சுய ஊரடங்கு உத்தரவை மீறாமல் மாஸ்க் அணிந்து கொண்டு திருமணம் செய்த தம்பதிகளை கேப்டன் விஜயகாந்த் ஆசிர்வாதம் செய்தார்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இன்று மார்ச் 22ஆம் தேதி சுய ஊரடங்கு உத்தரவிற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி நாடு முழுவதும் இன்று மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை.

பஸ்கள் ரயில்கள் ஆட்டோக்கள் உள்ளிட்ட எந்த வாகனமும் ஓடவில்லை.

அதன் காரணமாக சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

கடைகள் வணிக வளாகங்கள் அனைத்துமே மூடப்பட்டன.

ஊரடங்கு உத்தரவால் ஒரு சில குடும்பங்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர் ஒருவருக்கு இன்று பிரமாண்டமாக நடைபெற்ற இருந்த திருமணம் எளிய முறையில் கேப்டன் விஜயகாந்தின் வீட்டில் நடைபெற்றது.

இதற்காக கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு மணமக்களை மணமகன் விமல் மணமகள் கமலி ஆகியோரை அழைத்து வரப்பட்டனர்.

மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் கேப்டன் விஜயகாந்த் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்று கூட்டம் கூடாமல் திருமணம் எளிய முறையில் நடந்து முடிந்தது.

மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை ஏற்று மாஸ் சானிடைசர் போன்ற பாதுகாப்புக் கவசங்கள் அணிந்து எளிய முறையில் நடைபெற்ற திருமணத்திற்கு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தாலி எடுத்து கொடுத்தார்.

பின்னர் மணமக்கள் இருவரும் கேப்டன் விஜயகாந்த் அவர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டனர்.

error: Content is protected !!