அஜித்குமாரின் அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் யார் :?

இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துவரும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலை அஜித்குமாரின் அடுத்த திரைப்படத்திற்கான ஆலோசனைகள் நடந்து கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் அஜித்குமார் அடுத்தபடியாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருடன்  இணைய உள்ளாராம். அஜித்குமார்

ஆதித்யா பிர்லா இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் 1997ஆம் வருடம் அஜித்குமாருடன் இனைத்து பகைவன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

2006ஆம் வருடம் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவான திரைப்படம்தான் வரலாறு. என்ற திரைப்படம் அஜித்குமாருக்கு நடிப்பு ரீதியாக  ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. திரைப்படம் வரலாறு இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

தற்போது இந்த கூட்டணி 14 வருடங்களுக்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் உடன் தல அஜித்குமார் இணையப் போவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் வினோத் இயக்கத்தில் தற்போது வலிமை திரைப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் எப்போது வரும் என்று எதிர்பார்ப்பு இருப்பதால் தனது அடுத்த திரைப்படத்தை பற்றி அறிவிப்புகளை ரகசியமாக வைத்திருப்பதாக தெரிகிறது.

ஆனால் தற்போது ரகசியம் உடைந்துவிட்டது இணையத்தில் கசிந்து வருகிறது.

வலிமை திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.

தல அஜித்குமார் ஒரு திரைப்படம் முழுமையாக முடித்த பின் தனது அடுத்த திரைப்படத்தில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்பதை நாமே கணித்துக் கொள்ள வேண்டியதுதான்.

error: Content is protected !!