சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உயிருக்கு ஆபத்து; பாதுகாப்பு அளிக்க ரசிகர்கள் வேண்டுகோள்*

துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் ராமர் முதல் பெரியார் வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியிருத்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதாலோ என்னவோ உடனே மிகவும் பரபரப்பாகி அதுவே சர்ச்சையானது.

அவரின் கருத்துக்கு பெரியார் ஆதரவாளர்கள் கண்டன தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். மேலும் காவல்துறையிலும் புகார் அளித்தனர்.

இந்த போராட்டத்தின் போது ரஜினிகாந்த்க்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சிலர் பேசியிருந்தனர்.

இது குறித்த ஆதாரத்துடன் மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடம் ரஜினி மக்கள் மன்றத்தினர் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த்க்கு பாதுகாப்பு வழங்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். கோவை மற்றும் விழுப்புரம் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகளும், அந்தந்த மாவட்ட கமி‌ஷனர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

ஏற்கெனவே தமிழக அரசு சார்பில் ரஜினிகாந்த் வீட்டிற்கு விசே‌ஷ பாதுகாப்பு அளித்துள்ளது.

ரஜினிகாந்த்க்கு எதிரான போராட்டத்தால், அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஏற்கெனவே உள்துறை அமைச்சகத்திற்கு உளவுத்துறை ரகசிய அறிக்கை அளித்துள்ளதாம்.

error: Content is protected !!