Tuesday, July 14
Shadow

இந்தியாவின் கடைசி முடிசூட்டபட்ட மன்னன் சிங்கம்பட்டி ராஜா மறைவு – நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல்.

இந்தியாவின் கடைசி முடிசூட்டபட்ட மன்னன் திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் டி.என்.எஸ்.முருகதாஸ் திர்த்தபதி (89). முதுமையால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் உள்ளது.

சிங்கப்பட்டி ஜமீன். கி.பி 1100ல் உருவான இந்த சிங்கப்பட்டி ஜமீன் தமிழ்நாட்டில் 72 பாளையங்களுள் சிங்கப்பட்டியும் ஒன்றாக இருந்தது.

அதாவது, காலம்காமலாக இருந்த அரசர் – ஜமீன் முறை, வெள்ளையர் ஆட்சி காலத்திலும் தொடர்ந்தது. பெரும் அதிகாரத்தை தங்கள் வசம் வைத்திருந்த வெள்ளைய ஆட்சியாளர்கள், மன்னர்களை தங்களுக்கு கப்பம் கட்டுபவர்களாக அடக்கி வைத்திருந்தனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1950களில், மன்னாரட்சி, சட்டப்படி ஒழிக்கப்பட்டது.

அதற்கு பிறகு சில வருடங்கள் முன்பு, மிக சிறு வயதில், மன்னராக முடிசூட்டப்பட்டவர் ஜமீன்தார் டி.என்.எஸ்.முருகதாஸ் திர்த்தபதி.

ஆகவே இவரே இந்தியாவில் முடிசூட்டப்பட்ட மன்னர்களில் கடைசி மன்னர் ஆவார்.

இவருக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜமீன்தார் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ள “சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா.  அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” என பதிவிட்டுள்ளார்.

“சீமராஜா” என்னும் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் “சிங்கம்பட்டி சீமராஜா” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா🙏 அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.