இல்லை .வேலை வேலை என்று ஓய்வு இல்லாமல் போய்க்கொண்டே இருப்பதால் அதைப் பற்றி நான் யோசிக்க நேரமில்லை.
ஏனென்றால் நம்பிக்கை தானே வாழ்க்கை?
இப்போது பணியாற்றும் படங்கள்?
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’ படத்தில் பாடல் எழுதி உள்ளேன்.
Related posts:
‘விஜயானந்த்’ திரைப்படத்தின் முதல் பாடலுக்கான வீடியோ வெளியீடு.!!
மக்கள் செல்வன் நடிக்கும் ‘மாமனிதன்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
கே பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு; தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த வைரமுத்து!
‘விஜயானந்த்’ ஜந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக டிசம்பர் ஒன்பதாம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.!!
ஒரே ஒரு படம் நடித்து 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை கிடைத்தது: நடிகர் அபிஷேக் பேச்சு!
பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் ‘தேசிய தலைவர்’..!
விஜயானந்த்’ படத்தை தமிழில் வெளியிடுவது பெருமிதமாக உள்ளது’-நெகிழும் கன்னட தயாரிப்பாளர்!!
விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா.!!
நான் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நடித்திருந்தால் நடிகர் விஜய் சேதுபதி கிடைத்திருக்க மாட்டார் பாய்ஸ் நடிகர் மணிகண்டன்.
ஜூலை 19 மகிழ்ச்சியான நாள் அன்றுதான் கடாரம் கொண்டான் ரிலீஸ் ஆகிறது – கமல் ஹாசன் உற்சாகம்

