மார்ச் 12 இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை தளபதிக்கு தொடரும் டார்ச்சர்..!

இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த திரைப்படம் ‘பிகில்’.

இந்த திரைப்படத்திற்காக பெற்ற சம்பளம் குறித்தும், சொத்து மதிப்புகள் குறித்தும், கடந்த பிப்ரவரி., 5ம் தேதி, நடிகர் தளபதி விஜய் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இப்படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ்., வீடு மற்றும் தியேட்டர்களிலும், இப்படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்புச்செழியன் அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மூவருக்கும் தனித்தனியாக சம்மன் அனுப்பி அதிகாரிகள் விசாரித்தனர்.

இரு தினங்களுக்கு முன் ‛மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரான லலித்குமார் வீட்டில், வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று மார்ச் 12 தளபதி விஜய்யின் பனையூர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

error: Content is protected !!