நடிகர் ரன்பிர் கபூரின் தந்தை நடிகர் ரிஷி கபூர் காலமானார்.

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக பலி பலரை அச்சுறுத்தி வரும் நிலையில் மறுப்பக்கம் பாலிவுட் நடிகர்களின் இயற்கை மரணம் திரையுலகில் அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

நேற்று பிரபல நடிகர் இர்பான் கான் கேன்சர் நோயால் மரணமடைந்தார்.

அந்த சோகம் மறைவதற்குள் புகழ்பெற்ற நடிகர் ரிஷி கபூர் தனது 66 ம் வயதில் மரணம் அடைந்துள்ளார் என்ற செய்தி தற்போது வந்துள்ளது.

இந்த செய்தியை நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு “நடிகர் ரிஷி கபூர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார். இந்த செய்தி என்னை முற்றிலும் அழித்து விட்டது” என தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் ஹிந்தி நடிகரான ராஜ் கபூரின் இரண்டாவது மகனும், நடிகர் ரன்பிர் கபூரின் தந்தையுமானவர் நடிகர் ரிஷி கபூர்.

கடந்த 2018- ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த இவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இதையடுத்து கடந்த 2019 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக ரிஷி கபூர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருக்கு நீத்து கபூர் என்ற மனைவியும், ரிதிமா என்கிற மகளும், ரன்பிர் கபூர் என்ற மகனும் உள்ளனர்.

சில தகவல்கள்…

100  படங்களுக்கு மேல் நடித்தவர்..!

* இந்திப் படவுலகின் மெகா புரொட்யூஸர்-டைரக்டர் ராஜ் கபூரின் மகன் இவர்.

‘ மேரா நாம் ஜோக்கர் ‘ படத்தில் இளம் வயது ராஜ் கபூராக நடித்து 1970-ம் வருடம் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வாங்கியவர்.

* 1973-ம் வருடம் ‘ பாபி ‘ மெகா ஹிட் படத்தில் ஹீரோவாக டிம்பிள் கபாடியா ஜோடியாக  ரா‌ஜ்கபூரால் அறிமுகப்படுத்தப்பட்டார்.

* இவருடைய மனைவி நடிகை நீட்டு சிங்-டன் 12 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

* ரிஷிகபூரின் மகன் தற்போதைய இந்திப் படவுலகில் ‘ லீடிங் ஸ்டார் ‘ ரன்பீர் கபூர்..!

error: Content is protected !!