திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் படம் ரிலீசுக்கு முன்பே திரைப்படத்தை பார்ப்பது என்ன காரணம் அரசியல் பின்னணி ஏதாவது உள்ளதா?

புரட்சி இயக்குனர் ராஜு முருகன் ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் அவர்கள் தயாரிப்பில் குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்தான் “ஜிப்ஸி”. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவா. நதாஷா சிங், சன்னி வியோன், லால் ஜோஸ், சுஷீலா ராமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் சந்தோஷ் நாராயணன், சுஷீலா ராமன்.

நாடு முழுவதும் குதிரையுடன் பயணம் செய்யும் ஒரு இளைஞனின் காதல் கதையைக் கொண்டு உருவாகி உள்ளது. இந்த திரைப்படம் வரும் மார்ச் 6ம் தேதி ரிலீசாகவுள்ளது.

இந்த திரைப்படத்தை நேற்று ஒரு முக்கியமான பிரிவியூ தியேட்டரில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அவருடன் முன்னாள் அமைச்சர்கள்
துரைமுருகன், E. V. வேலு, N. பெரியசாமி ஆகிய மூன்று அமைச்சர்களும் நேரில் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்காக ஸ்பெஷலாக பிரிவியூ ஷோ ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் திரடீரென ரிலீசுக்கு முன்பே இந்த திரைப்படத்தை பார்க்கும் காரணம் என்ன என்றும் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏதும் இந்த “ஜிப்ஸி”. திரைப்படத்தில் இருக்கின்றனவா என்றும் தெரியவில்லை.

அவர்கள் இந்த திரைப்படத்தை முழுமையாக பார்த்துவிட்டு வெளியில் வந்தவுடன் இந்த “ஜிப்ஸி”. திரைப்படம் பற்றிய அவர்களுடைய கருத்துக்கள் வெளியிடுவார்கள்.

அதேபோல்தான் திரெளபதி திரைப்படத்தை பா.ம.க கட்சி தலைவர் டாக்டர் இ. ராமதாஸ்
எச் ராஜா அர்ஜுன் சம்பத் அனைவரும் பார்த்துவிட்டு அந்த படத்தை பத்தி கருத்துக்களை வெளியிட்டனர் ஆகையால் அந்தத் திரைப்படம் மிக பெரிய வெற்றி படமாக அமையப்பெற்றுள்ளது.

error: Content is protected !!