எத்தனை காலம்தான் கொரோனா பயத்துடன் வாழ முடியும் சினிமா பணிகளை தொடங்கினார் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்றின் பரவலை தடுக்க நாடெங்கிலும் பொதுமுடக்கம் விடப்பட்டுள்ளது.
இதனால் கடந்த 6 மாதங்களாக திரைப்பட படப்பிடிப்புக்கு அரசு அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் தன் திரைப்பட பணிகளை தொடங்குகிறார் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்.
அட்ரங்கி ரே, பெல்பாட்டம், ரக்ஷா பந்தன் போன்ற திரைப்படங்களை பணிகளை தொடங்கி உள்ளார்.
இது குறித்து பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் கூறியதாவது…
கொரோனா வைரஸ் நோய் தொற்று பயத்துடன் ஆரம்ப காலங்களில் வாழ்ந்தேன்.
ஆனால் எத்தனை காலம்தான் பயத்துடன் வாழ முடியும்.
ஆரம்பத்தில் கொரோனா வைரஸை பற்றி அதிகம் அறியப்படவில்லை. இதனால் நிறைய பயம் இருந்தது.
அது ஒரு நபரைப் பாதிக்கும் விதம் பற்றி அறிந்திருக்கவில்லை.
ஆனால் இப்போது உடலில் நோய் எதிர்ப்பு திறன் இருந்தால், கொரோனாவை வெல்ல முடியும் என்பதை அறிந்துள்ளோம்.
எனவே எங்கள் குழு முழுமைக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து பணிகளை தொடங்கிவிட்டோம்..” என தெரிவித்துள்ளார்.










