கனா’ திரைப்படத்தை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்படுகிறதா நடிகர் சிவகார்த்திகேயன்.?

நடிகர் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பின்னணி பாடகர் நடிகர் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் ‘கனா’.

இந்த திரைப்படத்தை பெண்கள் கிரிக்கெட்டை & விவசாயத்தை மையமாக வைத்து எடுத்திருந்தார்.

சத்யராஜ் & ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தனர்.

தமிழில் சூப்பர் ஹிட்டான இதை தெலுங்கில் ‘கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி’ என்ற பெயரில் ரீமேக் செய்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்தியிலும் ‘கனா’ படம் ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான ‘சோக்டு (Choked)’ வெப் சீரிஸ் படத்தை பார்த்துள்ளார் சிவகார்த்திகேயன்.

அதில் ‘சோக்டு’ பார்த்தேன். வாழ்த்துகள் சையாமி கெர்.. உங்களை விரைவில் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படமொன்றில் பார்க்க ஆவலாக உள்ளேன்” என தெரிவித்திருந்தார்.

அதற்கு சையாமி கெர், “நன்றி நடிகர் சிவகார்த்திகேயன் சார். உங்கள் கிரிக்கெட் படத்துக்கு ஆவலாக காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர்களின் ட்வீட்களை பார்த்தால் ‘கனா’ படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக எதிர்பார்க்கலாம்.

error: Content is protected !!