சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லத்தில் நவராத்திரி கொண்டாட்டம் – பிரபலங்கள் பங்கேற்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்களான சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் இல்லத்தில் நவராத்திரி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக தங்களின் சிறுவயது தோழிகளான, நடிகர் விஜயகுமாரின் மகளும் இயக்குநர் ஹரியின் மனைவியுமான பிரித்தாவையும் நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியான வந்தனாவையும் அவர்கள் நவராத்தியின் 6வது நாளில் தங்களின் வீட்டிற்கு அழைத்து கொண்டாடி உள்ளனர். இதற்கான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.











