மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீடு விழாவில் தளபதி விஜய் தல அஜித்குமார் பற்றி பேசியபோது தெறிக்க’விட்ட தல அஜித்குமார் ரசிகர்கள்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அருஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் தளபதி விஜய் பேசியபோது ‘தெறிக்க’விட்ட தல அஜித்குமார் ரசிகர்கள் எந்த ஒரு விழாவில் தல அஜித்குமார் குறித்து யார் பேசினாலும் கைதட்டலும் கரகோஷமும் விண்ணை பிளக்கும் என்பது தெரிந்ததே.
அதற்கு தளபதி விஜய் திரைப்பட விழாவும் விதிவிலக்கல்ல என்பது நேற்று நிரூபணம் ஆனது.
நேற்று நடைபெற்ற ‘மாஸ்டர்’ இசை வெளியீடு விழாவில் தளபதி விஜய் பேசியபோது, அவர் இந்த விழாவுக்கு கோட், சூட் அணிந்து வந்தது குறித்து பேசினார்.
தளபதி விஜய் அவர் பேசியதாவது:
ஒவ்வொரு இசை வெளியீடு விழாவிற்கும் நான் சுமாராக டிரஸ் செய்து கொண்டு போவதாக கூறிய என்னுடைய காஸ்டியூம் டிசைனர் பல்லவி, இந்த விழாவுக்கு கோட், சூட்டை ஏற்பாடு செய்தார்.
சரி நம்ம நண்பர் தல அஜித்குமார் மாதிரி நாமும் கோட், சூட் போடுவோமே என்று இந்த இசை வெளியீடு விழாவுக்கு நான் கோட், சூட் அணிந்து வந்தேன்’ என்று தளபதி விஜய் கூறினார்.
அவர் தல அஜித்குமார் என்று கூறிய அடுத்த நொடி, அரங்கத்தில் கரகோஷம் விண்ணை பிளந்தது.
அந்த கரகோஷமும் கைதட்டல் ஒலியும் அடங்க ஒருசில நிமிடங்கள் ஆகியது.
தொகுப்பாளினி பாவனா அடுத்த கேள்வியை கேட்க விடாமல் கரகோஷம் நீண்டுகொண்டே இருந்ததால் அவரே அதிர்ந்து போனார்.
தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தல அஜித்குமார் பெயரை சொன்னதும் கிடைத்த வரவேற்பை பார்த்ததும் அனைவரும் இன்ப அதிர்ச்சி ஆனார்கள்.
ஆனாலும் தல அஜித்குமாரை தனது நண்பர் என்று தளபதி விஜய் கூறியது குறித்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது











