நடிகர் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் தலைப்பு இதுவாக கூட இருக்கலாம்.?
சென்னை 09 மார்ச் 2022
நடிகர் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் தலைப்பு இதுவாக கூட இருக்கலாம்.?
கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் தலைப்பு தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்குமார் நடித்த ’வலிமை’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பைக் கொடுத்திருந்தாலும் சிலர் பிளஸ் ஆகவும் மைனஸ் ஆகவும் விமர்சனத்தை கொடுத்திருந்தார்கள்.
வலிமை திரைப்படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறது என்று பலவிதமான கருத்துகள் முன் வைக்கப்பட்டது.
இதனால் திரைப்படம் வெளியான இரண்டாவது நாளே இருபது நிமிடங்கள் திரைப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டது.
நல்ல வசூல் செய்திருந்த போதும் திரைப்படத்தைப் பற்றி எதிர்மறையான கருத்து ஏன் வருகிறது என்று நடிகர் அஜித்குமார் மேற்பார்வையில் கண்காணிக்க ஆரம்பித்தார்.
அதன் பலவிதமான குறைகள் எடுத்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தனது அடுத்த திரைப்படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர் நிறுவனத்திற்கே நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
அஜித்குமார் நடிக்கும் அடுத்த திரைப்படத்தையும் இயக்குனர் எச் வினோத் இயக்குகிறார்.
இதற்கான பணிகள் அதி வேகமாக நடந்து வருகிறது.
ஆந்திராவில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணாசாலை போல் பிரமாண்ட செட் போடப்பட்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
திரைப்படத்திற்கு பாரதியாரின் கவிதைகளிலிருந்து ‘வல்லமை’ என்ற தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்
இந்த ஆண்டே ’வல்லமை’ திரைப்படம் வெளியாகும் என்று அஜித்குமார் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.











