கிறிஸ்துவ முறைப்படி நடிகை வனிதா பீட்டர் பால் திருமணம் மிக சிறப்பாக இன்று நடந்தது.

இவர் தமிழ் திரைப்பட உலகிற்கு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் தளபதி விஜய்க்கு ஜோடியாக அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வந்தார்.விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை வனிதா பிரபலமானவர்.தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.இந்நிலையில் நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை ஜூன் 27ஆம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்தார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் நடிகை வனிதாவின் வீட்டிலேயே அவருடைய 3வது திருமணத்தை பீட்டர் பால்நடிகை வனிதாவின் திருமணத்தை மிக எளிமையான முறையில் இன்று சிறப்பாக நடைபெற்றது.கிறிஸ்துவ முறைப்படி காதலர் பீட்டர் பாலை கரம் பிடித்த நடிகை வனிதாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தனது 19 வயதிலேயே நடிகர் ஆகாஷ் என்பவரை முதல் திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதாவிற்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.அதன் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவர் ஆகாஷ் என்பவரை நடிகை வனிதா பிரிந்தார்.

நடிகை வனிதா ஆந்திராவை சேர்ந்த ஆனந்த் ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார்.

அவருடன் ஒரு பெண் பிள்ளையை பெற்றெடுத்த நடிகை வனிதா, அதன் பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

மூத்த மகன் ஸ்ரீஹரி அப்பாவுடன் வசித்து வர மற்ற இரண்டு மகள்களுடன் நடிகை வனிதா தனியாக வசித்து வந்தார்.

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரபான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர் நடிகை வனிதா.

அதன் பின்னர் குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று வெற்றி வாகை சூடினார்.

தற்போது யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை 3வது முறையாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியானது.

மகள்களின் முழு சம்மதத்துடன் தனது பெற்றோரின் திருமண நாளான இன்று கிறிஸ்துவ முறைப்படி பீட்டர் பாலை கரம் பிடித்துள்ளார்.

வனிதா கோர்ட்டி சூட்டில் அசத்தலாக நின்றிருந்த பீட்டர் பால் வெள்ளை நிற உடையில் தேவதை போல் வந்து நின்ற நடிகை வனிதாவை பார்த்து சொக்கி போயிருப்பார்.

லாக்டவுன் காரணமாக நடிகை வனிதாவின் வீட்டில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு திருமண பந்தத்தில் இணைந்தனர்.

சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் வனிதாவின் திருமண புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

இருவரும் மோதிரம் மாற்றியக் கையோடு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து கொண்டனர்.

இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!